ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 1 - ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ப்ரதமா விபக்தி

प्रावेशिकः स्तरः - द्वितीय-विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - प्रथमः पाठः - प्रथमा विभक्तिः

நாம் கற்கப் போவது........

எப்பொழுதும் ப்ரஸன்னமாய் தெளிவான அறிவை அளிக்க பக்தர்க்கு ஞானமும் வரமும் அருளும் ஸரஸ்வதி உன்னை வணங்குகிறேன்.

தேவி ஸரஸ்வதியிடம் தெளிவான அறிவை வேண்டி இப்படிவின் முதல் பாடத்தை தொடங்குகிறோம். ஸ்லோகத்தை க்ளிக் செய்து கேட்கவும்!

ஸம்ஸ்க்ருத நாம (नामपदानि) மற்றும் க்ரியா (क्रिया) பதங்கள் நமக்கு முதல் படிவில் அறிமுகப்படுத்தப்பட்டன. வாக்கியங்களில் நாம பதங்களின் நிலையையொட்டி அவற்றின் ரூபங்கள் மாறுகின்றன. இந்த மாற்றங்கள் மூல நாம வடிங்களுடன் (Base Noun Forms) விபக்திகளின் (विभक्तिः) சேர்க்கையால் அமைகின்றன. विभक्तिः தமிழில் வேற்றுமை உருபை ஒத்தது.

ஒவ்வொரு நாம பதத்திற்கும் 8 விபக்தி ருபங்கள் உள்ளன, இப்பாடத்தில் प्रथमा विभक्तिः (முதலாம் வேற்றுமை உருபு) பற்றி கற்க இருக்கிறோம். அதற்கு முன்பாக கொஞ்சம் ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் கேட்கலாமா?

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

பள்ளிக்கூட ஸம்பாஷணம் எளிமையாக காட்டப்பட்டுள்ளது. முதல் இரண்டு நிமிடங்கள் ஹிந்தியில் முகவுரைக்கு பின் ஸம்பாஷணம் தொடங்குகிறது. க்ளிக் செய்து வீடியோவைக் காணவும்.
வீடியோவில் கேட்ட சில எளிமையான வாக்கியங்கள் பட்டியலில் தரப்பட்டுள்ளன. பரிச்சய வார்த்தைகளுடன் ஸம்ஸ்க்ருதத்தில் பேசத் தொடங்கலாம்.

ஸம்பாஷணப் பயிற்சி - सम्भाषणाभ्यासः
नमो नमः – வணக்கம்
सर्वॆषां स्वागतम् – அனைவருக்கும் நல் வரவு.
मम नाम ______ - என் பெயர் _______.
भवतः नाम किम्? – உங்கள் (ஆண்) பெயர் என்ன?
मवत्याः नाम किम् ? – உங்கள் (பெண்) பெயர் என்ன?
அறியவேண்டிய சொற்கள் -     मम    भवतः    भवती

பல சந்தர்பங்களுடன் இணைந்த சுவாரஸ்யமான ஸம்பாஷண வாக்கியங்களை தொடரும் பாடங்களில் கற்க இருக்கிறோம்.

प्रथमा विभक्तिः

நாம பதங்கள் प्रथमा विभक्तिः ப்ரதமா விபக்தியுடன் மூன்று இடங்களில் காணப்படுகின்றன.

  1. वस्तुनिर्देशे प्रथमा – ஒரு நபரையோ, பொருளையோ அல்லது இடத்தையோ குறிக்க
  2. कर्तरि प्रथमा– செயல் புரிபவரைக் குறிக்க
  3. कर्मवाचकस्य प्रथमा – செயல்பாட்டு வினையில் செயலைக் குறிக்க.

முதலில் பெயரைக் குறிக்க प्रथमा विभक्तिः யை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதைக் இப்பாடத்தில் கற்கலாம். ஆங்கிலத்தில் Singular, Plural க்கு இணையாக தமிழில் ஒருமை, பன்மை இருப்பதை நாம் அறிவோம். ஸம்ஸ்க்ருதத்தில் கூடுதலாக இரு பெயர்களைக் குறிக்க இருமை எண்ணும் (द्विवचनम्) உள்ளது.

