ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 10 - ஸம்போதன ப்ரதமா விபக்தி

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - दशमः पाठः - संबोधन-प्रथमा विभक्तिः

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • விளி பெயர்சொற்கள் - संबोधन-प्रथमा विभक्तिः

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

நாம் முதல் படிவில் கற்ற கிழமைப் பெயர்கள், द्वितीया विभक्तिः வடிவங்கள், வாக்கியத்தில் அவற்றின் பயன்பாடு என்ற இவற்றின் பயிற்சியாக பள்ளிக்கூட ஸம்பாஷண வீடியோ அமைந்துள்ளது. வீடியோ முழுவதையும் காணுக.

Conversation Practice - सम्भाषणाभ्यासः
प्रपरह्यः   –   परह्यः   –   ह्यः
अद्य
श्वः   –   परश्वः   -   प्रपरश्वः
परश्वः शुक्रवासरः।
परश्वः कः वासरः?
शुक्रवासरः कदा?
इदानीं कः समयः?पञ्चवादनम्, सप्तवादनम्....
प्रातःकाले वदामः सुप्रभातम्।
रात्रौ वदामः शुभरात्रिः।
नमोनमः ।
नमस्कारः ।
हरिः ऑ ।
अहं   → दण्डं
चमसं
दन्तकूर्चं
सिक्थवर्तिकां
अङ्कनीं       →
लेखनीं
दूरवाणीं
करवस्त्रं
स्वीकरोमि
स्थापयामि
ददामि
सुशीलेन्द्रं
सिन्धुं   →
वेदवतीं
पृच्छामि
भगवद्गीतां   →पठामि
विद्यालयं   →गच्छामि
कुत्र कुत्र.....?
किं किं……?
कः कः ……?
कुत्र कुत्र गच्छति?
महाराजा आसीत्।
सः मगतदेशं पालयति स्म।
दत्तवान्
शिक्षितवन्तः
चन्द्रगुप्तस्य अमात्यः चाणक्यः आसीत्।

सम्बोधन-प्रथमा – ஸம்போதனம் முகவுரை

कृपया अधोदत्तानि वाक्यानि पठतु। கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை படிக்கவும்.

अम्ब ! अत्र पश्य ।அம்மா, இங்கே பார் !
पुत्रि ! लिख ।மகளே, எழுது!
वत्स ! उत्तिष्ठ ।குழந்தாய், எழுந்திரு!
मित्र ! शृणु ।நண்பனே, கேள்!
रमे ! किमहं गच्छानि ?ரமா, நான் செல்லட்டுமா?
कृष्ण ! जलम् आनय ।க்ருஷ்ணா, தண்ணீர் கொண்டு வா!
हे छात्राः ! पाठं लिखत ।ஹே மாணவர்களே, பாடத்தை எழுதுங்கள்!
हे लोकाः ! शृणुत ।ஹே மக்களே கேளுங்கள்!

மேற்கண்ட வாக்கியங்களில் மத்யம புருஷ लोट्-क्रियापदानि குறிப்பிட்ட ஒருவரை அல்லது பலரை அழைக்கும் விளிச்சொல்லை, ஸம்போதனத்தை தொடர்கின்றன. सम्बोधन-प्रथमा பெயர் சொல்லுக்குறிய எட்டு விபக்தி வடிவங்களில் ஒன்று. அதனால் இவை பெயரின் ப்ராதிபதிகம் மற்றும் லிங்கத்தை ஒட்டி வேறுபடுகின்றன. உதாஹரண வாக்கியங்களில் ! குறியினால் सम्बोधनरूपम् வாக்கியத்தின் மற்ற சொற்களிலிருந்து பிரித்துக் காட்டப்பட்டுள்ளது. ! பதிலாக ‘, ‘ கமாவையும் பயன்படுத்தலாம்.

सम्बोधनरूपविधानि – ஸம்போதன வகைகள்

பொதுவாக ஸம்போதனத்தை மூன்று வகையாக பிரிக்கலாம்

  1. सामान्य-सम्बोधनानि – ஸாதாரண ஸம்போதனங்கள்
  2. आदरसूचक-सम्बोधनानि – மரியாதை நிமித்த ஸம்போதனங்கள்
  3. नामनिर्देशक-सम्बोधनानि – பெயரைக் குறிக்கும் ஸம்போதனங்கள்.

सामान्य-सम्बोधनानि – ஸாதாரண ஸம்போதனங்கள்

தினசரி உரையாடல்களில் सामान्य-सम्बोधनानि சகஜமாக உபயோகப்படுத்தப்படுகின்றன. இவ்வகையில் ஆண், பெண் என்று இரு பாலரும் தனிதனியாகவும் பொதுவாகவும் குறிக்கப் படுகின்றனர். ஸம்போதன சொற்களுடன், भोः, रे, अये, अयि போன்றவையும் சேர்க்கப்படுகின்றன.

