ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 12 - க்தவது ப்ரயோகம்

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - द्वादशः पाठः - क्तवतु-प्रयोगः

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • क्तवतु-प्रत्ययः – க்தவது ப்ரத்யய:

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்தின் ஸம்பாஷணம் அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தப் படும் சில அவ்யய பதங்களை (अव्ययानि) கேட்கலாம். கவனிக்க வேண்டிய சொற்கள் highlight செய்யப்பட்டுள்ளன.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் - सम्भाषणाभ्यासः
कुत्र अस्ति ?
ध्वनिमुद्रिका कुत्र अस्ति ?सङ्गणकस्य उपरि अस्ति ।
वसतिमन्दिरम् मन्दिरस्य दक्षिणतः अस्ति ।
शकटः मन्दिरस्य पुरतः अस्ति ।
कुक्कुरः शकटस्य अधः तिष्ठति ।
फलं शकटस्य उपरि अस्ति ।
कुतः? किम्? कुत्र?
अहम् इतः तत्र गच्छामि ।
भवान् ततः अत्र आगच्छतु ।
इतः लेखनीं नयतु ।
भवान् ततः कूपिम् आनयतु ।
धनस्यूतं ततः अत्र प्रेषयतु ।
ततः पुस्तकम् आनयतु ।
दण्डःहस्ततः (न)पतति
चषकः
उपनेत्रम्
फलम्वृक्षतः
भवान् कुतः आगच्छति?
अहम्गृहतःआगच्छामि
चित्रमन्दिरतः
देवालयतः
मन्दिरतः
विद्यालयतः
उज्जैनीतः/चेन्नैतः /लख्नौतः
विदेशतः
नगरतः
वनतः/अरण्यतः
वाटिकातः
चन्द्रमण्डलतः
कथं वदति भषति / गर्जति / गच्छति / लिखति?शनैः – उच्चैः – शीघ्रम् - मन्दम्
शुभाङ्गी शनैः वदति ।
प्रसन्नः उच्चैः वदति ।
अहं शीघ्रं गच्छामि ।
भवती मन्दं लिखति ।
कुक्कुरः उच्चैः भषति ।
सिंहः उच्चैः गर्जति ।
अहं मन्दम् आगच्छामि ।
शीघ्रं लिखतु ।
सुधाखण्डं तस्मै/तस्यै ददातु।
कथम् अस्ति ?
अहं सम्यक् लिखामि ।माधुरी सम्यक् गायति ।
कदा उत्तिष्ठति / भोजनम् करोति ?
भोजने किम् खादति ?
अन्नम्खादामि ।
रोटिकाम्
लड्डुकम्
भोजने अन्नेन सह क्वथितं, सारम्, व्यञ्जनम्, लवणं च सन्ति
भोजनानन्तरम् आम्रफलम् खादामि ।भोजनस्य अन्ते तक्रं पिबामि ।

क्तवतु-प्रत्यय-प्रस्तावः – க்தவது ப்ரத்யய: - அறிமுகம்

ஸம்ஸ்க்ருத பதங்கள் உருவாகுவதில் प्रत्ययाः ( प्रत्ययः த்தின் பன்மை) முக்கிய பங்கு வகிக்கின்றன. மொழியின் வலிமைக்கு ப்ரத்யயங்கள் முக்கிய காரணங்களாகின்றன. தாதுக்களும் ப்ரத்யயங்களும் ஸம்ஸ்க்ருத மொழி ஆடையின் நேர் குறுக்கு இழைகளாக அமைகின்றன. ப்ரத்யயங்கள் தாதுக்கள் அல்லது ப்ராதிபதிங்களுடன் இணைந்து பொருளுடைய பதங்கள் உருவாகின்றன. இப்பாடத்தில் முதலாவதாக ‘क्तवतु प्रत्ययः’ பற்றி கற்க இருக்கிறோம்.



