ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 14 ஸம்ஸ்க்ருத எண்ணறிவோம்

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला चतुर्दशः पाठः - संस्कृत-संख्यापदानि

நாம் கற்க இருப்பது........

எண்ணும் எழுத்தும் கண்ணெணத் தகும் என்ற ஔவையாரின் கூற்று எழுத்துக்களுக்கு இணையான எண்களின் முக்கியத்துவத்தைக காட்டுகிறது. ஸம்ஸ்க்ருத எழுத்துக்களைத் தொடர்ந்து எண்களை இப்பாடத்தில் கற்கலாம். எண்ணைக் குறிக்கும் ஸம்ஸ்க்ருத சொல் सङ्ख्या “இதனால் எண்ணப்படுகிறது” என்றப் பொருளில் அமைந்துள்ளது. முதலில் ஸம்ஸ்க்ருத பாரதி அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள “அயநம்” என்ற புத்தகத்திலுள்ளப் பாடலைப் பார்ப்போம்.

ஒன்றிலிருந்து பத்து வரையுள்ள ஸம்ஸ்க்ருத எண்கள் பாடலின் ஒவ்வொரு வரியிலும் முதல் இரண்டு சொற்களாக அமைந்துள்ளன. எண்கள் எவ்வாறு ஸம்ஸ்க்ருத்த்தில் எழுதப்படுகின்றன என்பதை அடுத்தப் படத்தில் பாரப்போம்.

எண் வடிவங்கள் (सङ्खयाः) மேல் வரிசையில் வெள்ளை நிறத்திலும் எண்களின் பெயர்கள் அவற்றின் கீழும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பத்து வடிவங்களைக் கொண்டே அனைத்து எண்களும் எழுதப்படுகின்றன. அதனால் இப்பத்து எண்களையும் எழுதியும் சொல்லியும் பழகுங்கள்.

ஒன்று முதல் நூறு வரையுள்ள எண்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. (एकतः शतपर्यन्तम्).

  • ஸம்ஸ்க்ருத எண்கள் வலமிருந்து இடமாகப் படிக்கப்படுகின்றன. உயர் எண்களும் இம்முறையிலேயேப் படிக்கப்படுகின்றன.

அடுத்து நாம் ஸம்ஸ்க்ருத ஸ்தான அல்லது இட மதிப்புகளின் (Place Values) பெயர்களைக் கற்கலாம். கடைசிப் பட்டியலில் எண்களின் Exponential Form ஐ காணுகிறோம். அதில் உயர் எண் ஐ தொடர்ந்து வரும் பூஜ்ஜிய எண்ணிக்கையைக் காட்டுகிறது.

ஸம்ஸ்க்ருத மொழி மற்றும் வேதங்கள் கர்ண பரம்பரையாக (சப்த வடிவில்) காக்கப்பட்ட பாரம்பரியத்தை உடையது. இவ்வழியில் ஸ்தானப் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ள பாஸ்கராச்சாரியரின் கீழ்க் காணும் ஸ்லோகப் பயன்படுகிறது.

एकदशशतसहस्रायुधलक्षप्रयुत कोतयः क्रमशः |
अर्बुदमब्जं खर्चनिखर्वमहापद्मशङ्कवस्तस्मात् ||
जलधिश्चान्त्यं मद्यं परार्धमिति दशगुणोत्तराः सङ्ख्याः |
सङ्ख्यायाः स्थानानां व्यवहारार्थं कृताः पूर्वैः || इति|

இது போன்ற பலக் குறிப்புகளை நாம் ப்ளாக் போஸ்ட்களில் காண இருக்கிறோம். எண்களை ஒலி வடிவத்தில் நினைவில் வைக்க அவற்றை நாம் அறிந்த பொருட்களுடன் இணைத்து கூட்டு சொற்களாகப் படிக்கும் மரபும் பாரத தேசத்தில் காணப்படுகிறது. அத்தகைய சில சொற்கள் ஸம்ஸ்க்ருத அறிவு தொடக்க நிலையில் உள்ளவர்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது.

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்.

இப்பாடத்தில் ஸம்ஸ்க்ருத எண்களை எழுத மற்றும் படிக்க கற்றோம். வரும் படிவுகளில் எண்களைப் பற்றி மேலும் கற்க இருக்கிறோம். இப்பொழுது ஸம்ஸ்க்ருத்த்தில் நேரம் பார்க்கலாமா? நமது அடுத்தப் பாடம்....
பாடம் 15: நேரம் பார்க்கலாம்- घण्टवादनम्

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...