ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 3 - அறிச்சுவடி ஒலி வகைப்பாடு

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - तृतीयः पाठः - संस्कृतवर्णानां स्थानीयविभागः

நாம் கற்கப் போவது........

இதுவரை நாம் ஸம்ஸ்க்ருத உயிர் மெய்யெழுத்துக்களாக எழுத்துக்களின் பொதுவகைப்பாட்டினை அறிந்தோம். ஸம்ஸ்க்ருத எழுத்துக்களின் ஒலி உற்பத்தி ஸ்தானங்களை ஆதாரமாக்க் கொண்ட அற்புதமான விஞ்ஞான பூர்வமான வகைப்பாட்டினை இப்பாடத்தில் கற்கலாம்,

ஒலியுண்டாக உதவும் வாயுருப்புக்களின் அடிப்படையிலான வகைப்பாட்டினை பார்ப்போம். வகைப்பாடுகள் பின் வருமாறு விளங்குகின்றன.

கண்ட்ய
कण्ठ्य
கண்ட்ய ஒலிகள் தொண்டையில் உண்டாகின்றன.
தாலவ்ய
तालव्य
தாலவ்ய எழுத்துக்கள் தாடைகளின் உதவியுடன் ஒலிக்கப்படுகின்றன.
மூர்தன்ய
मूर्धन्य
மூர்தன்ய எழுத்துக்களை ஒலிக்க வாயின் மேற்பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தன்த்ய
दन्त्य
தன்த்ய ஒலிகள் நாக்கு மேல் முன் பற்களை தொடுவதனால் ஏற்படுகின்றன,
ஓஷ்ட்ய
ओष्ठ्य
ஓஷ்ட்ய எழுத்துக்களை ஒலிக்க உதடுகள் உதவுகின்றன.

எழுத்துக்களை ஒலிப்பதில் வாய் உறுப்புகளுடன் நாக்கிற்கும் பங்குள்ளது, பின் கொடுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் மேற்கண்ட வகைப்பாட்டில் உயிர் எழுத்துக்களும் (ஸ்வரங்கள்) மெய்யெழுத்துக்களும் (வ்யஞ்சனங்கள்) எவ்வாறு அடங்குகின்றன மற்றும் நாக்கின் பங்கையும் காட்டுகின்றன. எழுத்துக்களை க்ளிக் செய்து ஒலிக்கச் செய்யலாம்.

ஒலிவகைப்பாடு – ஸ்வரங்கள்
தொகுதிஎழுத்துக்கள்
கண்ட்ய कण्ठ्य
எழுத்துக்களின் ஒலி தொண்டையிலிருந்து நாக்கின் உதவியில்லாமல் எழுகின்றன.
தாலவ்ய तालव्य
எழுத்துக்கள் தாடைகள் பக்கவாட்டில் சற்றே விரிவதன் மூலம் உச்சரிக்கப்படுகின்றன.
ஓஷ்ட்ய ओष्ठय
எழுத்துக்கள் ஒலிக்கும்பொழுது உதடுகள் குவிகின்றன.
மூர்தன்ய मूर्धन्य
நாக்கு வாயின் மேற்புறத்தை தொடுவது போல் நீண்டு காற்று வெளியேறுவதனால் ஒலி உண்டாகிறது.
தன்த்ய दन्त्य
நாக்கு மேல் முன்பற்களை நோக்கி நீண்டு காற்று வெளியேறும்பொழுது ஒலி உண்டாகிறது.
ஸ்வரங்கள் உச்சரிக்கப்படும்பொழுது நாக்கிற்கும் வாய் உறுப்புகளுக்கும் தொடர்பு ஏற்படுவதில்லை.
இரு ஓருயிர் எழுத்துக்கள் இணைந்து ஈருயிர் எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. அவை இரு தொகுதி இணைந்த வகைகளாக கர்தப்படுகின்றன.
கண்ட தாலவ்ய
कण्ठतालव्य
अ + इ = ए
आ + इ = ऐ
கண்டோஷ்ட்ய
कण्ठोष्टय
अ + उ = ओ
आ+उ=औ

வ்யஞ்சன எழ்த்துக்களில் மூடொலிகளின் (स्पर्शव्यञ्जनानि) வகைப்பாடு கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. உச்சரிக்க உதவும் வகையில் மெய்யெழுத்துக்கள் ‘அகாரத்துடன்’ இணைந்த வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒலிவகைப்பாடு-வ்யஞ்சனங்கள்
கண்ட்ய
कण्ठ्य
தாலவ்ய
तालव्य
மூர்தன்ய
मूर्धन्य
தன்த்ய
दन्त्य
ஓஷ்ட்ய
ओष्ठ्य
  • நாக்கு தொண்டையை லேசாக அடைத்து காற்று வெளியேறும்பொழுது கண்ட்ய வ்யஞ்சனங்கள் ஒலிக்கப்படுகின்றன

  • தாலவ்ய வ்யஞ்சனங்கள் ஒலிக்கும்பொழுது நாக்கின் நடுப்பாகம் வாயின் மேற்புறத்தை ஒட்டுகிறது

  • நாக்கின் நுனி வாயின் மேற்புறத்தை தொடுவதனால் மூர்தன்ய வ்யஞ்சன ஒலிகள் எழுகின்றன.