ஸம்ஸ்க்ருத மொழியில் ‘कृत् प्रत्ययाः’ தாதுக்களுடன் மட்டுமே இணையக்கூடியவை. क्तवतु प्रत्ययः அக்குழுவில் இடம் பெற்றுள்ளது. धातवः, क्तवतु प्रत्ययः உடன் இணைந்து உருவாகும் நாம பதங்கள் இறந்த கால செயலை சுட்டி காட்டுகின்றன.

क्तवतु प्रयोगाः भूतकाल-क्रियाः सूचयन्ति ।

கீழ்க் காணும் உதாஹரணத்தை கவனியுங்கள்.

रमेशः गृहं गतवान् ।

இவ்வாக்கியம் தமிழில் “ரமேஶ் வீட்டுக்கு சென்றவனாயிருந்தான்” என்று மொழி பெயர்க்கப் படுகிறது. ஸாதாரணமாக “ரமேஶ் வீட்டுக்கு சென்றான்” என்று பொருள் படுகிறது. இத்தகைய வாக்கியம் பெண் பெயருடன் எப்படி அமைகிறது என்பதை பார்க்கலாம்.

सीता गृहं गतवती । - சீதா வீடு சென்றாள்.

गम् धातुः வுடன் क्तवतु-प्रत्ययः இணந்து गतवान् , गतवती என்ற சொற்கள் உருவாகின்றன. இவை இறந்த கால செயலை உணர்த்த முறையே ஆண் பெண் பால் எழுவாயுடன் (Subject) உடன் சேர்ந்து வாக்கியங்கள் அமைகின்றன. क्तवतु ப்ரயோகத்தின் பல பலன்களை நாம் பின் வரும் நிலைகளில் முழுமையாக கற்க இருக்கிறோம்.

இறந்த கால செயலை உணர்த்தும் நேரிடையான க்ரியா பதங்கள் எவை ? தாதுக்களுடன் இணைந்து இறந்த கால க்ரியா பதங்களை உருவாக்கும் लङ् लकारः த்தை பற்றி அடுத்த பாடத்தில் கற்க இருக்கிறோம்.

எதனால் தாது ப்ரத்யயங்களைக் கொண்டு உருவாகும் இறந்த காலத்தை உணர்த்தும் நாம பதங்களை முதலில் கற்கிறோம்? பதில்......

துடக்க நிலையில் लङ् लकारः வடிவங்களைக் காட்டிலும் क्तवतु-प्रयोगः கற்பதற்கு எளிதாக உள்ளது.

क्तवतु-प्रत्ययान्ताः – ‘क्तवतु’ வடிவங்கள்

தாதுவுடன் क्तवतु प्रत्ययः இணைந்து உருவாகும் பதங்கள் क्तवतु-प्रत्ययान्ताः என்று அறியப்படுகின்றன. இப்பதங்கள் பொதுவாக எவ்வாறு அமைகின்றன என்பதைக் கீழ் வரும் படத்தில் காட்டியுள்ளோம். क्तवतु-प्रत्ययान्ताः நாமபதங்கள். அதனால் அவை லிங்கம், எண் மற்றும் விபக்தி அனுசரித்து மாற்றம் அடைகின்றன. படத்தில் மூன்று லிங்கங்களிலும் प्रथमा-एकवचनम् ரூபங்களை காண்கிறோம்.

புல்லிங்க, ஸ்த்ரீ லிங்க, நபும்ஸக லிங்க க்தவது பதங்கள் प्रथमा-एकवचनम् த்தில் முறையே ‘न्’ ,’ती’, ‘त्’ என்ற முடிவுகளைக் கொண்டுள்ளன. மற்ற வசனங்களிலுள்ள வடிவங்களையும் கீழ்க் காணும் படத்தில் காணலாம்.

