ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 2 - அறிச்சுவடி பொது வகைப்பாடு

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - द्वितीयः पाठः- संस्कृतवर्णानां सामान्यविभागाः

நாம் கற்கப் போவது........

முதல் பாடத்தில் நாம் ஸம்ஸ்க்ருத எழுத்துக்களைப் பார்த்து அவற்றின் ஒலி வடிவங்களையும் கேட்டோம். இப்பாடத்தில் உயிர் மெய்யெழுத்துக்களின் உள்வகைப்பாடுகளைக் கற்கலாம். துடக்கத்தில் எழுத்துக்களின் பலவுதமான பிரிவுகள் உங்களை சற்றே திணறடிக்கலாம். பிரிவுகளின் அடிப்படை முழுதும் விளங்காவிடினும் மேலேப் படிக்குமாறு வேண்டுகிறோம். இந்த ஆரம்பப் பாடங்களின் நோக்கம் தொடக்க நிலையில் கற்போறுக்கு ஸம்ஸ்க்ருத எழுத்துக்களுடன் நல்ல பரிச்சயம் ஏற்பட வேண்டும் என்பதே.

ஸம்ஸ்க்ருத உயிரெழுத்துக்கள் அவை ஒலிப்பதற்கான நேரத்தைக் கணக்கிட்டு மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

குறிலெழுத்தை உச்சரிக்க ஒரு மாத்திரை (मात्रा) அளவு நேரம் தேவைப்படுவதாக கணக்கிடப்படுகிறது, இந்த கணக்களவின் அடிப்படையில் நெடில் மற்றும் நீண்ட நெடிலெழுத்துக்களை உச்சரிக்க முறையே இரண்டு மற்றும் மூன்றும் அதற்கு அதிகமாகவும் மாத்திரைகள் அளவுள்ள நேரம் தேவைப்படுகிறது. நீண்ட நெடிலெழுத்துக்கள் வேத மந்திரங்களில் ஒலிக்கப்படுகின்றன. தொடக்க நிலைப் பாடங்களில் இவ்வடிவுள்ள எழுத்துக்கள் இடம் பெறுவதில்லை.

முதல் பாடத்தில் நாம் கற்ற 13 உயிரெழுத்துக்கள் குறில் மற்றும் நெடிலென இருவகையாகப் பிரிக்கப்படுகின்றன. எழுத்துக்களை க்ளிக் செய்தால் ஒலிகளைக் கேட்கலாம்!

உயிர் எழுத்துக்கள் स्वरवर्णा:
ह्रस्व-स्वरा: குறில்கள் மொத்தம் = 5
दीर्घ-स्वराः நெடில்கள்
மொத்தம் = 8
प्लुत-स्वराः நீண்ட நெடில்கள்अ3इ3उ3ऋ3 ऌ3ए3ऐ4ओ3औ4மொத்தம் = 9
  • உயிரெழுத்துக்கள் உச்சரிக்கப்படும் பொழுது காற்று வாய் வழியாக வெளியேறுகிறது
  • अ इ उ ऋ ऌ மற்றும் आ ई ऊ ॠ ஓருயிரெழுத்துக்கள் என்று அறியப்படுகின்றன. अ इ उ ऋ ஆகிய குறிலெழுத்துக்களின் நெடில்களாக முறையே आ ई ऊ ॠ அமைந்துள்ளன. உயிரெழுத்திற்கு நெடில் வடிவு கிடையாது. நெடிலெழுத்துக்களான ए ऐ ओ औ ஆகிய இவற்றிற்கு குறில் வடிவுகள் இல்லை. இவ்வெழுத்துக்கள் ஈருயிரெழுத்துக்களாக (Diphthongs) அறியப்படுகின்றன.
  • குறில், நெடில் மற்றும் நீண்ட நெடில் வகைப்பாடுகள் எழுத்துக்களை ஒலிக்கத் தேவையான நேரத்தைப் பொறுத்து அமைந்துள்ளன
  • ஓருயிர் எழுத்துக்களான अ इ उ ऋ ऌ க்கும் மற்றும் ஈருயிர் எழுத்துக்களான ए ऐ ओ औ க்கும் நீண்ட நெடில் வடிவங்களும் (प्लुत) உள்ளன.
  • ஸம்ஸ்க்ருத உயிரெழுத்துக்களை ஒலிக்கும் முறைகளின் அடிப்படையில் கீழ்க்கண்டப் பாகுபாடுகளும் முக்கியமாடவை.
    1. ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் (உயிரெழுத்திற்கும்) அனுநாஸிக ஸ்வரம் (अनुनासिकः) அனனுநாஸிக ஸ்வரம் (अननुनासिकः) என்று இருவகை வடிவங்கள் உண்டு,
    2. ஒலிக்கும் ஸ்ருதியை அனுஸரித்து உதாத்த (उदात्तः), அனுதாத்த (अनुदात्तः) மற்றும் ஸ்வரித (स्वरितः) வடிவங்களை ஒவ்வொரு ஸ்வலமும் அடைகின்றது.

