நாம் கற்கப் போவது........ | ||
இப்படிவில் இதுவரைக் கற்றது....... |
இப்பாடத்தில் கற்க இருப்பது.... |
|
ஸம்பாஷண வீடியோவில் द्वितीया-विभक्तिः யின் பிரயோகத்தை கவனிக்கவும். வீட்டிற்கு வரும் நண்பருடன் (अतिथिः) உரையாடலில் பயன்படுத்தப்படும் உபசார வார்த்தைகளையும் பார்த்தோம். குறிப்பாக கவனிக்க வேண்டிய சொற்கள் Highlight செய்யப்பட்டிருக்கின்றன.
ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் - सम्भाषणाभ्यासः | ||
---|---|---|
वयम् आरम्भे पूर्वतन पाठस्य किञ्चित् स्मरणं कुर्मः | ||
अत्र बहूनि वस्तूनि सन्ति । | ||
कृपया करदीपम्/उपनेत्रं ददातु । | ध्वनिमुद्रिका – Cassette सान्द्रमुद्रिका – CD ROM | |
अहं तया सह कथं सम्भाषणं करोमि इति शृण्वन्तु । | ||
गृहस्थः – अतिथिः - सम्भाषणम् | ||
कुशलं वा ? माता कुशलिनी अस्ति वा ? कः विशेषः ? | आं कुशलम् । गृहे सर्वं कुशलम् । विशेषः कोऽपि नास्ति । | |
पानीयं ददामि । | किञ्चित् शर्करा आवश्यकी ? | |
सा विद्यालयं गतवती अस्ति । | पिता कार्यालयं गतवान् ? | |
विस्मृतवान् । | अनुजस्य परीक्षा समाप्ता ? | |
पानीयं किं स्वीकरोति ? | किमपि मास्तु । | |
सङ्कोचः मास्तु । किञ्चित् स्वीकरोतु भोः । | किञ्चित् ददातु । | |
किं ददामि ? अस्तु ददामि । | फलरसं ददातु । अन्यः विशेषः कः ? | |
पुरतः, पृष्ठत, वामतः, दक्षिणतः, उपरि, अधः | ||
पार्श्वे कः अस्ति ? | ||
हेमन्तः वरुणस्य पुरतः अस्ति । | दिलीपः वरुणस्य पृष्ठतः अस्ति । | |
प्रिया मेघायाः पुरतः अस्ति । | अहल्या मेघायाः पृष्ठतः अस्ति । | |
विजय, पुरतः आगच्छतु । | पृष्ठतः गच्छतु । | |
माधुरी पुरतः उपविशति । | अर्चना पृष्ठतः उपविशति। | |
प्रसन्नः मम दक्षिणतः अस्ति । | प्रिया मम वामतः अस्ति । | |
आकाशः उपरि अस्ति । | भूमिः अधः अस्ति । | |
उपकारिषु, अपकारिषु, साधुत्वे, दूरतः |
(विशेषक्रियापदानि)கற்கும்பொழுது प्र உபஸர்கம் आप् தாதுவுடன் இணைந்து உருவாகும் प्राप्नोति, प्राप्नुतः, प्राप्नुवन्ति என்ற க்ரியா வடிவங்களை பார்த்தோம். ஆங்கிலத்தில் Prefixes என்று அழைக்கப்படும் சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் उपसर्गाः (उपसर्गः என்பதின் பன்மை). உபஸர்கங்களுக்கு தனியாக பொருளோ செயலோ இல்லாவிடினும் தாதுக்களுடன் சேரும்பொழுது அவற்றின் பொருளை பலவிதங்களில் பாதிக்கின்றன. प्र + आप्, आप् தாதுவின் ஒரு பொருளான ‘பெறுதல்/அடைதல்’ என்பதை மேலும் செறிவூட்டுகிறது. उपसर्गाः ஸம்ஸ்க்ருத மொழியை வலிவூட்டும் ஒரு அம்சமாகும். பின் வரும் செய்யுள் உபஸர்கங்களின் செயல்பாட்டை அழகாக விளக்குகிறது.