क्तवतु-पदानि நாம பதங்களானதால் அனைத்து விபக்திகளிலும் வடிவங்களை ஏற்கின்றன. புல்லிங்க, நபும்ஸக லிங்க க்தவது ப்ராதிபதிகங்கள் ஹலந்தங்கள் (हलन्ताः). ஸ்த்ரீ லிங்க க்தவது பதங்கள் ‘नदी’ ஸப்தத்தைப் போல் மாற்றங்களை ஏற்கின்றன. இப்பாடத்தில் प्रथमा विभक्तिः வடிவங்களை மற்றும் கற்க இருக்கிறோம். செயலை இறந்த காலத்தில் காட்ட தற்பொழுது இவை போதுமானவை.

क्तवत्वान्तपद-कोष्टकम् – க்தவத்வாந்த பதங்களின் பட்டியல்

அனைத்து क्तवतु வடிவங்களும் ஒரே விதத்தில் அமைவதில்லை. தொடக்க நிலையில் இவ்வடிவங்களை மனப்பாடம் செய்ய வேண்டும். நாம் இதுவரைக் கற்ற நிகழ்கால (लट्) க்ரியா பதங்களுக்குரிய க்த்வாந்தங்களை கொடுத்துள்ளோம். ஒன்று போலத் தோன்றும் வடிவங்கள் சேர்த்து காட்டப்பட்டுள்ளன. பட்டியலை க்ளிக் செய்து pdf file ஐ download செய்யலாம்.


Meaningलट्-रूपम्क्तवतु-रूपाणि
पुल्लिङ्गेस्त्रीलिङ्गेनपुंसके
Readsपठतिपठितवान्पठितवतीपठितवत्
Fallsपततिपतितवान्पतितवतीपतितवत्
Playsक्रीडतिक्रीडितवान्क्रीडितवतीक्रीडितवत्
Writesलिखतिलिखितवान्लिखितवतीलिखितवत्
Meetsमिलतिमिलितवान्मिलितवतीमिलितवत्
Eatsखादतिखादितवान्खादितवतीखादितवत्
Accusesनिन्दतिनिन्दितवान्निन्दितवतीनिन्दितवत्
Sendsप्रेषयतिप्रेषितवान्प्रेषितवतीप्रेषितवत्
Cleansप्रक्षालयतिप्रक्षालितवान्प्रक्षालितवतीप्रक्षालितवत्
Placesस्थापयतिस्थापितवान्स्थापितवतीस्थापितवत्
Suggestsसूचयतिसूचितवान्सूचितवतीसूचितवत्
Gets Upउत्तिष्ठतिउत्थितवान्उत्थितवतीउत्थितवत्
Sitsउपविशतिउपविष्टवान्उपविष्टवतीउपविष्टवत्
Drinksपिबतिपीतवान्पीतवतीपीतवत्
Likesइच्छतिइष्टवान्इष्टवतीइष्टवत्
Goesगच्छतिगतवान्गतवतीगतवत्
Comesआगच्छतिआगतवान्आगतवतीआगतवत्
Takesनयतिनीतवान्नीतवतिनीतवत्
Bringsआनयतिआनीतवान्आनीतवतीआनीतवत्
Doesकरोतिकृतवान्कृतवतीकृतवत्
Hearsशृणोतिश्रुतवान्श्रुतवतीश्रुतवत्
Remembersस्मरतिस्मृतवान्स्मृतवतीस्मृतवत्
Receivesस्वीकरोतिस्वीकृतवान्स्वीकृतवतीस्वीकृतवत्
Callsआह्वयतिआहूतवान्आहूतवतीआहूतवत्
Tellsवदतिउक्तवान्उक्तवतीउक्तवत्
Seesपश्यतिदृष्टवान्दृष्टवतीदृष्टवत्
Asksपृच्छतिपृष्टवान्पृष्टवतीपृष्टवत्
Discardsत्यजतित्यक्तवान्त्यक्तवतीत्यक्तवत्
Knowsजानातिज्ञातवान्ज्ञातवतीज्ञातवत्
Givesददातिदत्तवान्दत्तवतीदत्तवत्
Buysक्रीणातिक्रीतवान्क्रीतवतीक्रीतवत्
Criesरोदितिरुदितवान्रुदितवतीरुदितवत्
Is ableशक्नोतिशक्तवान्शक्तवतीशक्तवत्

