ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 4 – ஸம்ஸ்க்ருத உயிரெழுத்துக்கள் - स्वराः

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - चतुर्थ: पाठः – स्वराः

நாம் கற்கப் போவது........

கடந்த இருபாடங்களில் ஸ்வர-வ்யஞ்சனங்களின் பிரிவுகளைப் பார்த்தோம். ஒவ்வொரு எழுத்துக்களும் எந்தெந்த பிரிவுகளில் என்பதை பட்டியலில் காணலாம்.

இப்பாடத்தில் ஸ்வரங்களின் ஒருங்கிணைந்தப் பட்டியலைப் பார்ப்போம்.

ஸ்வரங்கள் - स्वराः
எழுத்துபிரிவுஎழுத்துபிரிவு
குறில் (ह्रस्व)
கண்ட்ய (कण्ठय)
நெடில் (दीर्घ)
கண்ட்ய (कण्ठय)
குறில் (ह्रस्व)
தாலவ்ய (तालव्य)
நெடில் (दीर्घ)
தாலவ்ய (तालव्य)
குறில் (ह्रस्व)
ஓஷ்ட்ய (ओष्ठय)
நெடில் (दीर्घ)
ஓஷ்ட்ய (ओष्ठय)
குறில் (ह्रस्व)
மூர்தன்ய (मूर्धन्य)
நெடில் (दीर्घ)
மூர்தன்ய (मूर्धन्य)
குறில் (ह्रस्व)
தன்த்ய (दन्तय)
நெடில் (दीर्घ)
கண்டதாலவ்ய
(कण्ठतालव्य)
நெடில் (दीर्घ)
கண்டதாலவ்ய
(कण्ठतालव्य)
நெடில் (दीर्घ)
கண்டோஷ்ட்ய
(कण्ठोष्ठय)
நெடில் (दीर्घ)
கண்டோஷ்ட்ய
(कण्ठोष्ठय)
अंஅனுஸ்வார:
अनुस्वारः
अःவிஸர்க:
विसर्गः
  • அனுஸ்வாரம் மற்றும் விஸர்கம் ஸ்வரங்களைத் தொடர்ந்து ஒலிக்கப்படுகின்றன. அனுஸ்வார ஒலி ஸ்வர ஒலியைத் தொடர்ந்து வாயை மூடும்பொழுது உண்டாகிறது. ஸ்வரத்தைத் தொடர்ந்து மூச்சுக் காற்று வெளியேறுவது விஸர்கமாகிறது.

வேதமந்திரங்களில் குறில், நெடில் மற்றும் நீண்ட நெடில் (प्लुत) ஸ்வரங்களும் ஒலிக்கப்படுகின்றன. இம்மூன்று பிரிவுகளைக் கீழேயுள்ளப் பட்டியல் காட்டுகிறது, ப்லுத (प्लुत) எழுத்துக்களைக் குறிக்கும் எண்கள் உச்சலிக்க தேவைப்படும் மாத்திரைகளைக் காட்டுகின்றன.

குறில்
ह्रस्वाः
நெடில்
दीर्घाः
நீள் நெடில்
प्लुताः
अ3
इ3
उ3
ऋ3
ऌ3
ए3
ऐ4
ओ3
औ4
  • ஹ்ரஸ்வ எழுத்துக்கள் ஒரு மாத்திரை அளவு நீளம் உள்ளவை.

  • தீர்க எழுத்துக்கள் பொதுவாக இரு மாத்திரைஅளவு நீளம் உள்ளவை. ऐ மற்றும் औ எழுத்துக்கள் ஒரு ஹ்ரஸ்வ ஒரு தீர்க எழுத்துக்கள் சேர்ந்து உருவாகுவதால் அவற்றின் நீளம் மூன்று மாத்திரை அளவாகிறது.

  • ப்லுத எழுத்துக்கள் குறைந்த பக்ஷம் மூன்று மாத்திரை நீளமுள்ளவை.

  • ஹ்ரஸ்வ உயிரெழுத்தான ऌ க்கு தீர்க வடிவில்லை.

  • • ஹ்ரஸ்வ, தீர்க மற்றும் ப்லுத ஒலிகளின் வேறுப்பாட்டையறிய குக்கு, குக்கூ, குக்கூ.... என்ற குயிலோசையைக் கேட்டுப் பாருங்களேன்,

நமது அடுத்தப்பாடத்தில் ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்துக்களின் ஒருங்கிணைந்த வகைப்பாட்டினைக் காணலாம்.

இப்பாடத்தைக் குறித்த உங்கள் கருத்துக்களை வேண்டுகிறோம். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்.

ஐந்தாவது பாடம் ஸம்ஸ்க்ருத மெய்யெழுத்துக்கள் – व्यञ्जनानि – விரிவான நோக்கு.

< முன் பாடம்தொடர் பாடம் >
click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...