ஆணைக் குறிக்கும் - मित्र     पुत्र     वत्स       हे मित्र !
பெண்ணைக் குறிக்கும் – सखि     भगिनि     पुत्रि       अयि भगिनि !
பொதுவானவை – भोः       अयि भोः       हे

आदरसूचक-सम्बोधनानि – மரியாதை நிமித்த ஸம்போதனங்கள்

தமிழில் ‘மதிப்புக்குறிய’ , ‘மாண்புமிகு’ போன்ற மரியாதை நிமித்தம் சேர்க்கப்படும் விளிகளை ஒத்த ஸம்போதனங்கள் ஸம்ஸ்க்ருதத்திலும் அழைக்கப்படுபவரின் பெயரோடு சேர்க்கப்படுகின்றன.

उदाहरणानि
पुल्लिङ्गेमहोदय / वर्य / महाशय / महाभागनीरज्महोदय !   महादेववर्य !
स्त्रीलिङ्गेमहोदया / वर्या / भगिनिललितावर्ये !   लक्षमीमहोदये !   रमाभगिनि !

இவ்விளிகள் பெயர் சேர்க்காமல் அழைக்கப்படுகின்றன

पुल्लिङ्गेश्रीमन् / मान्य / आर्य
स्त्रीलिङ्गेभगिनि / आर्ये / मान्ये

नामनिर्देशक-सम्बोधनानि – ஸம்போதனப் பெயர்கள்

रमे ! किमहं गच्छानि ? என்ற வாக்கியத்தை முதலில் பார்த்தோம். ஸம்போதனம் ரமா என்ற குறிப்பிட்ட பெண்ணை நோக்கி அமைந்துள்ளது. रमा என்ற சொல் आकारान्तः स्त्रीलिङ्गः शब्दः. அதனால் आकारान्त-स्त्रीलिङ्ग-शब्दाः ரிய உறுபுகள் சேர்க்கப்படுகின்றன. रामः என்ற पुल्लिङ्ग-एकवचनम्-प्रथमाविभक्तिः க்குரிய सम्बोधनप्रथमा-रूपम् ‘राम’ इति भवति। ஸம்போதனம் விபக்தி என்பதால் எண்ணை (वचनम्) முன்னிட்டும் வடிவத்தில் மாறுதல் ஏற்படுகிறது.
நாம் இதுவரைக் கற்ற अजन्तशब्दाः க்குரிய ஸம்போதன ரூபங்களை பட்டியல்களில் பார்க்கலாம். सम्बोधन-प्रथमा உடன் प्रथमा, द्वितीया विभक्ति-रूपाणि களையும் காணலாம். தலைப்பை க்ளிக் செய்து ஸப்தத்தின் எட்டு விபக்தி வடிவங்களையும் காணலாம்.

अकारान्तः पुल्लिङ्गः ‘राम’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारामःरामौरामाः
द्वितीयारामम्रामौरामान्
सं.प्रथमाहे रामहे रामौहे रामाः
इकारान्तः पुल्लिङ्गः ‘हरि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाहरिःहरीहरयः
द्वितीयाहरिम्हरीहरीन्
सं.प्रथमाहे हरेहे हरीहे हरयः


उकारान्तः पुल्लिङ्गः ‘गुरु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमागुरुःगुरूगुरवः
द्वितीयागुरुम्गुरूगुरून्
सं.प्रथमाहे गुरोहे गुरूहे गुरवः


ऋकारान्तः पुल्लिङ्गः ‘पितृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमापितापितरौपितरः
द्वितीयापितरम्पितरौपितॄन्
सं.प्रथमाहे पितःहे पितरौहे पितरः


आकारान्तः स्त्रीलिङ्गः ‘रमा’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारमारमेरमाः
द्वितीयारमाम्रमेरमाः
सं.प्रथमाहे रमेहे रमेहे रमाः
इकारान्तः स्त्रीलिङ्गः ‘मति’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामतिःमतीमतयः
द्वितीयामतिम्मतीमतीः
सं.प्रथमाहे मतेहे मतीहे मतयः


ईकारान्तः स्त्रीलिङ्गः ‘नदी’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमानदीनद्यौनद्यः
द्वितीयानदीम्नद्यौनदीः
सं.प्रथमाहे नदिहे नद्यौहे नद्यः
ऊकारान्तः स्त्रीलिङ्गः ‘धेनु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाधेनुःधेनूधेनवः
द्वितीयाधेनुम्धेनूधेनूः
सं.प्रथमाहे धेनोहे धेनूहे धेनवः


ऋकारान्तः स्त्रीलिङ्गः ‘मातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामातामातरौमातरः
द्वितीयामातरम्मातरौमातॄः
सं.प्रथमाहे मातःहे मातरौहे मातरः


