ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 12 ஸம்ஸ்க்ருத பிரதிப் பெயர்சொற்கள்

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला द्वादशः पाठः - सर्वनामशब्दाः

நாம் கற்கப் போவது.......

முன் பாடத்தில் अयम्, इयम மற்றும் इदम् ஸர்வநாம ஸப்தங்களை கற்றோம். அவற்றை நாமஸப்தங்களின் லிங்கங்களைக் காட்ட பயன்படுத்தினோம். இப்பாடத்தில் வேறு சில ஸர்வநாம ஸப்தங்களையும் அவை அமையும் விதங்களையும் அறியலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களை படங்களுடன் கவனியுங்கள்.

एषः / सः

एषः மற்றும் सः சொற்களின் பொருள் மற்றும் பயன்பாட்டினை ஊகித்திருப்பீர்கள். एषः அருகில் உள்ளதையும் सः தொலைவில் உள்ளதையும் உணர்த்துகின்றன. ' सः' ஸர்வநாமத்தால் உணர்த்தப்படும் பொருள் காட்சிக்கு அப்பாற்பட்டதை உணர்த்தும் விதத்தில் இடையில் சுவர் गजः, सि्हः, छात्रः மற்றும் अध्यापकः புல்லிங்க ஸப்தங்கள் पुल्लिङ्गशब्दाः என்று அறிவோம், இந்த ஸர்வநாம ஸப்தங்கள் ஸ்த்ரீ மற்றும் நபும்ஸக லிங்கங்களை உணர்த்தும்போது எங்ஙனம் வேறுபடுகின்றன என்பதைப் பார்ப்போம்.

एषा / सा

एतत् / तत्

இப்பொழுது ஸர்வநாம ஸப்தங்களை அவற்றிற்குறிய லிங்கங்களுடன் ஒழுங்குப்படுத்தி ஒரே பட்டியலில் காணலாம்.

एतद् / तद् शब्दरूपाणि.

லிங்கம் - लिङ्गम्एतद् (समीपे)तद् (दूरे)किम् (प्रश्ने)
புல்லிங்கம் - पुल्लिङ्गम्एषःसःकः
ஸ்த்ரீ லிங்கம் - स्त्रीलिङ्गम्एषासाका
நபும்ஸக லிங்கம் - नपुंसकलिङ्गम्एतत्तत्किम्

  • कः, का மற்றும் किम् ஆகிய பிரதி சொற்கள் வினாக்களில் இடம் பெறுகின்றன. कः, का மற்றும் किम् மற்ற ஸர்வநாம ஸப்தங்களுடன் இணைந்த எடுத்துக்காட்டுகளை தொடரும் பட்டியலில் காணலாம்.


  • புல்லிங்க ஸர்வநாம ஸப்தங்களான अयम् , एषः இரண்டும் அருகிலிருப்பவற்றைக் குறித்தாலும் एषः மிக அருகில் இருப்பதைக் காட்டுகிறது. இதே வேறுபாடு इयम् ,एषा வின் இடையிலும், அதே போல इदम्, एतत् இடையிலும் அறியப்படுகிறது.

கற்றவை மனதில் இடம் பெற பயிற்சி அவசியம். ஸர்வநாம ஸப்த அப்பியாசம் செய்வோம். अभ्यासम् करवाम।

रिक्तस्थानानि उचितैः पदैः पूरयन्तु- கோடிட்ட இடங்களில் தகுந்த பதங்களை எழுதுக;

उत्तराणि पठित्वा प्रशनानि लिखन्तु! – பதிலுக்கு தகுந்த வினா எழுதுக;

उदाहरणम् – எடுத்துக்காட்டு

______ _______? वैद्यः (समिपे)
उत्तरम् – பதில்: एषः कः?
_______ _______? मापिका (दूरे)
उत्तरम् – பதில்: सा का?

  1. _____ ______? क्रीडानकम् (समिपे)
  2. ______ ______? द्विचक्रिका (दूरे)
  3. _______ ________? कन्दुकम् (दूरे)
  4. ______ _______? रामः (दूरे)
  5. _______ ________? कलिका (समिपे)
  6. ______ _______? भल्लूकः (समिपे)

விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்.

இப்பாடத்தில் एतद्, तद् மற்றும் किम् ஸர்வநாம பதங்களின் வேறுப்பட்ட வடிவுகளைக் கற்றோம். தொடரும் பாடத்தில் ஸம்ஸ்க்ருத சொல்வளத்தைப் பெறுக்க பொதுவான ஸம்ஸ்க்ருதச் சொற்களைக் கற்கலாம். பாடம் 13 ஸம்ஸ்க்ருத சொல்லகராதி - सामान्यशब्दसङ्रहः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...