ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 11 – ஸம்ஸ்க்ருத சொற்பயிற்சி

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - एकादशः पाठः - संस्कृतनामपदानि

நாம் கற்கப் போவது.......

இதுவரை நாம் ஸம்ஸ்க்ருத உயிரெழுத்துக்கள் (स्वराः),மெய்யெழுத்துக்கள் (व्यञ्चनानि), உயிர் மெய்யழுத்துக்கள் (स्वरयक्तव्यञ्चनानि) மற்றும் கூட்டெழுத்துக்களை (सम्युकताक्षराः) நன்கு எழுதவும் படிக்கவும் கற்றோம். இப்பாடத்தில் ஸம்ஸ்க்ருத சொற்களை கற்கத் தொடங்கலாம். ஸம்ஸ்க்ருத்த்தில் சொல் பதம் पदम् என்று ஒருமையிலும் பதானி पदानि என்று பன்மையிலும் அழைக்கப்படுகிறது. ஸம்ஸ்க்ருத இலக்கண நூலான அஷ்டாத்யாயியை அளித்த பாணினி ஸுப்திகந்தம் பதம் सुप्तिङन्तं पदम् என்று வரையறுத்துள்ளார்.

இவ்வாறு சொல் என்பது பெயர்ச்சொல், வினைச்சொல் என இருவகைப்படுகிறது. ஸம்ஸ்க்ருத பெயர்ச்சொல் सुबन्तपदम् அல்லது नामपदम् என்றும் வினைச்சொல் तिगन्तपदम् அல்லது क्रियापदम् என்றும் அறியப்படுகின்றன, வினை மற்றும் பெயர்ச்சொற்களை விரிவாக நாம் அடுத்தப் படிவில் கற்க இருக்கிறோம், இப்பாடத்தில் பெயர்களோடு இணையும் லிங்கங்களை (பால்) பார்ப்போம்.

नामपदानि

பெயருடன் இணையும் ஆண் पुल्लिङ्गः, பெண் स्त्रीलिङ्गः மற்றும் பலவின் नपुंसकलिङ्गः பால்கள் ஸம்ஸ்க்ருத மொழிக்குறிய தனித்தன்மையாகும். ஸம்ஸ்க்ருத மொழியில் இலக்கண விதிப்படி சொல் உருவாகும் முறையையொட்டி சொல் லிங்கத்துடன் இணைகிறது. அதனால் சொல்லுக்குறிய லிங்கங்கள் சொல்லை ஒட்டியே அமைகின்றன. சொல்லின் அல்லது சொல் குறிக்கும் பொருளை அல்ல. இக்காரணத்தால் சொல்லை அறியும்போது லிங்கத்துடன் சேர்த்து அறிவது அவசியமாகிறது. இப்பாடத்தில் லிங்கத்தைக் குறிக்க अयम्, इयम மற்றும் इदम् என்ற ஸர்வநாம ஸப்தங்களை (பிரதி சொற்கள்) பயன் படுத்தியுள்ளோம். இச்சொற்கள் தமிழில் ‘இந்த’ அல்லது ‘இது’ என்பவற்றைப் போல் அருகில் உள்ள பொருட்களைக் குறிக்கின்றன.

अयम् அல்லது अयं   -   புல்லிங்க:     पुल्लिङ्गः
इयम அல்லது इयं   -   ஸ்த்ரீலிங்க:     स्त्रीलिङ्गः
इदम् அல்லது इदं   –   நபும்ஸகலிங்க:     नपुंसकलिङ्गः

கீழே நாம் ஒவ்வொரு லிங்கத்தையும் சேர்ந்த பொதுவாக வழக்கில் உள்ள சொற்களைக் கொண்டு மூன்று பட்டியல்கள் காட்டப்பட்டுள்ளுன,. உதாரணமாக अयं बालकः என்ற வார்த்தை ‘இது பாலகன்’ என்ற பொருளை உணர்த்துகிறது. इयं बालिका , इदं फलम् இவ்வார்த்தைகளில் இடம் பெற்ற इयं , इदं என்ற ஸர்வநாம ஸப்தங்கள் முறையே ஸ்த்ரீ மற்றும் நபும்ஸக லிங்கங்களை உணர்த்துகின்றன. சொற்களின் லிங்கங்களை ஊகித்து அறியும் குறிப்புகளும் கொடுக்கக்கட்டுள்ளன.

