ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 14 - ஸம்ஸ்க்ருத இறந்த கால வடிவங்கள் பாகம் -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - चतुर्दशः पाठः - भूतकाले लङ् २

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • ஸம்ஸ்க்ருத இறந்த கால க்ரியா பதங்கள் அமையும் ஸாமான்ய முறை - भूतकाले लङ्

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

நம்முடைய संभाषण-वर्गः வீடியோவில் நாம் ஏழு முக்கிய வினாக்களை (सप्त-ककाराः) மீண்டும் கேட்கிறோம். சமீபத்தில் நாம் கற்ற क्तवतु ப்ரயோகங்களையும் பார்க்கிறோம்.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் - सम्भाषणाभ्यासः
सप्त ककाराः प्रश्नाःकिम्, कुत्र, कति, कदा, कुतः, कथम्, किमर्थम्
किम्
किं पठति?रामः पुस्तकं पठति ।
गीता पुस्तकं पठति ।
किं पिबति?लता जलं पिबति ।
तत् किं?तत् कृष्णफलकम् अस्ति ।
कुत्र
दण्डदीपः कुत्र अस्ति?दण्डदीपः अत्र अस्ति ।
लख्नौ/मथुरा कुत्र अस्ति?लख्नौ/मथुरा उत्तरप्रदेशे अस्ति ।
लाल्-भाग् कुत्र अस्ति?लाल्-भाग् बेङ्गलूरु नगरे अस्ति ।
अधिकारी कुत्र अस्ति?अधिकारी कार्यालये अस्ति ।
जनः कुत्र अस्ति?जनः गृहे अस्ति
कति
अत्र कति बालकाः सन्ति?अत्र नव बालकाः सन्ति ।
कति दण्डदीपाः सन्ति?नव दण्डदीपाः सन्ति ।
मार्गे कति वाहनानि गच्छन्ति?मार्गे नव वाहनानि गच्छन्ति ।
भवत्याः समीपे कति पुस्तकानि सन्ति?मम समीपे दश पुस्तकानि सन्ति ।
कदा
सूर्योदयः कदा भवति?सूर्योदयः प्रातः काले भवति ।
सूर्यास्तमः कदा भवति?सूर्यास्तमः सायङ्काले भवति ।
रामलालः कदा कार्यालयं गच्छति?रामलालः प्रातः काले कार्यालयं गच्छति ।
रसेश- कदा विद्यालयं गच्छति?रसेश- दशवादने विद्यालयं गच्छति ।
सुधा कदा नृत्याभ्यासं करोति?सुधा सायङ्काले नृत्याभ्यासं करोति ।
कुतः
मित्रं कुतः आगच्छति?मित्रं विदेशतः आगच्छति ।
बन्धुः कुतः आगच्छति?बन्धुः लख्नौतः आगच्छति ।
सखी कुतः आगच्छति?सखी चेन्नैतः आगच्छति ।
गङ्गा कुतः प्रवहति?गङ्गा हिमालयतः प्रवहति ।
प्रकाशः कुतः आगच्छति?प्रकाशः दणडदीपतः आगच्छति ।
कथम्
आरोग्यता कथम् अस्ति?आरोग्यता समीच्छीनम् अस्ति ।
स्वास्थ्यम् कथम् अस्ति?स्वास्थ्यम् उत्तमम् अस्ति ।
किमर्थम्
अनिता किमर्थं विद्यालयं गच्छति?अनिता पठनार्थं विद्यालयं गच्छति ।
राधाकृष्णः किमर्थं चिकित्सालयं गच्छति?राधाकृष्णः औषदार्थं चिकित्सालयं गच्छति ।
रमा किमर्थं ग्रन्थालयं गच्छति?रमा पठनार्थं ग्रन्थालयं गच्छति ।
सा किमर्थं नृत्यति?सा आनन्दार्थं नृत्यति ।
गृहिणी किमर्थं पाकशालां गच्छति?गृहिणी भोजनार्थं पाकशालां गच्छति ।
मञ्जुनाथः गृहं गतवान् ।भवन्तः एतेषाम् अर्थं सम्यक् ज्ञातवन्तः ।
गतवान्, आगतवान्, उपविष्टवान्, उपविष्टवति, पठितवान्, लिखितवान्, कृतवान्, पीतवती, लिखितवती ।
अम्बिके! उत्तिष्ठतु ।