अकारान्ताः पुल्लिङ्गशब्दाः

முன் பாடங்களில் 'अ' வை இறுதியாக்க் கொண்ட புள்ளிங்க ஸப்தங்களை (अकारान्ताः पुल्लिङ्गशब्दाः) एकवचनम् த்தில் கற்றோம். கீழ்க் காணும் படம் இத்தகைய ஸப்தங்களின் द्विवचनम् மற்றும் बहुवचनम् வடிவங்களையும் காட்டுகிறது.



அகாராந்த புள்ளிங்க ஸப்தங்கள் வசனத்திற்கு ஏற்ற வகையில் प्रथमा विभक्ति யில் எவ்விதம் மாறுகின்றன என்பதை ஊகித்ததிருப்பீர்கள். நாம பதங்களின் மூல வடிவம் ப்ராதிபதிகம் प्रातिपदिकम् என்று அழைக்கப் படுகிறது. ப்ராதிபதிகத்திலிருந்து விபக்திகள் ஏற்படும் விதத்தை நாம் விரிவாக்க காணலாம்.


இப்பொழுது வேறு சில அகாராந்த புள்ளிங்க ஸப்தங்களின் प्रथमा विभक्तिः வடிவங்களைப் பார்க்கலாம்.

अकारान्ताः पुल्लिङ्गशब्दाः - प्रथमा विभक्तिः
एकवचनम् - ஒருமைद्विवचनम् - இருமைबहुवचनम् - பன்மை
बालः
ஒரு பையன்
बालौ
இரு பையன்கள்
बालाः
பையன்கள்
छात्रः
ஒரு மாணவன்
छात्रौ
இரு மாணவர்
छात्राः
மாணவர்கள்
वृक्षः
ஒரு மரம்
वृक्षौ
இரு மரங்கள்
वृक्षाः
மரங்கள்
  • बाल, छात्र மற்றும் वृक्ष என்ற மூல நாம பதங்கள் (प्रातिपदिकम्) 'अ' உயிரெழுத்தை இறுதியில் கொண்டுள்ளதால் अकारान्ताः पुल्लिङ्गशब्दाः (अ வில் முடியும் ஆண்பால் பெயர்கள்.)
  • அகாராந்த புள்ளிங்கங்களின் ஏகவசன விபக்திகள் மூல நாம பதங்களின் இறுதியில் விஸர்க: சேர்ந்து உருவாகின்றன. எடுத்துக்காட்டு: बालः, छात्रः , वृक्षः.
  • அகாராந்த புள்ளிங்கங்களின் இறுதி 'अ', 'औ' ஆக மாறி த்விவசன விபக்திகளாகின்றன. எடுத்துக்காட்டு: बालौ, छात्रौ , वृक्षौ.
  • மூல நாமத்தின் 'अ' வை தீர்கமாக்கி ('आ') பஹுவசன விக்க்திகள் எழுதப்படுகின்றன. எடுத்துக்காட்டு: बालाः, छात्राः, वृक्षाः.

आकारान्ताः स्त्रीलिङ्गशब्दाः

இப்பொழுது ப்ரதமா விபக்தியில் ஆகாராந்த ஸ்த்ரீ லிங்க பொயர்சொற்களைக் கண்டு அவற்றை பெறுவதற்கான முறைகளையும் பார்க்கலாம்.



आकारान्ताः स्त्रीलिङ्गशब्दाः - प्रथमा विभक्तिः
एकवचनम् - ஒருமைद्विवचनम् - இருமைबहुवचनम् - பன்மை
माला
ஒரு மாலா
माले
இரு மாலைகள்
मालाः
மாலைகள்
पेटिका
ஒரு பெட்டி
पेटिके
இரு பெட்டிகள்
पेटिकाः
பெட்டிகள்
  • ஏகவசனத்தில் ஆகாராந்த ஸ்த்ரீ லிங்க மூல நாம பதமே விபக்தியாகிறது. மாற்றம் எதுவுமில்லை. எடுத்துக்காட்டு: माला, पेटिका.
  • ஆகாராந்த ஸ்த்ரீ லிங்க மூல நாமத்தின் முடிவில் உள்ள 'आ' , 'ए' வாக மாற்றி த்விவசன விபக்தி பெறப்படுகிறது. எடுத்துக்காட்டு: माले, पेटिके.
  • மூல நாமத்தின் முடிவில் உள்ள आ வுடன் விஸர்கத்தை இணைத்தால் பஹுவசன விபக்தி உருவாகிறது. எடுத்துக்காட்டு: मालाः , पेटिकाः

