ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 10 – ஸம்ஸ்க்ருத கூட்டெழுத்துக்கள்

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - दशमः पाठः - संयुक्ताक्षराणि

நாம் கற்கப் போவது.......

இதுவரை நாம் கற்றது....

  • வ்யஞ்சனங்கள் (மெய்யெழுத்துக்கள்) ஸ்வரங்களின் துணையுடனே உச்சரிக்கப்படுகின்றன,
  • உயிர் மெய்யெழுத்துக்களில் ஸ்வரக் குறிகள். मात्राः

இப்பாடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வ்யஞ்சனங்கள் ஸ்வரத்துடன் இணைந்து உண்டாகும் ஸம்ஸ்க்ருத கூட்டெழுத்துக்களைக் கற்கலாம். இரண்டு அல்லது மேற்பட்ட வ்யஞ்சனங்கள் இணைந்து ஸம்யுக்த வ்யஞ்சனங்கள் உண்டாகின்றன. ஸம்யுக்த வ்யஞ்சனங்கள் ஸ்வரங்களுடன் இணைந்து ஒலிக்கக்கூடிய ஸம்யுக்த அக்ஷரங்கள் உருவாகின்றன.

வ்யஞ்சனம் + வ்யஞ்சனம் = ஸம்யுக்த வ்யஞ்சனம்
ஸம்யுக்த வ்யஞ்சனம் + ஸ்வரம் = ஸம்யுக்தாக்ஷரம்.
व्यञ्जनम् + व्यञ्जनम् = संयुक्तवर्णः
संयुक्तवर्णः + स्वरः = संयुक्ताक्षरम्
क् + क् = क्क्     कु + क् + क् + उ + ड् + अः = कुक्कुड

ஸம்யுக்தாக்ஷரங்களை எழுதப் பொதுவான விதிமுறைகளைக் கீழேயுள்ள பட்டியலில் காணலாம். முதல் எழுத்தைப் பொறுத்து எவ்வாறு இணைந்த வடிவங்கள் அமைகின்றன என்பதை எடுத்துக்காட்டுகளுடன் காட்டப்பட்டுள்ளன. சொற்களின் அர்த்தம் குறிப்பாக தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. சொற்களின் பொருள் மற்றும் முறையான பிரயோகங்கள் பின் வரும் பாடங்களில் காணலாம். எடுத்துக்காட்டுகளை விரிவுப் படுத்திக் காண க்ளிக் செய்து ஒலியையும் கேட்கலாம். படித்துக் கொண்டே எழுதப் பழகுங்கள்.

கூட்டெழுத்துக்களை எழுதப் பொது விதிகள்
முதல் வ்யஞ்சனம்ஸம்யுக்தாக்ஷரம்சொல்லில் ஸம்யுக்தாக்ஷரம்குறிப்பு
क्, फ्क् + क = क्ककुक्कुडः (சேவல்)முதலெழுத்தின் இறுதிப் பகுதி எழுதப்படுவதில்லை.
क् + त = क्तवक्ता (பேசுபவர்)
ख् , घ्, च् छ, ज, झ, ञ, ण, त, थ, ध,न, प, ब, भ, म, ल, व, स, श, ष.ख् + य = ख्यमुख्य (முக்கியம்)முதலெழுத்தின் செங்குத்துக்கோடு எழுதப்படுவதில்லை
ध् + य = ध्यश्लाघ्यम् (சிறந்தது)
च् + च = च्चउच्चैः (உரக்க)
ज् + व = ज्वज्वरः (ஜுரம்)
ण् + ड = ण्डखण्डः (துண்டு)
त् + थ = त्थउत्थानम् (எழுதல்)
थ् + व = थ्वपृथ्वी (பூமி)
ध् + म = ध्मदध्मौ (ஊதுதல் வினைச்சொல்)
न् + द = न्दचन्दनम् (சந்தனம்)
प् + त = प्ततप्त (சூடு)
ब् + ज = ब्जकुब्ज (வளைந்த)
भ् + य = भ्यआरभ्य (தொடங்கி)
म् + ब = म्बअम्बा (அம்மா)
ल् +ल = ल्लपल्लवी (துளிர், முளை)
व् + य = व्यकाव्यम् (காவியம்)
स् + त = स्तस्तरः (நிலை)
श् + य = श्यपश्य (பார்)
ष् + ण= ष्णउष्णम् ((வெப்பம்)
क, ङ, ट, ठ, द, ड, ढक् + व = क्व पक्वम् (பக்குவம்)இரண்டாவது எழுத்து முதல் வ்யஞ்சனத்தின் கீழ் எழுதப்படுகிறது
ङ् + क = ङ्कपङ्कजम् (தாமரை)
ट् + ट = ट्टअट्टालिका (மாளிகை)
द् + ध = द्ध बुद्धिः (புத்தி)
र् + क = र्कअर्कः (ரியன்)र् ஒரு கொக்கிப் போல் தொடரும் எழுத்தின் மேல் இணைகிறது.
र् + श = र्शस्पर्श (தொடு)
र् + व = र्वपर्वत: (மலை)
ह् + र = ह्रह्रस्व (குறுகிய)ह् வை தொடரும் எழுத்து அதன் கீழ் இணைகிறது. அல்லது ह् வின் ஒரு பகுதியுடன் இணைகிறது.
ह् + न = ह्नवह्निः (நெருப்பு)
ह् + म = ह्मब्रह्मा (ப்ரம்ஹா)