लङ् – रूपसिद्ध्यर्थं सामान्यप्रक्रिया – பூதகால வடிவங்கள் ஸாமான்ய ப்ரக்ரியா

கடந்த பாடத்தில் भू (भव) धातुः வின் लङ् வடிவங்களைக் கற்றோம். அவ்வடிவங்களைக் கொண்டு தாதுவிலிருந்து பூத கால வடிவங்களை அமைக்கும் ஸாமானிய முறைகளை நம்மால் ஊகிக்க இயலும். அனைத்து தாதுகுகளையும் பாணினி மஹரிஷி பத்து கணங்களில் (धातु-गणाः). அதாவது குழுக்களில் அடக்கியுள்ளார். முதலாவது, நான்காவது, ஆறாவது மற்றும் பத்தாவது கணங்களில் இடம் பெற்றுள்ள தாதுக்களின் க்ரியா பதங்கள் ஏகதேசம் ஒத்த முறைகளால் அமைகின்றன. அதனால் இந்தப் பொது முறைகளைக் கொண்டு பெரும்பான்மையான தாதுக்களின் க்ரியா பதங்களைப் பெறலாம். விசேஷ க்ரியா பதங்களின் लङ् வடிவங்களை இப்பாடத்தின் பின் பகுதியில் கற்க இருக்கிறோம்.
துடக்க நிலையில் பலுவைக் குறைக்கும் வகையில் ஆத்மனே பதி தாதுக்களை இப்பாடத்தில் சேர்க்கவில்லை. அவற்றை தொடரும் பதிவில் கற்க இருக்கிறோம்.

लङ् – प्रथमपुरुष-रूपाणि

लङ् – प्रथमपुरुष-क्रियारूपाणि’ க்ரியா பதங்கள் அமையும் முறையை கீழேயுள்ள படம் விளக்குகிறது.

நமக்கு அறிமுகமான சில தாதுக்களின் ‘लङ् – प्रथमपुरुषः’ க்ரியா பதங்களை பட்டியலில் காண்கிறோம்.

लङि प्रथमपुरुष-रूपाणि
धातुः (सिद्धः)लटि (प्र.पु.ए)एकवचनेद्विवचनेबहुवचने
पठ्पठतिअपठत्अपठताम्अपठन्
खाद्खादतिअखादत्अखादताम्अखादन्
लिख्लिखतिअलिखत्अलिखताम्अलिखन्
नृत् (य)नृत्यतिअनृत्यत्अनृत्यताम्अनृत्यन्
चुर् (य)चोरयतिअचोरयत्अचोरयताम्अचोरयन्

लङ्-मध्यमपुरुष-रूपाणि

முதலில் மத்யம புருஷ ‘लङ्’ வடிவங்களுக்கான ப்ரக்ரியா.

இப்பொழுது ‘लङ्-मध्यमपुरुष-क्रियारूपाणि’ களின் பட்டியல்.

लङि मध्यमपुरुष-रूपाणि
धातुः (सिद्धः)लटि (प्र.पु.ए)एकवचनेद्विवचनेबहुवचने
पठ्पठतिअपठःअपठ्तम्अपठत
खाद्खादतिअखादःअखादतम्अखादत
लिख्लिखतिअलिखःअलिखतम्अलिखत
नृत् (य)नृत्यतिअनृत्यःअनृत्यतम्अनृत्यत
चुर् (य)चोरयतिअचोरयःअचोरयतम्अचोरयत

लङ्-उत्तमपुरुष-रूपाणि

இறுதியாக உத்தம புருஷ வடிவங்களைப் பெறும் முறை.