இப்பொழுது மெய்யெழுத்துக்கள் எவ்விதம் வகைப்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்!

ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்துக்கள் व्यञ्जनवर्णाः
स्पर्श-व्यञ्जनाः மூடொலி எழுத்துக்கள்क्ख्ग्घ्ङ्
च्छ्ज्झ्ञ्
ट्ठ्ड्ढ्ण्
त्थ्द्ध्न्
प्फ्ब्भ्म्மொத்தம் = 25
अन्तःस्थ-व्यञ्जनाः அரை உயிர் எழுத்துக்கள்य्र्ल्व्மொத்தம் = 4
ऊष्म-व्यञ्जनाः சீரொலி எழுத்துக்கள்श्ष्स्ह्மொத்தம் = 4
  • மெய்யெழுத்துக்கள் உச்சரிக்கப்படும்பொழுது வாய் உருப்புகளின் பயன்பாட்டை ஒட்டி மேல் காட்டிய வகைப்பாடுகள் அமைந்துள்ளன. மூடொலிகள் (स्पर्श-व्यञ्जनाः) உச்சரிக்கப்படும்பொழுது வாய் உருப்புகள் முற்றிலும் மூடுகின்றன. காற்றை முதலில் தடுத்து பின் வெளிவிடுவதன் மூலம் அரை உயிரெழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. சீரொலிகள் காற்றை லேசாக வெளிவிட்டு உச்சரிக்கப்படுகின்றன. ’ह’ தொண்டையிலிருந்து ஒலிக்கப்படுகின்றது.
  • மெய்யெழுத்துக்களை உயிர்ரெழுத்துக்களுடன் சேர்த்தே உச்சரிக்க முடியும். மெய்யெழுத்துக்களை தனியாக எழுதும்போது ஹல் சின்ஹம் ् என்ற சிறியக்கோடு கீழே சேர்க்கப்படுகின்றது. இத்தகையக் கோட்டுடன் கூடிய மெய்யெழுத்துக்களை தனியாக ஒலிக்க முடியாது
  • மெய்யெழுத்தின் அளவு அரை மாத்திரையாகும். மெய்யெழுத்துக்களின் அளவு குடிலெழுத்துடன் சேரும்போது ஒரு மாத்திரையாகவும், நெடிலுடன் இரு மாத்திரைகளாகவும், நீண்ட நெடிலுடன் மூன்று மாத்திரைகளாகவும் கணக்கிடப்படுகிறது.

மேலே காட்டியபடி ஸம்ஸ்க்ருத அரிச்சுவடியில் 55 எழுத்துக்கள் உள்ளன. – ̇ அனுஸ்வாரமும் : ̅ விஸர்கமும் ஸ்வரங்களின் ஒலி முடிவை குறிப்பதால் இவ்விரண்டும் தனி எழுத்துக்களாக கணக்கிடப்படுவதில்லை. இவ்வெழுத்துக்கள் ஜிஹ்வாமூல்ய உபத்மானீயங்கள் (அரை விஸர்கங்கள்)பாணினியின் மாஹேஶ்வர சூத்திரங்களில் இடம் பெறாததால் அயோகவாஹா (अयोगवाहाः) என்று அழைக்கப்படுகின்றன. அயோகவாஹ எழுத்துக்களை சேர்த்தால் ஸம்ஸ்க்ருத அரிச்சுவடியில் எழுத்துக்களின் எண்ணிக்கை 59 ஆகும்.

இப்பாடத்தைக் குறித்த உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்.

மூன்றாவதுப் பாடத்தில் ஒலிகளின் உற்பத்தி ஸ்தானங்களின் அடிப்படையிலான வகைப்பாடுகளை காணலாம்.

⇐ முன் பாடம்தொடர் பாடம் ⇒
click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...