ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 13 - ஸம்ஸ்க்ருத இறந்த கால வடிவங்கள் பாகம் - 1

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - त्रयोदशः पाठः - भूतकाले लङ् १

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • ஸம்ஸ்க்ருத இறந்த கால வடிவங்கள் பாகம் - 1 - भूतकाले लङ् १

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டள்ள संभाषण-वर्गः வீடியோ द्वितीया-विभक्ति-प्रयोगः த்திற்கான பயிற்சியாக அமைந்துள்ளது. உடன் ப்ராதிபதிகங்களுடன் ‘तः’ (तसिल्) ப்ரத்யயங்கள் இணைந்து உருவாகும் அமைப்புகளையும் காண்கிறோம்.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் - सम्भाषणाभ्यासः
किं पठामि / जानामि ?
अहं ग्रन्थं पठामि ।अहं विज्ञानं जानामि ।
भवान् / भवन्तः / भवती / भवत्यः कं कां पृच्छतु? / पृच्छन्तु?
अहं नकुलं पृच्छामि ।अहं स्वातिं पृच्छामि ।
अहं रञ्जितां पृच्छामि ।
रामःअनन्तम्पृच्छति ।
रमेशं
भारतीं
लतां
गीतां
सुरेशं
मालतीं
अमरं
गृहतः, विदेशतः, विद्यालयतः, आपणतः, वित्तकोषतः, मार्गतः, कार्यालयतः, हिमालयतः, वृक्षतः, वाटिकातः, सञ्चिकातः, स्थालिकातः, नदीतः, लेखनीतः, कूपितः, मन्दिरतः, पुष्पतः
कुतः किं स्वीकरोति
अहंपेटिकातः उपनेत्रंस्वीकरोमि
कूपीतः जलं
सञ्चिकातः पत्रं
शारदातः लेखनीं
यतीन्द्रतः करवस्त्रं
कोषतः लेखनीं
कुतः किं आनयन्ति ?
अहंवित्तकोषतः धनम्आनयामि
नदीतः जलम्
अरण्यतः फलम्
आपणतः / शालातः पुस्तकम्
विद्यालयतः सुधाखण्डम्
वाटिकातः पुष्पम्
कुतः कुत्र गच्छति ?
अहंआपणतः मन्दिरं गच्छामि
हिमालयतः स्वर्गं
किमर्थम् ?
अहंज्ञानार्थंपठामि
पिपासा निवारणार्थं जलंपिबामि
अहंआनन्दार्थंनृत्यं करोमि
ध्यानं करोमि
शान्त्यर्थंगीतं गायामि
रामायणं पठामि
अपि
यतीन्द्रः उत्तिष्ठति,
आदित्यः अपि उत्तिष्ठति ।
श्रीनिका लिखति,
शारदा अपि लिखति ।
सः नाटकं पश्यति, चलचित्रं अपि पश्यति ।
अस्तु ! धनं ददातु ।विद्यां ददातु । तथास्तु !

भूतकाले लङ्

ஸம்ஸ்க்ருதத்தில் தாதுவுடன் ‘लङ् लकारः’ இணைந்து இறந்த கால (भूतकालः) க்ரியா பதங்கள் உருவாகின்றன.

பட்டியலில் படங்களுடன் अस्-धातुः (अस्ति முதலான க்ரியா பதங்கள்)வின் பூதகால வடிவங்கள் விளக்கப்பட்டுள்ளன.