தொடர்வது ‘लङ्-उत्तमपुरुष-क्रियारूपाणि’ பட்டியல்.

लङि उत्तमपुरुष-रूपाणि
धातुः (सिद्धः)लटि (प्र.पु.ए)एकवचनेद्विवचनेबहुवचने
पठ्पठतिअपठतम्अपठावअपठाम
खाद्खादतिअखादम्अखादावअखादाम
लिख्लिखतिअलिखम्अलिखावअलिखाम
नृत् (य)नृत्यतिअनृत्यम्अनृत्यावअनृत्याम
चुर् (य)चोरयतिअचोरयम्अचोरयावअचोरयाम

மூன்று நிலைகளுக்குமான ஒருங்கிணைந்த அமைப்பு முறையைக் காண்கிறோம். நிகழ்கால இறுதி எழுத்தை நீக்கிய பின், முன் பகுதியில் ‘अ’ இணைக்கவும். உரிய முடிவுகளை பின்னர் சேர்க்கவும்.

लङि परस्मैपदप्रत्ययान्ताः – பூதகால விகுதிகள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअ + ___ + त्अ + ___ + ताम्अ + ___ + अन्
मध्यमपुरुषःअ + ___ + ःअ + ___ + तम्अ + ___ + त
उत्तमपुरुषःअ + ___ + अम्अ + ___ + आवअ + ___ + आम

உதாஹரண வாக்கியங்கள் – उदाहरणवाक्यानि

எடுத்துக்காட்டு வாக்கியங்கள் நமக்கு பரிச்சயமான தாதுக்களின் ‘लङ्’ வடிவங்களைக் கொண்டுள்ளன.

प्रथमपुरुषः
एकवचनेपिता कार्यालयम् अगच्छत् ।
தந்தை கார்யாளயம் சென்றார்.
द्विवचनेबालकौ अधावताम् ।
இரண்டு பாலகர்கள் ஓடினார்கள்.
बहुवचनेनर्तक्यः अनृत्यन् ।
நர்த்தகிகள் ஆடினார்கள்.
मध्यमपुरुषः
एकवचनेत्वं फलम् अखादः ।
நீ பழம் சாப்பிட்டாய்.
द्विवचनेयुवाम् गीतम् अगायतम् ।
நீங்கள் இருவரும் பாட்டு பாடினீர்கள்.
बहुवचनेयूयं अक्रीडत ।
நீங்கள் (அனைவரும்) விளையாடினீர்கள்.
उत्तमपुरुषः
एकवचनेअहं देवम् अनमम्।
நான் தேவனை வணங்கினேன்.
द्विवचनेआवाम् गुरुम् अपृच्छाव ।
நாம் இருவரும் குருவைக் கேட்டோம்.
बहुवचनेवयम् परीक्षाम् अलिखाम ।
நாங்கள் (அனைவரும்) பரீக்ஷை எழுதினோம்.

பொதுவான இறந்த கால வடிவங்களைப் பெறும் தாதுக்களைக் கீழே கொடுத்துள்ளோம். க்ளிக் செய்து ‘लङ्’ வடிவங்களைக் காணவும்.

पठ्लिख्गम्खाद्पा (पिब्)
प्रच्छ्स्थातॄनम्कृष्
नृत्रक्ष्भ्रमवद्हस्
पत्कुप्स्नाचर्वजप

लङि विशेषक्रियारूपाणि

இனி 7வது பாடத்தில் கற்ற விசேஷ தாதுக்களின் ‘लङ्’ வடிவங்களைக் கற்கலாம்.