இப்பொழுது ஒவ்வொரு எழுத்துக்குறிய கூட்டமைப்புக்களை விரிவாக காணலாம்.

Sanskrit Compound Letters - संयुक्ताक्षराणि
1. - + क2. - + ख3. - + ग
क् + क = क्क कुक्कुडः (சேவல்)क् + ख = क्ख चक्ख्नतुःग् + ग = ग्ग गुग्गुलः
ङ् + क = ङ्क अङ्कुरः (தளிர், முளை)ङ् + ख = ङ्ख श्रृङ्खला (சங்கிலித் தொடர்)ङ् + ग = ङ्ग अङ्गुली (விரல்)
च् + क = च्कत् + ख = त्ख उत्खननम् (தோண்டுதல்)ड् + ग = ड्ग खड्गः (வாள்)
ट् + क = ट्क षट्कः (ஆறு)स् + ख = स्ख स्खलनम् (தடுமாற்றம்)द् + ग = द्ग मुद्गरः (சுத்தி)
त् + क = त्क फूत्कारः (விசும்புதல்) (Six)र् + ग = र्ग मार्गः (வழி)
र् + क = र्क अर्कः (சூரியன்)5. - + चल् + ग = ल्ग फाल्गुनः
ल् + क = ल्क शुल्कः (விலை)च् + च = च्च उच्चैः (உரக்க)
ष् + क = ष्क चतुष्कोणः (சதுர்கோணம்)ञ् + च = ञ्च आकुञ्चनम् (வளைதல்)6. - + छ
स् + = स्क स्कन्धः (தோள்)र् + च = र्च अर्चकः (அர்ச்சகர்)च् + छ = च्छ इच्छा (விருப்பம்)
4. - + घश् + च = श्च पश्चात् (பிறகு)ञ् + छ = ञ्छ वाञ्छा (வாஞ்சை)
ङ् + घ = ङ्घ सङ्घः (சங்கம்)र् + छ = र्छ मूर्छा (மூர்ச்சை)
द् + घ = द्घ उद्घाटनम् (திறப்பு)8. - + झ
र् + घ = र्घ महार्घः (விலையுயர்ந்த)ज् + झ = ज्झ उज्झति (தப்பித்தல் வினைச்சொல்)9 . - + ञ
7. - + जञ् + झ = ञ्झ झञ्झावातः (கொடுங்காற்று)च् + ञ = च्ञ याच्ञा (வேண்டுதல்)
ज् + ज = ज्ज सज्जः ( தயாராக)र् + झ = र्झ निर्झरः (முதுமையில்லாமல்)ज् + ञ = ज्ञ ज्ञानम् (ஞானம்)
ञ् + ज = ञ्ज अञ्जनम् (மை)
ड् + ज = ड्ज षड्ज (ஆறாவது ஸ்வரம்)11. - + ठ12. - + ड
ब् + ज = ब्ज कुब्ज (வளைந்த)ठ् + ठ = ठ्ठ विठ्ठलः ड् + ड = ड्ड उड्डयनम् (பறத்தல்)
र् + ज = र्ज गर्जनम् (கர்ஜனை)ष् + ठ = ष्ठ षष्ठः (ஆறாவது)ण् + ड = ण्ड गण्डः (பட்டன்)
10. - + टण् + ठ = ण्ठ उत्कण्ठा (கவலை)
ट् + ट = ट्ट अट्टालिका (மாளிகை)15. - + त
ण् + ट = ण्ट घण्टा (மணி)14. - + णक् + त = क्त सूक्तिः ( இறை புகழ்)
प् + ट = प्ट आप्टे ण् + ण = ण्ण विषण्णः (துக்கமுடையவன்)त् + त = त्त उत्तापः (உற்சாகம்)
ष् + ट = ष्ट यष्टिः (தடி)र् + ण = र्ण ऊर्णम् (கம்பளி)न् + त = न्त वृन्तम् (காம்பு)
13. - + ढष् + ण = ष्ण उष्णम् (வெப்பம்)प् + त = प्त सप्ताहः (வாரம்)
ड् + ढ = ड्ढ शिण्ड्ढिर् + त = र्त गर्तः (அரியணை)
ण् + ढ = ण्ढ षण्ढः (அலி)17. - + दस् + त = स्त पुस्तकम् (புத்தகம்)
16. - + थद् + द = द्द उद्दाम (வரம்பற்ற)
त् + थ = त्थ उत्थानम् (எழதல்)न् + द = न्द चन्दनम् (சந்தனம்)18. - + ध
न् + थ = न्थ मन्थानम् (கடைதல்)ब् + द = ब्द अब्दः (மேகம்)ग् + ध = ग्ध दुग्धम् (பால்)
र् + थ = र्थ अर्थः (பொருள், செல்வம்)र् + द = र्द कूर्दते (குதித்தல் வினைச்சொல்)द् + ध = द्ध शुद्धः (தூய்மையான)