क्तनतु பதங்களின் ஒருமை வடிவங்களே மூன்று லிங்கங்களிலும் கொடுக்கப் பட்டுள்ளன. இவற்றிற்குரிய இருமை பன்மை வடிவங்களை எழுதி பழகவும்

क्तवतु-प्रयोगः – उदाहरणानि

பூதகால செயலை உணர்த்த क्तवतु-प्रयोगः ஒரு எளிமையான முறை என்று கண்டோம். அது எதனால்? லகாரங்களைப் போல் அல்லாமல் क्तवतु-प्रयोगः த்தில் நாம் லிங்கத்தையும் வசனத்தையும் தான் கவனிக்க வேண்டும். ப்ரதம, மத்யம உத்தம புருஷ நிலைகள் क्तवतु-प्रयोगः த்தை பாதிப்பதில்லை. எடுத்துக்காட்டாக...

क्तवतु – उदाहरणानि - एकवचनम्
पुल्लिङ्गेस्त्रीलिङ्गे
कृष्णः लिखितवान् ।
க்ருஷ்ணன் எழுதினான்.
राधा लिखितवती ।
ராதா எழுதினாள்.
त्वम् लिखितवान् ।
நீ (ஆண்) எழுதினாய்.
त्वम् लिखितवती ।
நீ (பெண்) எழுதினாய்.
अहम् लिखितवान् ।
நான் (ஆண்) எழதினேன்.
अहम् लिखितवती ।
நான் (பெண்) எழதினேன்.

உதாஹரணங்கள் क्तवतु ப்ரயோகத்தின் சுலபத்தை தெளிவாக காட்டுகின்றன. இப்பொழுது द्विवचनम् மற்றும் बहुवचनम् ஆகியவற்றில் क्तवतु வடிவங்களைக் காணலாம், நம்முடைய ஸம்ஸ்க்ருத கல்வியின் இந்நிலையில் नपुंसक ப்ரயோகத்தின் தேவை குறைவு. அதனால் புல்லிங்க ஸ்த்ரீ லிங்க எடுத்துக்காட்டுகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று லிங்கங்களிலும் அமைந்த क्तवतु ப்ரயோகங்களை விவரமாக அடுத்தப் படிவில் கற்க இருக்கிறோம்.

क्तवतु – उदाहरणानि - द्विवचनम्
पुल्लिङ्गेस्त्रीलिङ्गे
तौ लिखितवन्तौ ।
அவர் இருவரும் (ஆண்) எழுதினார்கள்.
ते लिखितवत्यौ ।
அவர் இருவரும் (பெண்) எழுதினார்கள்.
युवां लिखितवन्तौ ।
நீங்கள் இருவரும் (ஆண்) எழுதினீர்கள்.
युवां लिखितवत्यौ ।
நீங்கள் இருவரும் (பெண்) எழுதினீர்கள்.
आवां लिखितवन्तौ ।
நாம் இருவரும் (ஆண்) எழுதினோம்.
आवां लिखितवत्यौ ।
நாம் இருவரும் (பெண்) எழுதினோம்.


क्तवतु – उदाहरणानि - बहुवचनम्
पुल्लिङ्गेस्त्रीलिङ्गे
बालकाः लिखितवन्तः ।
பாலகர்கள் எழுதினார்கள்.
बालिकाः लिखितवत्यः ।
பாலிகைகள் எழுதினார்கள்.
यूयं लिखितवन्तः ।
நீங்கள் (ஆண்) எழுதினீர்கள்.
यूयं लिखितवत्यः ।
நீங்கள் (பெண்) எழுதினீர்கள்
वयं लिखितवन्तः ।
நாம் (ஆண்) எழுதினோம்
वयं लिखितवत्यः ।
நாம் (பெண்) எழுதினோம்.