हृ தாதுவிலிருந்து தோன்றிய प्रहार, आहार, संहार, विहार, परिहार சொற்களைப் போல் உபஸர்கம் தாதுவுடன் சேரும்பொழுது அதன் பொருளை பலவந்தமாக மாற்றுகிறது என்பது ஸ்லோகத்தின் பொருள்.
இப்பொழுது உபஸர்கங்கள் ‘हरति’ என்ற வினைச் சொல்லின் ‘பரித்தல்’ என்ற பொருளை எப்படி மாற்றுகின்றன என்பதைப் பார்ப்போம்.
उपसर्गः | क्रियापदम् | उपसर्गयुक्तक्रियापदम् |
---|---|---|
परि | हरति Takes away | परिहरति (Solves) |
वि | विहरति ( Roams) | |
आ | आहरति ( Brings) | |
प्र | प्रहरति ( Beats) | |
सम् | संहरति ( Kills) | |
उप + सम् | उपसंहरति (Concludes) | |
उत् + आ | उदाहरति (Gives an example, ) |
இப்பாடத்தில் உபஸர்கங்களைப் பற்றியும் தாதுக்களுடன் அவை எங்ஙனம் இணைகின்றன, அவற்றின் செயல்பாடுகளையும் பற்றியும் கற்க இருக்கிறோம்.
ஸம்ஸ்க்ருதத்தில் 22 उपसर्गाः இருக்கின்றன. அவற்றை கீழே காணலாம். இலக்கண ரீதியாக அவை ‘प्रादयः’ அதாவது ‘प्र’ தொடங்கியவை என்று அறியப்படுகின்றன.
प्र | प्रा | अप् | सम् | अनु | |
अव | निस् | निर् | दुस् | दुर् | |
वि | आ | नि | अधि | अपि | |
अति | सु | उत् | अभि | प्रति | |
परि | उप |
உபஸர்கங்கள் எப்பொழுதும் தாதுவின் முன்பே இணைகின்றன.
उपसर्गः धातोः पूर्वं भवति ।
உபஸர்கங்கள் பொதுவாக மூன்று விதங்களில் அவை இணையும் தாதுவை பாதிக்கின்றன. உபஸர்கங்களின் செயல்பாட்டை கீழ்க் காணும் ஸ்லோகம் அழகாக விளக்குகிறது.
उपसर्गाःமூன்று வகைகளில் செயல்படுகின்றன. சில இடங்களில் உபஸர்கங்கள் தாதுவின் பொருளை மாற்றுகின்றன. வேறு சில இடங்களில் தாதுவின் இயல்பான பொருளையே காட்டுகின்றன. மற்றும் சில இடங்களில் தாதுவின் பொருளை மேலும் சிறப்பித்து காட்டுகின்றன.
உதாஹரணங்களைக் கொண்டு உபஸர்க செயல்பாடுகளை புரிந்துக் கொள்ளுவோம்.
சில இடங்களில் உபஸர்கங்கள் தாதுவின் பொருளை மாற்றுகின்றன.
उपसर्गः कदाचित् धातोः अर्थं परिवर्तते ।
धातुः | क्रियापदम् | उपसर्गसहितक्रियापदम् |
---|---|---|
स्मृ | स्मरति நினைக்கிறான் | वि + स्मरति = विस्मरति மறக்கிறான் |
गम् | गच्छति செல்கிறான் | आ + गच्छति = आगच्छति வருகிறான் |
சில இடங்களில் உபஸர்கங்கள் தாதுவின் இயல்பான பொருளையே ஊக்குவிக்கின்றன.
उपसर्गः कदाचित् धातोः अर्थं समर्थयति ।
धातुः | क्रियापदम् | उपसर्गसहितक्रियापदम् |
---|---|---|
विश् | विशति நுழைகிறான் |
प्र + विशति = प्रविशति நுழைகிறான் |
वृत् | वर्तते இருக்கிறது, நடைபெறுகிறது |
प्र + वर्तते = प्रवर्तते இருக்கிறது, நடைபெறுகிறது |
சில இடங்களில் தாதுவின் பொருளை மேலும் சிறப்பித்து காட்டுகின்றன.