स् + थ = स्थ संस्थानम् (மாகாணம்)न् + ध = न्ध सुगन्धः (நறுமணம்)
19. - + न20. - + पब् + ध = ब्ध क्षुब्धः (கோபமுள்ள)
क् + न = क्न शक्नोति (இயலும் வினைச்சொல்)ट् + प = ट्प षट्पदः (ஆறுகாலி)र् + ध = र्ध अर्धम् (அரை)
ख् + न = ख्न चख्नतुःत् + प = त्प उत्पलम् (அல்லி)
त् + न = त्न रत्नम् (ரத்தினம்)प् + प = प्प पिप्पली (நீண்ட மிளகு)21. - + फ
ध् + न = ध्न बध्नाति (கட்டுதல் வினைச்சொல்)म् + प = म्प पम्पा (பம்பா)त् + फ = त्फ उत्फ़णः (படமெடுத்த)
न् + न = न्न अन्नम् (அன்னம்)र् + प = र्प सर्पः ((பாம்பு)म् + फ = म्फ गुम्फः (கோர்க்கப்பட்ட அணிகலன்)
प् + न = प्न आप्नोति (பெறுதல் வினைச்சொல்)ल् + प = ल्प अल्पाहारः (சிற்றுண்டி)ल् + फ = ल्फ गुल्फः (கணுக்கால்)
म् + न = म्न आम्नायः (வேதங்கள்)स् + प = स्प स्पन्दनम् (துடிப்பு)स् + फ = स्फ स्फटिकम् (ஸ்படிகம்)
र् + ण = र्ण स्वर्णम् (தங்கம்)ष् + प = ष्प पुष्पम् (புஷ்பம்)
स् + न = स्न स्नानम् (குளியல்)24. - + म
ह् + न = ह्न चिह्नम् (சின்னம்)23. - + भक् + म = क्म रुक्मिणी (ருக்மிணீ)
22. - + बग् + भ = ग्भ प्राग्भवनम् (முன்பிருந்த வீடு)च् + म = च्म वच्मि (பேசுதல் வினைச்சொல்)
द् + ब = द्ब उद्बाहुः ((நீட்டிய கையுடன்)द् + भ = द्भ सद्भावना (நல்லெண்ணம்l)ज् + म = ज्म
म् + ब = म्ब लम्बः (நீண்ட)ब् + भ = ब्भ अब्भक्षः (நீர் பாம்பு)त् + म = त्म आत्मा (ஆத்மா)
र् + ब = र्ब दुर्बलः (பலமற்ற)म् + भ = म्भ स्तम्भः (தூண்)द् + म = द्म पद्म (தாமரையையொத்த)
25. - + यर + भ = र्भ अर्भकः (முட்டாள்)ध् + म = ध्म दध्मौ (ஊதுதல் வினைச்சொல்)
क् + य = क्य वाक्यम् (வாக்கியம்)ल् + भ = ल्भ प्रगल्भः (துணிவுடன்))न् + म = न्म जन्म (பிறப்பு)
ख् + य = ख्य आख्या (அழைக்கப்படுதல்)प् + म = प्म पाप्मन् (பாவத்தையுடைய, மகிழ்ச்சியற்ற)
ग् + य = ग्य भाग्यम् (பாக்கியம்)26. - + रम् + म = म्म मम्मटः
घ् + य = घ्य श्लाघ्यम् (சிறந்தது)क् + र = क्र चक्रम् (சக்ரம்)र् + म = र्म धर्मः (தர்மம்)
च् + य = च्य वाच्यम् (கூற வேண்டியது)ग् + र = अग्रम् (முதல்)ल् + म = ल्म गुल्मः (மண்ணீரல்)
ज् + य = ज्य वाणिज्यम् (வாணிபம்)घ् + र = घ्र व्याघ्रः (புலி)श् + म = आश्म (கரடுமுரடான))
ट् + य = ट्य अकाट्यम् (Irrefutable)छ् + र = छ्र कृच्छ्रम् கடினமான)ष् + म = ष्म ऊष्मः (வேனல்)
ठ् + य = ठ्य पाठ्यम् (கற்பிக்க வேண்டியது)ज् + र = ज्र वज्रम् (வைரம்)स् + म = स्म अस्मिता (ஆணவம்)
ड् + य = ड्य पीड्यमानम् (கொடுமை தரக்கூடிய)ट् + र = ट्र ऊष्ट्रः (ஒட்டகம்)ह् + म = ह्म ब्राह्मणः (ப்ராம்ஹணன்)
ढ् + य = ढ्य ओढ्यम् ड् + र = ड्र ओड्रम्
ण् + य = ण्य पण्यम् (பண்டம்)ढ् + र = ढ्र मेढ्रकः (ஆட்டு கடா)27. - + ल
