ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 15 நேரம் பார்க்கலாம்

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला पञ्चदशः पाठः घण्टावादनम्

நாம் கற்க இருப்பது........

கடந்த பாடத்தில் ஸம்ஸ்க்ருத எண்களை எழதவும் சொல்லவும் கற்றோம். இப்பொழுது ஸம்ஸ்க்ருதத்தில் நேரம் பார்ப்போமா? உடன் வேறு சில காலம் மற்றும் கால அளவுகளைக் குறிக்கும் சொற்களையும் கற்கலாம்

கீழே சில கடிகாரப் படங்கள் கொடுக்கப் பட்டுள்ளன. உடன் காட்டும் நேரங்களும் ஸம்ஸ்க்ருதத்தில் தரப்பட்டுள்ளன.

समयः कः? - நேரம் என்ன?
त्रिवादनम्पञ्चवादनम्
सप्तवादनम्एकादशवादनम्
“वादनम्” என்ற சொல் மணி அடிப்பதைக் குறிக்கிறது. एकवादनम्, द्विवादनम्, चतुर्वादनम्, अष्टवादनम्… என்று वादनम् எண்களுடன் இணைந்து நேரத்தை உணர்த்துகிறது.

அடுத்து வரும் படங்கள் கால், அரை, முக்கால் போன்ற பின்ன நேரங்களைக் காட்டுகின்றன.

समयः कः? - நேரம் என்ன?
सपाद-एकवादनम्सार्ध-द्वादशवादनम्
पादोन-पञ्चवादनम्सपाद-अष्टवादनम्
மேற்காணும் நேரங்கள் ஆங்கிலத்தில் quarter past 1, quarter to 5 , half past 12 என்று கூறும் முறையை ஒத்திருக்கின்றன. ஸம்ஸ்க்ருதத்தில் पादः மற்றும் अर्ध என்ற சொற்கள் முறையே ‘கால்’ , ‘அரை’ என்று பொருள்படுகின்றன.

மேலும் சில பொதுவான நேர அறிவிப்புகளைக் காணலாம்.

समयः कः? - நேரம் என்ன?
दश अधिक अष्टवादनम्पञ्चविंशति्ः अधिक त्रिवादनम्
पञ्च न्यून षड्वादनम्विंशतिः न्यून द्वादशवादनम्
இவை மீண்டும் 10 past 8, 25 past 3 , 5 to six and 20 to 12 என்று ஆங்கிலத்தில் கூறுதலையொட்டி அமைந்துள்ளன. 11:40 என்பதை चत्वारिंशत् अधिक एकादशवादनम् என்றும் கூறலாம்.

நல்லது. நீங்கள் இப்பொழுது ஸம்ஸ்க்ருத எண்களை அறிவீர்கள். உங்களால் ஸம்ஸ்க்ருதத்தில் நேரமும் கூற இயலும். ஸம்ஸ்க்ருத எண்களைக் கொண்ட “संस्कृत घटी” யைப் பார்க்கலாமா?

समयः कः? -நேரம் என்ன?
षड्वादनम्सार्ध-द्विवादनम्
सपाद-नववादनम्पादोन-सप्तवादनम्

अस्तु।ஸம்ஸ்க்ருதத்தில் கிழமைகள் எப்படி அழைக்கப்படுகின்றன? பார்க்கலாமா?

दिनानां नामानि
रविवासरःஞாயிறு
सोमवासरःதிங்கள்
मङ्गलवासरःசெவ்வாய்
बुधवासरःபுதன்
गुरुवासरःவியாழன்
शुक्रवासरःவெள்ளி
शनिवासरःசனி

நேற்று, இன்று நாளை எப்படி? இதோ பார்க்க இருக்கிறோம்.

प्रपरह्यःஇன்றிலிருந்து மூன்று நாட்கள் முன்பு
परह्यःநேற்றுக்கு முந்தைய நாள்
ह्यःநேற்று
अद्य     இன்று
நாளைश्वः
நாளை மறு நாள்परश्वः
இன்றிலிருந்து மூன்றாம் நாள்प्रपरश्वः

கடைசியாக மேலும் சில காலம் மற்றும் கால அளவுகளை உணர்த்தும் சொற்களைப் பார்க்கலாம்.

कालावधि नामानि
दिनम्பகல் அல்லது நாள்
रात्रीஇரவு
प्रातःகாலை
सायम्மாலை
मद्याह्नःநடுப்பகல்
अपराह्णःமதியம்
सप्ताहम्வாரம்
पक्षःஇரு வாரம்
मासःமாதம்
वर्षम् , संवत्सरम्வருடம்

காலத்தையுணர்த்தும் பல ஸம்ஸ்க்ருத சொற்களைக் கற்றோம். அவை மனதில் நிற்க பயிற்சி செய்வோம் வாருங்கள்.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

संस्कृते समयं वदतु। - நேரம் ஸம்ஸ்க்ருதத்தில் கூறுங்கள்!

  1. 8 ‘O’ Clock.
  2. 5:15
  3. 3:05
  4. 8:45
  5. 12:00
  6. 6:50
  7. 1:25

प्रश्नानाम् उत्तरानि वदतु! வினாக்களுக்கு விடையளியுங்கள்!

எடுத்துக்காட்டு:

अद्य मङ्गलवासरः| ह्यः कः?

விடை:   ह्यः सोमवासरः|

  1. अद्य शनिवासरः| श्वः कः?
  2. श्वः बुधवासरः| ह्यः कः?
  3. ह्यः बुधवासरः| प्रपरह्यः कः?
  4. अद्य गुरुवासरः| परश्वः कः?
  5. ह्यः रविवासरः| श्वः कः?

விடைகளைக் காண!       

முதல் நிலையில் முதல் படிவில் பாடங்கள் இனிதே நிறைவுப் பெற்றன. பாடங்கள் தொடக்க நிலையில் கற்பவர்களுக்கு பயனையும் ஸம்ஸ்க்ருதம் அறிந்தவர்களின் ஒப்பதலையும் அளித்திருக்கும் என்று நம்புகிறோம். இப்படிவைக் குறித்த உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்.

நாம் இனி ஸம்ஸ்க்ருதத்தில் பேச வேண்டும். வாக்கியங்கள் அமைக்க வேண்டும். சிறிதளவு இலக்கணத்துடன் குறு பாடங்களும் படிக்க வேண்டும், வாருங்கள்! உற்சாகத்துடன் அடுத்தப் படிவைத் தொடங்கலாம்!
பிரிவு 2 – ஸம்ஸ்க்ருத நாமபதங்களும் க்ரியாபதங்களும் - संस्कृत-नामपदानि क्रियापदानि च

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...