  • நாக்கின் நுனி மேல் முன்பற்களை தட்டையாக தொடும்பொழுது தன்த்ய வ்யஞ்சன ஒலிகள் வெளிப்படுகின்றன.

  • உதகடுள் ஒன்று சேர்ந்து ஒஷ்ட்ய வ்யஞ்சனங்கள் ஒலிக்கின்றன.

  • மேலே குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துக்கள் பொதுவாக தொகுதி வ்யஞ்சனங்கள் என அறியப்படுகின்றன (वर्गीय व्यञ्जनानि). இவைப் பொதுவாக க வர்கம் (क वर्गः), ச வர்கம் (च वर्गः), ட வர்கம் (ट वर्गः), த வர்கம் (त वर्गः) மற்றும் ப வர்கம் (प वर्गः) என அறியப்படுகின்றன. இவ்வியஞ்சனங்களின் பட்டியலில் தரப்படாத வகைப்பாடுகளையும் அறிவோம்,

    1. தொகுதி அல்லது வர்கீய வ்யஞ்சனங்கள் மீண்டும் கர்கஶ (कर्कश) அல்லது வல்லினங்கள், ம்ருது (मृदु) அல்லது மெல்லினங்கள் மற்றும் அனுநாஸிக (अनुनासिक) என்று மூன்றாக வகைப்படுத்தக்கடுகின்றன. அனுநாஸிக ஒலிகளுக்கு வாய் உறுப்புகளுடன் மூக்கறையும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் முதல் இரண்டு எழுத்துக்களும் கர்கஶ வகையாகவும், மூன்றாவது நான்காவது எழுத்துக்கள் ம்ருது வகையாகவும் கதொகுதிடைசியெழுத்து அனுநாஸிகமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.
    2. வர்க்கத்தின் முதல் இரண்டு எழுத்துக்கள் அகோஷ (अघोष) வகையாகவும் மூன்றாவது நான்காவது எழுத்துக்கள் கோஷவத் (घोषवत्) ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளன. கோஷவத் வ்யஞ்சனங்கள் உச்சரிக்கப்படும்பொழுது ஒலி அதிர்வு ஏற்படுகிறது.
    3. வர்கீய வ்யஞ்சனங்களில் அல்ப ப்ராண (अल्पप्राण) மற்றும் மஹா ப்ராண (महाप्राण) என்ற மூன்றாவது வகையான பிரிவும் உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள முதல் மற்றும் மூன்றாவது எழுத்துக்கள் அல்ப ப்ராண வகையிலும் இரண்டாவது மற்றும் நான்காவது எழுத்துக்கள் மஹா ப்ராண வகையிலும் அடங்கும்.
    4. அனுநாஸிக வ்யஞ்சனங்கள் அனுஸ்வாரத்தின் மெய்யெழுத்து வடிவங்களாகும். அனுநாஸிக எழுத்துக்களின் ஒலிகள் “न” வின் வேறுபட்ட வடிவங்களாகும்.

இப்பொழுது அரை உயிர் எழுத்துக்கள் (அன்தஸ்த) மற்றும் சீரெழுத்துக்களின் (ஊஷ்ம) வகைபாடுகளைப் பார்ப்போம்.

தொகுதிஅன்தஸ்த
(अन्तस्थ)
ம்ருது
(मृदु)
ஊஷ்ம
(ऊष्म)
கர்கஶ
(कर्कश)
கண்ட்ய
कण्ठ्य

ம்ருது
(मृदु)
மஹா ப்ராண
(महाप्राण)
தாலவ்ய
तालव्य
மூர்தன்ய
मूर्धन्य
தன்த்ய
दन्त्य
ஓஷ்ட்ய
ओष्ठ्य
  • ஊஷ்ம எழுத்துக்கள் சீறுதல் போன்ற ஒலிகளைக் கொண்டுள்ளன.

ஸம்ஸ்க்ருத எழுத்துக்களின் வேறுபட்ட வகைப்பாடுகள் துடக்கத்தில் குழப்புவது போலிருக்கும். பாடங்களில் முன்னேறும்பொழுது தெளிவு கிட்டும். அடுத்து வரும் இரு பாடங்களில் ஸ்வரங்கள் மற்றும் வ்யஞ்சனஙுகளின் அனைத்து வகைகளையையும் உள்ளடக்கிய தனிப் பட்டியல்களைப் பார்ப்போம். தொடர்ந்து ஸம்ஸ்க்ருத எழுத்துக்களை எழுதக் கற்கலாம்.

இப்பாடத்தைக் குறித்த உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்.

நான்காவது பாடம் ஸம்ஸ்க்ருத உயிரெழுத்துக்கள் – स्वराः – விரிவான நோக்கு.

< முன் பாடம்தொடர் பாடம் >
click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...