त् + य = त्य सत्यम् (உண்மை)त् + र = त्र छत्रम् (குடை)क् + ल = क्ल शुक्लः (வெளுத்த)
थ् + य = थ्य तथ्यम् (உண்மை நிலை)द् + र = द्र निद्रा (உறக்கம்)प् + ल = प्ल प्लावनम् (நிறைந்து வழிதல்)
द् + य = द्य अद्य (இன்று)ध् + र = ध्र गृध्रः (கழுகு)म् + ल = म्ल आम्लम् (நெல்லிக்காய்)
ध् + य = ध्य बाध्यः (கட்டுப்பட்ட)प् + र = प्र प्रथमः (முதல்)श् + ल = श्ल श्लाग्यम् (சிறந்த)
न् + य = न्य अन्य (அன்னிய)ब् + र = ब्र ब्रह्म(ப்ரம்ஹா)ह् + ल = ह्ल आह्लादः (மகிழ்ச்சி)
प् + य = प्य गोप्यम् (ரஹஸ்யம்)भ् + र = भ्र शुभ्रः (தெளிவு, ஒளி பொருந்திய)
भ् + य = आरभ्य (தொடங்கி)म् + र = म्र आम्रम् (மாம்பழம்)30. - + ष
म् + य = म्य रम्यम् (ரம்யம்)व् + र = व्रणः (வடு, இழுக்கு)क् + ष = क्ष ईक्षणम् (பார்வை)
य् + य = य्य विगणय्य (கருத்தில் கொண்டு)श् + र = श्र श्रमः (முயற்சி)ट् + ष = ट्ष षट्षष्टिः (அறுபத்தியாறு)
र् + य = र्य कार्यम् (செயல்)स् + र = स्र सहस्रम् (ஆயிரம்)र् + ष = र्ष हर्षः (மகிழ்ச்சி)
व् + य = व्य काव्यम् (காவியம்)स् + त् + र = स्त्र वस्त्रम् (ஆடை)
श् + य = श्य अवश्यम् (அவசியம்)ह् + र = ह्र ह्रदः (ஒலி)
ष् + य = ष्य प्रेष्यम् (கட்டளை)
स् + य = स्य औरस्यः (சொந்தமானது)29. - + श
ह् + य = ह्य ऐतिह्यम् (ஐதீகம்)र् + श = र्श अर्शः (ஒரு வகை நோய்)
28. - + व
क् + व = क्व पक्वम्(பக்குவம்)31. - + स Conjuncts with more than one consonant
ज् + व = ज्व ऋज्वी (நேர்மையான)क् + स = क्स वाक्सारः (நாவன்மைक् + ख् + न = क्ख्न चक्ख्नतुः
त् + व = त्व सत्वरम् (உடனடியாக)त् + स = त्स उत्साहः (உற்சாகம்)ण् + ड् + ढ = ण्ड्ढ शिण्ड्ढिः
द् + व = द्व द्वारम् (நுழைவு)प् + स = प्स जुगुप्सा (வெறுப்பு)स् + त् + र = स्त्र वस्त्रम् (ஆடை)
ध् + व = ध्व अध्वरः (வேள்வி)स् + स = स्स दुस्सहः (பொறுக்கமுடியாத)च् + छ् + र = च्छ्र कृच्छ्रम् (துன்பம்)
न् + व = न्व सुधन्वान् + द् + र = न्द्र इन्द्रः (இந்திரன்)
प् + व + प्व प्वादिः32. - + हस् + त् + र = स्त्र स्त्री (பெண்)
र् + व = र्व गर्वः (கர்வம்)र् + ह = र्ह एतीर्हत् + म् + य = त्म्य माहात्म्यम् (மாஹாத்ம்யம்)
ल् + व = ल्व पल्वलम् (குளம்)ल् + ह = ल्ह चिल्हणः
श् + व = श्व अश्वः (குதிரை)
ष् + व = ष्व कुरुष्व (செய்தல் வினைச்சொல்)
स् + व = स्व स्वकीयम् (தன்னுடைய)
ह् + व =ह्व गह्वरम् (ஆழ் ரஹஸ்யம்t)
  • ह्न மற்றும் ह्म கூட்டெழுத்துக்கள் न्ह , म्ह என்று உச்சரிக்கப்படுகின்றன.
  • தொடக்கத்தில் கூட்டெழுத்துக்கள் எழுத கடினமாக இருந்தால் தனி மெய்யெழுத்துக்களை குறிக்க கீழே ஹல சின்ஹ கோடிட்டு எழுதலாம். எடுத்துக்காட்டு; पङ्कजम् என்பதை पङ्‌कजम् என எழுதலாம்.