उपसर्गः कदाचित् धातोः अर्थं पोषयति ।
धातुः | क्रियापदम् | उपसर्गसहितक्रियापदम् |
---|---|---|
लिख् | लिखति எழுதுகிறான் | वि + लिखति = विलिखति விரிவாக எழுதுகிறான் |
शुभ् | शोभते அழகாக விளங்குகிறது | सु + शोभते = सुशोभते மிக அழகாக விளங்குகிறது |
சில சமயங்களில் உபஸர்கங்கள் தாதுக்களின் அர்த்தத்தை வேறொரு விதத்தில் காட்டுகிறது .
उपसर्गः कदाचित् धातोः अर्थं किञ्चित् विस्तारयति ।
धातुः | क्रियापदम् | उपसर्गसहितक्रियापदम् |
---|---|---|
गम् | गच्छति போகிறான் | अनु + गच्छति = अनुगच्छति பின் தொடர்கிறான் |
ईक्ष् | इक्षते பார்க்கிறான் | परि + ईक्षते = परीक्षते பரிசோதிக்கிறான் |
இவையல்லாமல் உபஸர்கங்களின் செயல்பாடுகளில் வேறு இரண்டு அம்சங்கள் கூட காணப்படுகின்றன.
பல சமயங்களில் இரண்டு அல்லது மூன்று உபஸர்கங்கள் தாதுவின் முன் இணைகின்றன.
प्रति + आ + गच्छति = प्रत्यागच्छति (திரும்புகிறான்)
सम् + अति + गच्छति = समतिगच्छति (நோக்கி/கடந்து செல்கின்றான்)
सम् + उत् + आ + हरति = समुदाहरति (விளக்கி சொல்கிறான்)
சில சமயங்களில் உபஸர்கங்கள் தாதுவின் पद த்தை மாற்றுகின்றன. परस्मैपदी க்ரியாபதம் आत्मनेपदी ஆகவும் आत्मनेपदी க்ரியாபதம் परस्मैपदी ஆகவும் மாறுகின்றன.
उपसर्गः | परस्मैपदी-क्रियारूपम् | उपसर्गयुक्त-आत्मनेपदी- क्रियारूपम् |
---|---|---|
सम, अव, प्र, वि | तिष्ठति (धातुः स्था) | समतिष्ठते अवतिष्ठते प्रतिष्ठते वितिष्ठते |
सम् | गच्छति (गम्) | समगच्छते |
वि, परा | जयति (जि) | विजयते पराजयतौ |
वि | क्रीणाति (क्री) | विक्रीणीते |
उपसर्गः | आत्मनेपदी-क्रियारूपम् | उपसर्गयुक्त-परस्मैपदी- क्रियारूपम् |
---|---|---|
वि, आ, परि | रमते (रम्) | विरमति आरमति परिरमति |
अलम् + करोति = अलङ्करोति (அலங்கரித்தல்)
बहिस् + करोति = बहिष्करोति (நிராகரித்தல்)
अन्तर् + भवति = अन्तर्भवति (உள்ளடங்குதல், இடம் பெறுதல்)
स्वी + करोति = स्वीकरोति (பெறுதல், ஏற்றுக்கொள்ளல்)
उष्णी + करोति = उष्णीकरोति (வெப்பமடைய செய்தல்)
सज्जी + करोति = सज्जीकरोति (தயார் செய்தல்,அலங்கரித்துக் கொள்ளல்)
நாம் முதலில் உபஸர்கங்களுடன் சேர்ந்த க்ரியா பதங்களின் பரிச்சயம் பெறலாம். நாம் முன்பு கற்ற சில க்ரியா பதங்களையும் இங்கே நினைவு கூற இயலும். க்ரியா பதங்களின் தமிழ் அல்லது ஆங்கில பொருளும் ஒப்பிட்டு விளங்கிக் கொள்ளும் வகையில் அளிக்கப்பட்டுள்ளன.