अकारान्तः नपुंसकलिङ्गः ‘फल’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाफलम्फलेफलानि
द्वितीयाफलम्फलेफलानि
सं.प्रथमाहे फलहे फलेहे फलानि
इकारान्तः नपुंसकलिङ्गः ‘वारि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमावारिवारिणीवारीणि
द्वितीयावारिवारिणीवारीणि
सं.प्रथमाहे वारे – हे वारिहे वारिणीहे वारीणि


इकारान्तः नपुंसकलिङ्गः ‘दधि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादधिदधिनीदधीनि
द्वितीयादधिदधिनीदधीनि
सं.प्रथमाहे दधे – हे दधिहे दधिनीहे दधीनि


उकारान्तः नपुंसकलिङ्गः ‘मधु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामधुमधुनीमधूनि
द्वितीयामधुमधुनीमधूनि
सं.प्रथमाहे मधो – हे मधुहे मधुनीहे मधूनि

लोट् क्रियापदानि உடன் ஸம்போதன வடிவங்கள் இணையும் முறையை கீழ்க் காணும் எடுத்துக்காட்டுகள் மேலும் தெளிவுபடுத்துகின்றன.

सम्बोधनप्रथमा-उदाहरणानि
रे, बालक ! त्वं कोलाहलं मा कुरु ।ஏ பாலனே! ரகளை செய்யாதே.
शिवदीपमहोदय, भवान् पुरस्कारं स्वीकरोतु !சிவதீப் ஐயா, பரிசைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
भगिन्यः, भवत्यः गायन्तु ।சகோதரிகளே, நீங்கள் பாடுங்கள்.
पुत्रौ, युवाम् खादतम् ।மகன்களே நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள்.
महोदयौ, भवन्तौ उपविशताम् ।மதிப்புக்குரியவர்களே, நீங்கள் இருவரும் அமருங்கள்.
छात्राः, यूयं मा क्रिडथ ।மாணவர்களே, விளையாடாதீர்கள்.

செயலைத் தடுக்க ஆணை க்ரியாவுடன் ‘मा’ சேர்க்கப்படுகிறது. ‘न’ அல்ல!
मा गच्छ   -  
न गच्छ   –  

இப்பாடத்தில் மேலும் சில தாதுக்களின் लोट् வடிவங்களைப் பார்க்கலாம். धातुः வை க்ளிக் செய்து लोट् பட்டியலைக் காணலாம்

क्रीड्पच्स्मृविश्क्षिप्
क्षल्पाल्रच्धाव्चुर्

इदानीम् अभ्यासं करणीयम् ।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கீழேக் கொடுக்கப்பட்டுள்ள பெயர் சொற்களின் ஸம்போதன மூன்று வசன வடிவங்களையும் எழுதுக. दत्तानां शब्दानां त्रिषु वचनेषु सम्बोधन-रूपानि लिखत ।
    1. सेवक ।
    2. बन्धु । (पुं) (உறவினர்)
    3. मुनि ।
    4. गौरी ।
    5. राधा ।
    6. अध्यापिका ।
    7. मित्र ।
    8. अश्रु । (नपुं) (கண்ணீர்)
    9. सरस्वती ।
    10. वत्स ।

  2. காலி இடங்களை உரிய ஸம்போதனத்தினால் நிறப்பவும் रिक्त-स्थानानि उचितैः सम्बोधनैः पूरयत।

    उदाहरणम्

    _______ भवती भोजनं यच्छतु । (अम्बा)
    अम्ब, भवती भोजनं यच्छतु ।

    1. _______, त्वं किं खादसि? (गणेशः)
    2. _______, भवान् फलं स्वीकरोतु । (महोदयः)
    3. _______, भवती कुत्र गच्छति? (भगिनी)
    4. _______, यूयं गृहपाठं लिखत । (बालिका)
    5. _______, युवां खादतम् । (वत्सः)
    6. _______, भवन्तः चित्रं पश्यन्तु । (जनः)
    7. _______, त्वं मा हस । (मूर्खः -Fool)
    8. _______, त्वं दधिं आनय । (शारदा)
    9. _______, युवां पाठं लिखतम् । (शिष्यः)
    10. _______, यूयं श्लोकं गायत । (छात्रा) (स्त्री)

उत्तराणि - விடைகள்!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

முன்னொரு பாடத்தில் ‘आप्’ धातुः உடன் ‘ प्र’ உபஸர்கம் இணைந்து ‘प्राप्नोति’ என்ற நிகழ்கால வினைப்பதம் அமைவதை பார்த்தோம். உபஸர்கங்களை பற்றி அடுத்த பாடத்தில் கற்க இருக்கிறோம்.
பாடம் 11: உபஸர்கங்கள் - उपसर्गाः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...