प्रथमपुरुषः
अधुना पुष्पम्
अस्ति ।
पूर्वं कलिका
आसीत् ।
अधुना पुष्पे स्तः ।पूर्वं कलिके
आस्ताम् ।
अधुना पुष्पाणि
सन्ति।
पूर्वं कलिकाः
आसन् ।
मध्यमपुरुषः
त्वं अधुना जननी
असि ।
पूर्वं त्वं बालिका
आसीः ।
युवां अधुना जनन्यौ
स्थः ।
पूर्वं युवां वालिके
आस्तम् ।
यूयं अधुना जनन्यः
स्थ ।
पूर्वं यूयं बालिकाः
आस्त ।
उत्तमपुरुषः
अहम् अधुना अध्यापकः अस्मि ।पूर्वं अहं छात्रः
आसम् ।
आवाम् अधुना अध्यापकौ स्वः ।पूर्वं आवां छात्रौ
आस्व ।
वयम् अधुना अध्यापकाः स्मः ।पूर्वं वयं छात्राः
आस्म ।

अस्-धातुः – लङ्-रूपाणि उदाहरणानि च

மேலே ‘अस् धातुः’ வின் ‘लट्’ வினைச் சொற்களுக்குரிய ‘लङ्’ வடிவங்கள் தெளிவாகக் காட்டப் பட்டுள்ளன. இவை தமிழிலிலுள்ள இருந்தான், இருந்தனர் முதலானவையைப் போன்றவை. இப்பொழுது ‘अस् धातुः’ வின் लङ् வடிவங்களை पुरुष மற்றும் वचनम् த்துடன் முறையாக இணைத்த பட்டியலைக் காணலாம்.

लङि ‘अस्’ धातोः परस्मैपदरूपाणि – ‘अस्’ இறந்த கால வடிவங்கள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःआसीत्आस्ताम्आसन्
मध्यमपुरुषःआसीःआस्तम्आस्त
उत्तमपुरुषःआसम्आस्वआस्म

நேற்று, இன்று போன்றவற்றின் ஸம்ஸ்க்ருத பெயர்களை ‘நேரம் பார்க்கலாம்’ என்ற பாடத்தில் கற்றோம். அவற்றை க்ரியா பதங்களுடன் இணைத்து மீண்டும் கற்போம்

अद्य
இன்று
दशदिनाङ्गः अस्ति
रविवासरः
ह्यः
நேற்று
नवदिनाङ्गःआसीत्
शनिवासरः
परह्यः
நேற்றைய முன் தினம்
अष्टदिनाङ्गः
शुक्रवासरः
प्रपरह्यः
நேற்றைக்கு இரண்டு நாட்கள் முன்பு
सप्तदिनाङ्गः
गुरुवासरः

भू-धातुः – लङ्-रूपाणि उदाहरणानि च

அனைத்து லகாரங்களிலும் अस्-धातुः விசேஷ க்ரியா ரூபங்களைக் கொண்டுள்ளது. अस्-धातुः வைப் போல் இருப்பு என்ற பொருளை உணர்த்தும் भू-धातुः சாமான்ய க்ரியா ரூபங்களை ஏற்கிறது. இப்பாடத்தில் भू-धातुः வின் लङ् (பூத கால) வடிவங்களையும், சில உதாஹரண வாக்கியங்களையும் காண இருக்கிறோம். பூத கால க்ரியா பதங்களை உருவாக்கும் பொது விதிகளை அடுத்த பாடத்தில் கற்க இருக்கிறோம்.

लङि ‘भू’ धातोः परस्मैपदरूपाणि – ‘भू’ இறந்த கால வடிவங்கள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअभवत्अभवताम्अभवन्
मध्यमपुरुषःअभवःअभवतम्अभवत
उत्तमपुरुषःअभवम्अभवावअभवाम

भू-धातुः வின் பூதகால வடிவங்களை உடைய சில உதாஹரண வாக்கியங்களைக் காணலாம்.