अस्तु। பூதகாலத்தை உணர்த்தும் क्तवतु ப்ரயோகங்களை ஸம்ஸ்க்ருதம் படிக்கும் பொழுதும் கேட்கும்பொழுதும் கவனியுங்கள்.

தற்சமயம் क्तवतु-प्रयोगः பரிச்சயம் கூடுதல் பெற அப்பியாசம் செய்வோம்.
इदानीम् अभ्यासः करणीयः ।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. காலிக்கட்டங்களை உரிய क्तवतु பதங்களால் நிரப்புக. कोष्टकस्य रिक्ताः कोशाः उचितैः क्तवतु-रूपैः पूरयत।
    पुल्लिङ्गे
    लट्-रूपम्एकवचनम्द्विवचनम्बहुवचनम्
    तिष्ठतिस्थितवान्
    हसतिहसितवन्तः
    नमतिनतवन्तौ
    कथयतिकथितवान्
    पश्यतिदृष्टवन्तौ
    भ्रमतिभ्रमितवन्तौ
    लिखतिलिखितवान्
    पिबतिपीतवन्तः
    करोतिकृतवन्तः
    पृच्छतिपृष्टवान्
    स्त्रीलिङ्गे
    गच्छतिगतवती
    पश्यतिदृष्टवत्यौ
    वदतिउदितवती
    कूजतिकूजितवत्यः
    शृणोतिश्रृतवत्यौ
    नयतिनीतवती
    गायतिगीतवत्यः
    खादतिखादितवत्यौ
    क्रीडतिक्रीडितवती
    लिखतिलिखितवत्यः

  2. क्तवतु பதங்களின் லிங்கத்தை மாற்றவும். क्तवतु पदानाम् लिङ्ग-परिवर्तनम् कुरुत.

    उदाहरणम्

    उदितवान्
    पुल्लिङ्ग-एकवचन रूपम्.
    स्त्रीलिङ्ग-एकवचने ‘उदितवती’ इति परिवर्तते ।

    1. स्थितवत्यौ
    2. कूजितवान्
    3. चलितवान्
    4. पठितवत्यः
    5. कथितवन्तौ
    6. पतितवन्तः
    7. नीतवती
    8. नतवत्यौ
    9. पृष्टवान्
    10. खादितवत्यः

  3. क्तवतु-रूपाणि உபயோகித்து வாக்கியங்களை இறந்த காலத்தில் எழுதவும். क्तवतु-रूपाणि उपयुज्य भूतकाल-क्रियां बोधयतु ।

    उदाहरणम्

    अहं कार्यं करोमि । → अहं कार्यं कृतवान् / कृतवती ।

    1. वयम् संस्कृतं पठामः ।
    2. सः भोजनं खादति ।
    3. सा कथां लिखति ।
    4. त्वम् इच्छसि ।
    5. ते गानं गायतः ।
    6. ते ग्रामं गच्छन्ति ।
    7. बालौ श्लोकं वदतः ।
    8. व्याधः मृगं मारयति ।
    9. भवत्यः शैलं पश्यन्ति ।
    10. आवां देवं नमथः ।

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

பூதகால செயல் क्तवतु-प्रयोगः குறிப்பாக உணர்த்துவதை இப்பாடத்தில் கற்றோம். இறந்த காலத்தில் क्रियापदम् எவ்வாறு அமைகிறது? लङ्-लकारः த்தில் தோன்றும் பூதகால வினை சொற்களை தொடரும் பாடத்தில் கற்க இருக்கிறோம்.
பாடம் 13: ஸம்ஸ்க்ருத இறந்த கால வடிவங்கள் பாகம் - 1- भूतकाले लङ् १

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...