ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 1 - ஸம்ஸ்க்ருத எழுத்தறிவோம் - பாடம் 9 – ஸம்ஸ்க்ருத உயிர் மெய்யெழுத்துக்கள் - எழுத்துக்குறிகள்

प्रावेशिकः स्तरः - प्रथम-विभागः – वर्णमाला - नवमः पाठः - स्वरमात्रा:

நாம் கற்கப் போவது.......

அக்ஷரம் - வர்ணம்

ஸம்ஸ்க்ருத அரிச்சுவடி அக்ஷரமாலா அல்லது வர்ணமாலா என்று அழைக்கப்படுகிறது. அக்ஷரம் (अक्षरः) என்றால் என்ன? வர்ணம் (वर्णः) என்றால் என்ன? தனியாக ஒலிக்கக்கூடிய அசை எழுத்து அக்ஷரம். வர்ணம் என்பது எழுதக்கூடிய மிக சிறிய அலகு (Unit). தனித்து ஒலிக்கப்படுவதால் ஸ்வர எழுத்துக்கள் அக்ஷரங்களாகும், வ்யஞ்சனங்கள் தனித்து ஒலிக்கப்படாத்தால் அக்ஷரங்களாவதில்லை. ஸம்ஸ்க்ருத்த்தில் மெய்யெழுத்துக்கள் வ்யஞ்சன வர்ணா; (व्यञ्जनवर्णाः) அல்லது வ்யஞ்சனானி (व्यनञ्जनानि) என்றே அழைக்கப்படுகின்றன. வ்யஞ்சன எழுத்துக்களை ஏதேனும் ஒரு ஸ்வர எழுத்துடன் இணைத்தே ஒலிக்க இயலும். வ்யஞ்சனங்கள் ஸ்வரங்களுடன் இணைந்து உருவாகும் உயிர் மெய்யெழுத்துக்கள் அக்ஷரங்களாகும்.

மெய்யெழுத்துக்களை எழுதக் கற்கும்பொழுது ஸ்வர எழுத்து अ வுடன் இணைந்த क, ख, ग, घ போன்ற வடிவுகளைக் கண்டோம், இப்பாடத்தில் அல்லாத இதர உயிரெழுத்துக்களால் உருவாகும் உயிர் மெய்யெழுத்துக்களை குறிக்கும் குறிகளை அறியவும் எழுதவும் கற்கப் போகிறோம். குறிப்பிட்ட ஒவ்வொரு எழுத்துக்குறியும் ஸ்வர மாத்திரா (स्वरमात्रा) அல்லது குணிகா (गुणिका). என்று அழைக்கப்படுகிறது.

क् மெய்யெழுத்திலிருந்து உருவாகும் உயிர் மெய்யெழுத்துக்களின் பட்டியலைக் கீழேப் பார்க்கிறோம். சொற்களில் இவ்வெழுத்துக்களை அறிவதற்கு ஏதுவாக எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டுள்ளன, எழுத்துக்குறிகளையும் உயிர் மெய்யெழுத்துக்களையும் நன்கறிய எழுத்துக்களை முறையாக எழுதிப் பழகுங்கள். எழுத்துக்கள் இணைந்து எவ்வாறு சொற்கள் உருவாகின்றன என்பதையே எடுத்துக்காட்டுகள் காட்டுகின்றன. இப்பாடத்தில் சொற்களின் பொருள் முக்கியமில்லை. க்ளிக் செய்து எழுத்துக்களைப் பெரிதாக்கி ஒலிகளையும் கேட்கலாம்.