प्रथमपुरुषः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
वृक्षः पूर्वम् अङ्कुरः अभवत् ।
மரம் முதலில் நாற்றாக இருந்தது.
तरुणौ पूर्वं बालकौ अभवताम् ।
இளைஞர் இருவரும் முன்பு சிறுவர்களாக இருந்தனர்.
भवन्तः कार्यालये
अभवन् ।
நீங்கள் கார்யாலயத்தில் இருந்தீர்கள்.
मध्यमपुरुषः
त्वं कुत्र अभवः ?
நீ எங்கே
இருந்தாய் ?
ह्यः युवां गृहे
अभनतम् वा ?
நேற்று நீங்கள் இருவரும் வீட்டில் இருந்தீர்களா?
यूयं छात्राः अभवत ।
நீங்கள் மாணவராய் இருந்தீர்கள்.
उत्तमपुरुषः
अहं तत्र न अभवम् ।
நான் அங்கே இருக்கவில்லை.
आवां विद्यालये अभवाव ।
நாங்கள் இருவரும் பள்ளியில் இருந்தோம்.
वयं बालकाः अभवाम ।
நாங்கள் சிறுவர்களாய் இருந்தோம்.

किञ्चित् अभ्यासं कृत्वा समापयामः । சிறிது அப்பியாசம் செய்து பாடத்தை நிறைவு செய்வோம்.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. लङ् ரூபங்களை எழுதுக. लङ्-रूपाणि लिखत।
    1. अस्ति
    2. भवामि
    3. असि
    4. भवन्ति
    5. स्मः
    6. भवतः
    7. स्तः
    8. स्थ
    9. भवथः
    10. सन्ति

  2. அளித்துள்ள பதங்களை உபயோகித்து ஒன்று நிகழ் காலத்திலும் ஒன்று பூத காலத்திலுமாக இரு வாக்கியங்கள் எழுதுக. दत्तानि पदानि उपयुज्य लटि लङि च वाक्ये रचयत।

    उदाहरणम्

    सः, तरुणः, वृद्धः
    अधुना सः वृद्धः अस्ति / भवति ।
    पूर्वं सः तरुणः आसीत् / अभवत् ।

    1. ललिता, श्वेतकेशा, कृष्णकेशा (श्वेतकेशा – நறைத்த முடியுடைய, कृष्णकेशा – கறுத்த முடியுடைய)
    2. त्वम्, मूर्खः, चतुरः (मूर्खः – முட்டாள், चतुरः - புத்திசாலி)
    3. वयम्, धनिकाः, दरिद्राः (धनिकः – பணக்காரன், दरिद्रः - ஏழை)
    4. एतौ, क्रूरौ, शान्तौ (क्रूरौ - கொடிய, शान्तौ - சாந்தமான)
    5. फलानि, पक्वानि , अपक्वानि (पक्वानि - பழுத்த , अपक्वानि - பழுக்காத)
    6. रमेशः, पण्डितः, मन्दः (पण्डितः - அறிவுள்ள, मन्दः - அறிவில்லாத
    7. अहम्, अलसः, उद्यमशीलः (अलसः - சோம்பேறி, उद्यमशीलः - உழைப்பாளி)
    8. यूयम्, स्वस्थाः, रुग्णाः (स्वस्थः - ஆரோக்கியமான, रुग्णः - நோயுற்ற)
    9. आवाम्, बालकौ, शिशौ (बालकौ - சிறுவர், शिशौ - குழந்தைகள்)
    10. भवन्तः, दुर्जनाः, सज्जनाः (दुर्जनाः கெட்டவர் - , सज्जनाः - நல்லவர்)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

இப்பாடத்தில் ‘இருப்பை ‘ உணர்த்தும் ‘अस्’ மற்றும் ‘भू’ தாதுக்களின் लङ् (பூத கால) வடிவங்களைக் கற்றோம். ‘भू’ தாதுவின் இறந்த கால வடிவங்கள் அதிகமாக மற்ற தாதுக்களின் लङ् வடிவங்களுடன் பொருந்துகின்றன. लङ्-लकार பொது விதிகளை அடுத்தப் பாடத்தில் கற்க இருக்கிறோம்.
பாடம் 14: ஸம்ஸ்க்ருத இறந்த கால வடிவங்கள் பாகம் - 2 - भूतकाले लङ् २

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...