புல்லிங்கப் பெயர் சொற்கள் - पुल्लिङ्ग-नामपदानि

अयं बालकः

अयं सिंहः

अयं गजः

अयं अश्वः

अयं कुक्कुरः

अयं बिडालः

अय् मयूरः

अयं वृक्षः

अयं घटः

अयं छात्रः

अयं चषकः

अयं अध्यापकः

अयं वानरः

अयं भिक्षुकः

अयं भल्लूकः

अयं शुकः

अयं मीनः

अयं हरिणः
  • अः என்று முடிவு பெறும் சொற்கள் பெரிதும் புல்லிங்கமாகின்றன. மேலேப் பட்டியலில் காணப்படும் சொற்கள் ‘அ’ வில் முடியும் புல்லிங்க சொற்கள் अकारान्ताः पुल्लिङ्गशब्दाः என அறியப்படுகின்றன.
ஸ்த்ரீலிங்கப் பெயர் சொற்கள் - स्त्रीलिङ्ग-नामपदानि

इयं बालिका

इयं माला

इयं लता

इयं मक्षिका

इयं पेटिका

इयं पिपीलिका

इयं छात्रा

इयं पाठशाला

इयं अध्यापिका

इयं कलिका

इयं पत्रिका

इयं शाटिका

इयमं अङ्कनी

इयं लेखनी

इयं नदी

इयं दर्वी

इयं घटी

इयं कर्तरी
  • आ மற்றும் ई யில் முடியும் சொற்கள் பெரும்பாலும் ஸ்த்ரீ லிங்க சொற்கள். மேலேப் பட்டியலில் தரப் பட்டுள்ள ஸ்த்ரீ லிங்க சொற்கள் ‘ஆ’ வில் முடியும் ஸ்த்ரீ லிங்க आकारान्ताः स्त्रीलिङ्गशब्दाः அல்லது ‘ஈ’ யில் முடியும் ஸ்த்ரீ லிங்க , ईकारान्ताः स्त्रीलिङ्गशब्दाः சொற்களாகின்றன.
நபும்ஸகலிங்கப் பெயர் சொற்கள் - नपुंसकलिङ्ग-नामपदानिि

इदं फलम्

इदं पुष्पम्

इदं पर्णम्

इदं पुस्तकम्

इदं छत्रम्

इदं गृहम्

इदं नेत्रम्

इदं दुग्धम्

इदम् उपनेत्रम्

इदं लोकयानम्

इदं रेलयानम्

इदं विमानम्

इदं वातयानम्

इदं क्रीडानकम्

इदं मन्दिरम्

इदं भवनम्

इदं सोपानम्

इदम् उद्यानम्
  • अं என்று முடியும் சொற்கள் பெரும்பாலும் நபும்ஸக லிங்கத்தை சேர்ந்திருக்கின்றன. பட்டியலில் காணப்படும் பெயர் சொற்கள் ‘அ’ வில் முடியும் நபும்ஸக லிங்க अकारान्नताः नपुंसकलिङ्गशब्दाः சொற்களாகின்றன.
  • • புல்லிங்க, ஸ்த்ரீ லிங்க , நபும்ஸக லிங்க பிரிவுகள் சொற்களின் அமைப்பை பொறுத்தே அமைகின்றன. சொல்லின் பொருளைப் பொறுத்து அல்ல!

இப்பாடத்தில் சில நாம பதங்களையும் அவற்றின் லிங்கங்களையும் கற்றோம். தொடரும் பாடங்களில் மேலும் பல பதங்களையும் அவற்றின் வேறுப்பட்ட வடிவுகளையும் கற்க இருக்கிறோம். இப்பொழுது நாம் கற்றதைப் பயிற்சி செய்யலாம்.

பயிற்சிப் பாடம்

கீழ்காணும் நாம பதங்களின் லிங்கத்தையறிந்து अयमं, इयम् , इदम् என்ற சரியான ஸர்வநாம ஸப்தத்துடன் இணைத்து எழுதவும்.

எடுத்துக்காட்டு;

रामः - अयं रामः

  1. राधा
  2. शिवः
  3. कूपः
  4. सरस्वती
  5. देवता
  6. चन्दनम्
  7. तक्षकः
  8. द्विचक्रिका
  9. जलम्
  10. मारजनी

விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்

அடுத்தப் பாடத்தில் சூழலையொட்டி அமையும் வேறு சில ஸர்வநாம ஸப்தங்களை सर्वनामशब्दाः கற்கலாம். பாடம் 12 ஸம்ஸ்க்ருத பிரதிப் பெயர்சொற்கள் – सर्वनामशब्दाः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...