ईकारान्ताः स्त्रीलिङ्गशब्दाः



ईकारान्ताः स्त्रीलिङ्गशब्दाः - प्रथमा विभक्तिः
एकवचनम् - ஒருமைद्विवचनम् - இருமைबहुवचनम् - பன்மை
नदी
ஒரு நதி
नद्यौ
இரு நதிகள்
नद्यः
நதிகள்
घटी
ஒரு கடிகாரம்
घट्यौ
இரு கடிகாரங்கள்
घट्यः
கடிகாரங்கள்
  • ஈகாராந்த ஸ்த்ரீ லிங்க மூல நாம பதமே ஏகவசனத்தில் விபக்தியாகிறது. எடுத்துக்காட்டு: नदी , घटी.
  • மூல நாமபதத்தில் இறுதி 'ई' யை நீக்கி 'यौ' சேர்த்தால் ஈகாராந்த ஸ்த்ரீ லிங்க விபக்தியாகிறது. எடுத்துக்காட்டு: नद्यौ , घट्यौ.
  • ஈகாராந்த ஸ்த்ரீ லிங்க பஹுவசன விக்க்தி மூல நாம பதத்தின் இறுதி 'ई' யை நீக்கி 'यः' சேர்த்து உருவாகிறது. எடுத்துக்காட்டு: नद्यः , घट्यः.

अकारान्ताः नपुंसकलिङ्गशब्दाः




अकारान्ताः नपुंसकलिङ्गशब्दाः- प्रथमा विभक्तिः
एकवचनम् - ஒருமைद्विवचनम् - இருமைबहुवचनम् - பன்மை
फलम्
ஒரு பழம்
फले
இரு பழங்கள்
फलानि
பழங்கள்
पुष्पम्
ஒரு பூ
पुष्पे
இரு பூக்கள்
पुष्पाणि
பூக்கள்
विमानम्
ஒரு விமானம்
विमाने
இரு விமானங்கள்
विमानानि
விமானங்கள்
  • அகாராந்த நபும்ஸக லிங்க மூல நாம பதத்துடன் 'म्’ விகுதி இணைந்து ஏகவசன விபக்தி உருவாகிறது.எடுத்துக்காட்டு: फलम् , पुष्पम्, विमानम्.
  • மூல நாம பதத்தின் இறுதி ‘अ’, ‘ए’ வாக மாறி அகாராந்த நபும்ஸக த்விவசன விபக்தி உருவாகிறது. எடுத்துக்காட்டு: फले, पुष्पे, विमाने.
  • மூலநாம பதத்துடன் आनि சேர்ந்து பஹுவசன விபக்தி உருவாகிறது. எடுத்துக்காட்டு: फलानि, पुष्पाणि, विमानानि.
  • ‘र’ அல்லது ‘ष’ பின் வரும் ‘न’ இலக்கண விதிப்படி ‘ण’ ஆக மாறுகிறது. पुष्पाणि पुष्पानि.

முதல் வேற்றுமை பிரதி சொற்கள் - सर्वनामपदानि - प्रथमा विभक्तिः

நாம் முன்பே கற்ற एतत् - तत् , एषः - सः , एषा – सा போன்ற ஸர்வ நாம ஸப்தங்களின் பிரயோகத்தை நாம் வீடியோவில் பார்த்தோம். முன் கண்ட பட விவரங்களிலும் ஸர்வ நாம ஸப்தங்கள் லிங்கம், வசனம் அனுஸரித்து மாறுவதைக் கண்டோம். ப்ரதமா விபக்தி நாம பதங்களை சில கேள்விகளுக்குப் பதிலாக பெறலாம். இத்தகைய கேள்வி சொற்களுக்கும் லிங்கம் வசனம் ஒட்டிய விபக்திகள் ஏற்படுகின்றன.
ஸர்வநாம ஸப்த விபக்தி வடிவங்களைப் பட்டியலில் காணலாம்.