உயிரெழுத்துக் குறிகள்உயிர் மெய்யெழுத்துசொல்லில் எழுத்து சேர்க்கை
क् + अ = क (ka)कथा = क् + अ + थ् + आ (Katha)
आ - ाक् + आ = का (kaa)काकः = क् + आ + क् + अः (Kaakah)
इ = िक् + इ = कि (ki)किरातः = क् + इ + र् + आ + त् + अः (Kirathah)
ई = ीक् + ई = की (ki)कीचकः = क् + ई + च् + अ + क् + अः (Kiichakah)
उ = ुक् + उ = कु (ku)कुम्भः =क् + उ + म् + भ् + अः (Kumbhah)
ऊ = ूक् + ऊ = कू (Koo)कूर्मः = क् + ऊ + र् + म् + अः (Koormah)
ऋ = ृक् + ऋ = कृ (Kru)कृष्णः = क् + ऋ + ष् + ण् + अः ( Krishnah)
ॠ = ॄक + ॠ = कॄ (Kruu)
ए = ेक् + ए = के (Ke)केशः = क् + ए + श् + अः ( Kes ̅ah)
ऐ = ैक् + ऐ = कै (kei)कैवल्यम् = क् + ऐ + व् + अ + ल् + य् + अ + म् ( Kaivalyam)
ओ - ोक् + ओ = को (ko)कोकिलः = क् + ओ + क् + इ + ल् + अः (Kokilah)
औ - ौक् + औ = कौ (kow)कौमारम् = क् + औ + म् + आ + र् + अ + म् (Koumaram)
अं = ंक् + अं = कं (kam)कंसः = क् + अं + स् + अः (Kamsah)
अः = ःक् + अः = कः (kah)कः = क् + अः(Kah)

எழுத்துடன் இணைந்த உயிர் மெய்யெழுத்துக்கள் அரிதாக காணப்படுவதால் அவ்வெழுத்துக்கான குறி பட்டியலில் கொடுக்கப்படவில்லை. क्ऌ என்று எழுத்தையே குறியாக எழுதலாம். முழு மெய்யெழுத்துக்களை குறிக்க கீழே இடப்படும் கோடு அல்லது ஹல சின்ஹம் விராம; என்றும் அழைக்கப்படுகிறது. ஸம்ஸ்க்ருதத்தில் உயிர்மெய்யெழுத்துக்களை ஸ்வர யுக்த வ்யஞ்சனானி என அழைக்கிறோம்.

நல்லது. இனி உயிர் மெய்யெழுத்துக்களை எழுதிப் பழகலாம். பட்டியலின் முதல் வரிசை வ்யஞ்சனங்களுடன் எழுத வேண்டிய மாத்ரைகளை (मात्रा) அல்லது குறிகளைக் காட்டுகிறது. கீழே அனைத்து ஸ்வரயுக்த வ்யஞ்சனங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. எழுத்துக்களின் பெரிய வடிவங்களை ஒலியுடன் க்ளிக் செய்து பெறலாம். இவற்றின் துணையோடு எழுத்துக்களை எழுதியும் சொல்லியும் பயிற்சி செய்யுங்கள்.