उपसर्गः | धातुः | क्रियापदम् | उपसर्गसहितक्रियापदम् |
---|---|---|---|
आ | गम् | गच्छति (செல்கிறான்) | आगच्छति (வருகிறான்) |
नी | नयति (எடுத்து செல்கிறான்) | आनयति (கொண்டு வருகிறான்)) | |
अधि | वस् | वसति (வாழ்கிறான்) | अधिवसति (வாழ்கிறான், இருக்கிறது) |
अनु | वद् | वदति (சொல்கிறான்) | अनुवदति (திருப்பி சொல்கிறான்) |
धा | धावति (ஓடுகிறான்) | अनुधावति (பின் தொடர்ந்து ஒடுகிறான்) | |
कृ | करोति (செய்கிறான்) | अनुकरोति (பின்பற்றுகிறான்) | |
अप | कृ | करोति (செய்கிறான்) | अपकरोति (பரிக்கிறான்) |
अभि | ज्ञा | जानाति (அறிகிறான்) | अभिजानाति (Be aware of ) |
अव | गम् | गच्छति (செல்கிறான்) | अवगच्छति (Understands) |
नम | नमति (நமஸ்கரிக்கிறான்) | अवनमति (வணங்குகிறான்) | |
उत् | पत् | पतति (விழுகிறது) | उत्पतति (குதிக்கிறது) |
स्था | तिष्ठति (நிற்கிறான்) | उत्तिष्ठति (எழுகிறான்) | |
उप | कृ | करोति (செய்கிறான்) | उपकरोति (உதவுகிறான்) |
नि | क्षिप् | क्षिपति (எறிகிறான்) | निक्षिपति (Deposits, Invests) |
परा | भू | भवति (இருக்கிறான்) | पराभवति (Defeats/Gets defeated) |
परि | पाल | पालयति (வளர்க்கிறான்) | परिपालयति (காக்கிறான்) |
पृच्छ | पृच्छति (கேட்கிறான்) | परिपृच्छति (விரிவாக கேட்கிறான்) | |
प्र | नम् | नमति (நமஸ்கரிக்கிறான்) | प्रणमति (Makes Obeisance) |
हृ | हरति (Takes away) | प्रहरति (Beats) | |
क्षाल् | क्षालयति (Cleans) | प्रक्षालयति (Cleans thoroughly) | |
वि | लिख् | लिखति (எழுதுகிறான்) | विलिखति (விரிவாக எழுதுகிறான்) |
हृ | हरति (Takes away) | विहरति (Roams ) | |
स्मृ | स्मरति ((நினைத்தல்) | विस्मरति (மறத்தல்) | |
सम् | ग्रह | गृह्णाति (Holds) | सङ्गृह्णाति (Holds together) |
हृ | हरति (Takes away) | संहरति (Kills) |
கீழ்க்காணும் பட்டியலில் அனைத்து உபஸர்கங்களும் அவை உணர்த்தும் பொருள்களுடன் தரப்பட்டுள்ளன. உதாஹரண வாக்கியங்கள் மேலும் தெளிவுப்படுத்துகின்றன.
