ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 8 – ஸம்ஸ்க்ருத கூட்டெழுத்துக்கள் संयुक्तवर्णा: - எழுத்துப்பயிற்சி

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - अष्टम पाठ: - संयुक्तवर्णाः लेखनाभ्यासः

நாம் கற்கப் போவது.......

கடந்த பாடங்களில் ஸம்ஸ்க்ருத ஸ்வர மற்றும் வ்யஞ்சன எழுத்துக்களை படிக்க மற்றும் எழுதக் கற்றோம். வ்யஞ்சன எழுத்துக்களை ஏதேனும் ஒரு ஸ்வர எழுத்துடன் இணைத்தே ஒலிக்க இயலும். உதாரணம் क् + अ = क.

எழுத்துக்களில் பல விதங்களாக கூட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன. கூட்டெழுத்துக்களைப் பற்றிய விரிவான பாடம் பின்னே வருகின்றது. இப்பாடத்தில் நான்கு முக்கியமான கூட்டெழுத்துக்களைப் பற்றி அறிவோம். ஒவ்வொரு எழுத்தும் எழுதும் முறையுடன் அவை எவ்வெழுத்துக்களின் கூட்டினால் உருவாகின்றன என்பதும் காட்டப்பட்டுள்ளது. முந்தையப்பாடங்களில் இருந்ததுபோல் எழுத்துக்களை க்ளிக் செய்து பெரிதாக்க் காணலாம். ஒலியையும் கேட்கலாம். பட வடிவுகளைக் copy செய்து print செய்து எழுதிப் பழகலாம்.

ஸம்யுக்த எழுத்துக்கள் - எழுத்துப்பயிற்சி
संयुक्तवर्णा:- लेखनाभ्यासः
क् + ष् = क्ष्
क्ष् + अ = क्ष
ज् + ञ् = ज्ञ्
ज्ञ् + अ = ज्ञ
त् + र् = त्र्
त्र् + अ = त्र
श् + र् = श्र्
श्र् + अ = श्र

மேலே நாம் கண்ட கூட்டெழுத்துக்கள் எழுதுவதற்கு முதலில் சற்றுக் கடினமாக இருக்கலாம். பயிற்சி அதை எளிதாக்கும்.

கூட்டெழுத்துக்களை எழுதிப் பழகினீர்களா? உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்

இதுவரை வ்யஞ்சனங்கள் अ ஸ்வரத்துடன் இணந்த வடிவுகளை ஒலியுடன் கண்டோம். மற்ற ஸ்வரங்களுடன் இணையும்போது அவை எவ்விதம் எழுதப்படுகின்றன? ஸ்வர சேர்க்கையைக் குறிக்க ஸ்வர மாத்ரா (स्वरमात्रा:) குறிகள் உபயோகப்படுகின்றன. இவை குணிதா (गुणिताः) என்றும் அறியப்படுகின்றன. ஸ்வரக் குறிகளைப் பற்றி அடுத்தப் பாடத்தில் கற்கலாம்.

நமது அடுத்தப் பாடம்...... பாடம் 9 ஸம்ஸ்க்ருத எழுத்துக்குறிகள் - स्वरमात्रा:

click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...