Conjoint Consonants - स्वरयुक्त-व्यञ्जनानि
ि
काकिकीकुकूकृकॄकेकैकोकौकंकः
खाखिखीखुखूखृखॄखेखैखोखौखंखः
गागिगीगुगूगृगॄगेगैगोगौगंगः
घाघिघीघुघूघृघॄघेघैघोघौघंघः
ङाङिङीङुङूङृङॄङेङैङोङौङंङः
चाचिचीचुचूचृचॄचेचैचोचौचंचः
छाछिछीछुछूछृछॄछेछैछोछौछंछः
जाजिजीजुजूजृजॄजेजैजोजौजंजः
झाझिझीझुझूझृझॄझेझैझोझौझंझः
ञाञिञीञुञूञृञॄञेञैञोञौञंञः
टाटिटीटुटूटृटॄटेटैटोटौटंटः
ठाठिठीठुठूठृठॄठेठैठोठौठंठः
डाडिडीडुडूडृडॄडेडैडोडौडंडः
ढाढिढीढुढूढृढॄढेढैढोढौढंढः
णाणिणीणुणूणृणॄणेणैणोणौणंणः
तातितीतुतूतृतॄतेतैतोतौतंतः
थाथिथीथुथूथृथॄथेथैथोथौथंथः
दादिदीदुदूदृदॄदेदैदोदौदंदः
धाधिधीधुधूधृधॄधेधैधोधौधंधः
नानिनीनुनूनृनॄनेनैनोनौनंनः
पापिपीपुपूपृपॄपेपैपोपौपंपः
फाफिफीफुफूफृफॄफेफैफोफौफंफः
बाबिबीबुबूबृबॄबेबैबोबौबंबः
भाभिभीभुभूभृभॄभेभैभोभौभंभः
मामिमीमुमूमृमॄमेमैमोमौमंमः
यायियीयुयूयृयॄयेयैयोयौयंयः
रारिरीरुरूरॄरेरैरोरौरंरः
लालिलीलुलूलॄलेलैलोलौलंलः
वाविवीवुवूवृवॄवेवैवोवौवंवः
शाशिशीशुशूशृशॄशेशैशोशौशंशः
षाषिषीषुषूषृषॄषेषैषोषौषंषः
सासिसीसुसूसृसॄसेसैसोसौसंसः
हाहिहीहुहूहृहॄहेहैहोहौहंहः
क्षक्षाक्षिक्षीक्षुक्षूक्षृक्षॄक्षेक्षैक्षोक्षौक्षंक्षः
ज्ञज्ञाज्ञिज्ञीज्ञुज्ञूज्ञृज्ञॄज्ञेज्ञैज्ञोज्ञौज्ञंज्ञः
त्रत्रात्रित्रीत्रुत्रूत्रॄत्रेत्रैत्रोत्रौत्रंत्रः
श्रश्राश्रिश्रीश्रुश्रूश्रॄश्रेश्रैश्रोश्रौश्रंश्रः

ஸ்வரயுக்த வ்யஞ்சனங்களை எழுதிப் பழகினீர்களா? இப்பொழுது எழுத்துக்களை சொல்லிலிருந்து பிரித்துப் பழகலாம். பயிற்சிப் பாடத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் சொற்களில் எழுத்துக்களைப் பிரித்து எழுதி படித்துப் பழகவும்.

பயிற்சிப் பாடம்

எடுத்துக்காட்டு; गायिका = ग् + आ + य् + इ + क् + आ

  1. पोषकः =
  2. कौशलम् =
  3. भोजनशाला =
  4. सहोदरी =
  5. दूरवाणी =
  6. कृषकः =
  7. पेटिका =
  8. हरिः =
  9. धेनुः =
  10. ऋतुः =

விடைகளைக் காண!       

வ்யஞ்சனங்கள் ஸ்வரங்களுடன் இணைந்து உருவாகும் உயிர் மெய்யெழுத்துக்களின் வடிவங்களையும் ஒலிகளையும் கற்றோம், கூடுதல் பயிற்சிக்கான பாடங்கள் படிவு 1 இறுதியில் அனுபந்தத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலே காணும் பயிற்சிக்கான விடைகளை விடைகள் பக்கத்தில் காணலாம்.

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும்

ஒன்று அல்லது கூடுதல் வ்யஞ்சனங்கள் ஒரு ஸ்வர எழுத்துடன் இணைந்து அக்ஷரங்கள் ஏற்படுகின்றன. வயஞ்சனங்களின் சேர்க்கைகள் எவ்விதம் எழுதப்படுகின்றன? ஸம்ஸ்க்ருத கூட்டெழுத்துக்களை அடுத்தப் பாடத்தில் கற்கலாம். பாடம் 10 ஸம்ஸ்க்ருத கூட்டெழுத்து – संयुक्ताक्षराणि

click to upload image
0 comments
×

संस्कृतवीथी குறித்த
Update பெறுவதற்கு...