ஸம்ஸ்க்ருத கூட்டெழுத்துக்களை சரளமாக எழுத நன்கு பயில வேண்டும். சிறிய ஸம்ஸ்க்ருத வாக்கியங்களை, ஸ்லோகங்களை பொருள் புரியாவிடினும் ஸம்யுக்தாக்ஷரங்களில் நல்ல பரிச்சயம் ஏற்பட படித்துப் பழகுங்கள்.

பயிற்சிப் பாடம்

எழுத்துக்களை இணைத்து சொல்லை எழுதவும்.

  1. क् + उ + ण् + ड् + इ + क् + आ
  2. म् + अ + त् + स्+ य् + अः
  3. क् + ऊ + र् + म् + अः
  4. व् + ऋ + क् + ष् + अः
  5. म् + अ + ण् + ड् + ऊ + क् + अः
  6. व् + अ + र् + त् + उ + ल् + अ + म्
  7. ल् + अ + व् + अ + ङ् + ग् + अः
  8. अ + ङ् + ग् + उ + ष् + ठ् + अः
  9. त् + इ + न् + त् +र् + इ + ण् + ई
  10. ग् + र् + अ + न् + थ् + अः:

விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்

கூட்டெழுத்துக்களை எழுதக் கற்கும்பொழுது சில சொற்களையும் பார்த்தோம். ஸம்ஸ்க்ருத மொழியின் தனித்தன்மை சொற்களுக்குறிய பால் (Gender). அடுத்தப் பாடத்தில் ஸம்ஸ்க்ருத சொற்களையும் அவற்றின் பாலையும் கற்கலாம். பாடம் 11 ஸம்ஸ்க்ருத பெயர்ச்சொற்கள் - संस्कृतनामपदानिि

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...