एतत् - शब्दः (समीपे) प्रथमा विभक्तिः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
पुल्लिङ्गेएषःएतौएते
स्त्रीलिङ्गेएषाएतेएताः
नपुंसकलिङ्गेएतत्एतेएतानि
तत् - शब्दः (दूरे) प्रथमा विभक्तिः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
पुल्लिङ्गेसःतौते
स्त्रीलिङ्गेसातेताः
नपुंसकलिङ्गेतत्तेतानि
किम् - शब्दः (प्रशने) प्रथमा विभक्तिः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
पुल्लिङ्गेकःकौके
स्त्रीलिङ्गेकाकेकाः
नपुंसकलिङ्गेकिम्केकानि

முடிவாக ப்ரதமா விபக்தி பாடத்தின் முக்கிய தொகுப்பினைப் பார்ப்போம்.

एकवचनम्द्विवचनम्बहुवचनम्
पुल्लिङ्गेबालकःबालकौबालकाः
स्त्रीलिङ्गेमालामालेमालाः
स्त्रीलिङ्गेनदीनद्यौनद्यः
नपुंसकलिङ्गेफलम्फलेफलानि

இங்ஙனம் ஒவ்வொரு நாம்பதத்துக்கும் , இறுதி எழுத்து, லிங்கம் வசனம் அனுஸரித்து 8 விபக்தி வடிவங்கள் உள்ளன. பொதுவாக ஒரு formula போல பயன்படுத்தும் வகையில் ஸப்தங்கள் மனப்பாடம் செய்யத் தரப்பட்டுள்ளன. அவற்றிற்கான Links கீழே தரப்பட்டுள்ளன.

अभ्यासेन एव ज्ञानं दृढं भवति। பயிற்சியினாலேயே பாடம் பலம் பெறுகின்றது. வழக்கம் போல் பயிற்சி கேள்விகளுடன் பாடத்தை நிறைவு செய்கிறோம்

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. லிங்கம் மற்றும் வசனம் அனுசரித்து ப்ரதமா விபக்தி நாம்பதம் எழுதவும். लिङ्गं वचनं अनुसृत्य प्रथमा-विभक्तिः-नामपदानि लिखन्तु।

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    राधा (द्विवचनम्)
    राधा – आकारान्तः स्त्रीलिङिगः शब्दः
    द्विवचनरूपम् – राधे

    1. मूषकः (बहुवचनम्) (எலி)
    2. नर्तकी (बहुवचनम्) (நர்தகி)
    3. व्यजनम् (द्विवचनम्) (விசிறி)
    4. आरक्षकः (द्विवचनम्) (காவலர்)
    5. सरस्वती (एकवचनम्) (சரஸ்வதி)
    6. छत्रम् (बहुवचनम्) (குடை)
    7. शिव (पुल्लिङ्गम्, एकवचनम्) (சிவ)
    8. ऊरुक (नपुंसकलिङ्गम्, एक वचनम्) (Pants)
    9. दर्वी (द्विवचनम्) (கரண்டி)
    10. पाठशाला (द्विवचननम्) (பாடசாலை)

  2. शब्दान् उचितैः सर्वनामरूपैः योजयित्वा वाख्यानि लिखन्तु। ஸப்தங்களை உரிய ஸர்வநாமங்களுடன் இணைத்து வாக்கியம் எழுதவும்.

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    नद्यौ → एते  = एते नद्यौ

    कोकिलःतत्
    अद्यापिकेएतौ
    नेत्रम्सः
    कलिकाः (स्त्री)ते
    अश्वौएषा
    पत्राणिते
    मयूराः (पुल्लिङ्गम्)सा
    उद्याने (नपुंसकम्)एतानि
    लताताः
    पत्रिकाएते

उत्तराणि – விடைகள்       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.

இப்படிவை நாம்பதங்களின் எழுவாய் வடிவங்களுடன் (Subject) தொடங்கியுள்ளோம். அடுத்தப் பாடத்தில் प्रथमा विभक्ति யுடன் இருப்பைக் குறிக்கும் (अस् धातु). க்ரியா பதம் சேர்த்து எளிய வாக்கியங்களை எழுதக் கற்கலாம்.
பாடம் 2 : இருப்பைக் குறிக்கும் க்ரியா பதங்கள் - अस्ति, स्तः, सन्ति

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...