उपसर्गः | सूचितः अर्थः | वाक्ये प्रयोगः |
---|---|---|
प्र | More, Forward | गङ्गा हिमालयात् प्रभवति । கங்கை இமயத்தில் உருவாகிறது. |
परा | Down, Backward | विद्वान् मूढं पराभवति । அறிஞன் மூடனை தோற்கடிக்கிறான். |
अप | Near, to ; Away, Separation | चोरः स्यूतम् अपहरति । திருடன் பையை அபகரிக்கிறான். |
सम् | Near, to , Away, Separation | छात्राः सङ्गच्छन्ति । மாணவர்கள் ஒருமித்து செல்கின்றனர். |
अनु | Behind | सीता रामम् अनुगच्छति । சீதை இராமனை பின் தொடர்கிறாள். |
अव | Down | अहं पाठम् अवगच्छामि । நான் பாடத்தை புரிந்துக் கொள்கிறேன். |
निस् | Out, Far away, Without | सर्पः बिलात् निस्सरति । பாம்பு பொந்திலிருந்து வெளி வருகிறது. |
निर् | Out | सः गृहात् निर्गच्छति । அவன் வீட்டிலிருந்து வெளியேறுகிறான். |
दुस् | Bad, Wicked | धनस्य दुष्प्रयोजनं मा करोतु । செல்வத்தை வீணாக்காதே. |
दुर् | Difficult | धर्मश्रेष्टाः दुर्लभाः । தர்மவான்கள் அறிதானவர்கள். |
वि | Contrary, Particular | धर्मः एव विजयते । தர்மமே வெற்றி பெறுகிறது. |
आ | To, From, Upto, Backwards | सर्वे तत्र आगच्छन् । அனைவரும் அங்கு வந்திருந்தார்கள். |
नि | In, More | वृक्षेभ्यः पत्राणि निपतन्ति । இலைகள் மரங்களிலிருந்து விழுகின்றன. |
अधि | Above | पुस्तकम् उत्पीठिकाम् अधिवसति । புத்தகம் மேசையின் மேல் இருக்கிறது. |
अति | Beyond | अत्याचारं मा करोतु । அட்டூழியம் செய்யாதே. |
अपि | Also, To cover | वर्षकाले नदी तटे अपिसरति । மழை காலத்தில் நதி கரையை மூடுகிறது. |
सु | Good | उद्याने पुष्पाणि सुशोभन्ते । பூங்காவில் பூக்கள் அழகுடன் காணப்படுகின்றன. |
अभि | Towards | अध्यापकः विद्यालयम् अभिगच्छति । ஆசிரியர் பள்ளியை நோக்கி செல்கிறார். |
प्रति | Towards, Against | पुत्री मातरं प्रतिवदति । மகள் தாயிடம் பதில் கூறுகிறாள். |
परि | Around | आचार्यः शिष्यं परीक्षते । ஆசிரியர் மாணவனை பரிசோதிக்கிறார். |
उप | Near, To | सर्वे मन्दिरम् उपगच्छन्ति । அனைவரும் கோவிலின் அருகே செல்கின்றனர். |
उद् | Up | अङ्गुरः भूमेः उद्गच्छति । நாற்று மண்ணிலிருந்து வெளிவருகின்றது. |
किञ्चित् अभ्यासं कृत्वा पाठं समापयाम । அப்பியாசத்துடன் பாடத்தை நிறைவு செய்வோம்.
प्रतिष्ठते - प्रथम-पुरुषः एकवचनम् आत्मनेपदरूपम्
प्रतिष्ठते प्रतिष्ठेते प्रतिष्ठन्ते
प्रतिष्ठसे प्रतिष्ठेथे प्रतिष्चध्वे
प्रतिष्ठे प्रतिष्ठावहे प्रतिष्ठामहे
இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......
இதுவரை கற்ற பாடங்களிலிருந்து உபஸர்கங்கள் மற்றும் நிகழ்கால வினைச்சொற்களுடன் நமக்கு பரிச்சயம் கிடைத்துள்ளது. இப்பாடத்தில் தாதுவின் பின்னே ப்ரத்யயங்கள் (प्रत्ययाः) இணைந்து உருவாகிய நாம பதங்களைக் கண்டோம். இவ்வாறு உருவாகும் சில நாம பதங்கள் இறந்த கால செயலைக் குறிக்கின்றன. அத்தகைய ஒரு ப்ரயோகத்தை அடுத்த பாடத்தில் கற்க இருக்கிறோம்.
பாடம் 12: க்தவது ப்ரயோகம்- क्तवतु प्रयोगः
0 comments |
To get updates on
संस्कृतवीथी...