लङि ‘ज्ञा’ (அறிதல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअजानात्अजानीताम्अजानन्
मध्यमपुरुषःअजानाःअजानीतम्अजानीत
उत्तमपुरुषःअजानाम्अजानीवअजानीम
लङि ‘क्री’ (வாங்குதல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअक्रीणात्अक्रीणीताम्अक्रीणन्
मध्यमपुरुषःअक्रीणाःअक्रीणीतम्अक्रीणीत
उत्तमपुरुषःअक्रीणाम्अक्रीणीवअक्रीणीम
लङि ‘कृ’ (செய்தல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअकरोत्अकुरुताम्अकुर्वन्
मध्यमपुरुषःअकरोःअकुरुतम्अकुरुत
उत्तमपुरुषःअकरवम्अकुर्वअकुर्म
लङि ‘श्नु’ (கேட்டல்) धातोः परस्मैपदरूपाणि
एकवचनम्द्विनचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअशृणोत्अशृणुताम्अशृण्वन्
मध्यमपुरुषःअशृणोःअशृणुतम्अशृणुत
उत्तमपुरुषःअशृणवम्अशृणुव , अशृण्वअशृणुम , अशृण्म

விசேஷ ‘लङ्’ வடிவங்களை அறிய தாதுக்களை க்ளிக் செய்யவும்.

ग्रहचिशक्दारुद्दृश्

विशेषक्रियापदानि களுக்கான பூதகால உதாஹரண வடிவங்களையும் பார்ப்போம்.

प्रथमपुरुषः
एकवचनेमाता पाककार्यं अकरोत्।
தாய் சமையல் வேலை செய்தாள்.
द्विवचनेबालिके गीतं अश्रुणुताम्।
இரு பெண்கள் பாடலைக் கேட்டார்கள்.
बहुवचनेछात्राः पुस्तकानि अक्रीणन् ।
மாணவர்கள் புத்தகங்களை வாங்கினார்கள்.
मध्यमपुरुषः
एकवचनेत्वं उत्तरम् अजानाः ।
நீங்கள் விடை அறிந்திருந்தீர்.
द्विवचनेयुवाम् गन्तुं अशक्नुतम्।
You two were able to go.
बहुवचनेयूयं नदीं अतरत।
You all swam the river.
उत्तमपुरुषः
एकवचनेअहं धनम् अददाम्।
நான் பணம் கொடுத்தேன்.
द्विवचनेआवाम् नाटकं अपश्याव ।
நாம் இருவரும் நாடகம் பார்த்தோம்.
बहुवचनेवयम् स्यूतम् अगृह्मीम ।
நாங்கள் (அனைவரும்) பையைப் பெற்றுக் கொண்டோம்.

उपसर्गसहित-धातूनां लङ्ररूपाणि

உபஸர்கங்கள் (उपसर्गाः) தாதுவின் முன் இணந்து தாதுக்களின் பொருள்களை கூட்டவோ, மாற்றவோ அல்லது வலிமைப்படுத்தவோ செய்கின்றன. உபஸர்கங்கள் இணந்த தாதுக்களின் ‘लङ्’ வடிவங்களைப் பெற ‘अ’ உபஸர்கத்திற்கும் தாதுவிற்கும் இடையில் இணைகிறது. உபஸர்க ஸஹித தாதுக்களில் ‘लङ्’ வடிவங்கள் உருவாகும் முறையைக் கீழேக் காணலாம்.

लटि क्रियापदम्लङि क्रियापदम्
आगच्छतिआ + अगच्छत् = आगच्छत्
प्रतिवदतिप्रति + अवदत् = प्रत्यवदत्
परिहरतिपरि + अहरत् = पर्यहरत्
अवगच्छतिअव + अगच्छत् = अवागच्छत्
विलिखतिवि + अलिखत् = व्यलिखत्
अनुकरोतिअनु + अकरोत् = अन्वकरोत्
निराकरोतिनिर् + आ + अकरोत् = निराकरोत्

வேறு சில இறந்தகால அமைப்புகளை கற்கும் முன் சிறிது பயிற்சி செய்யலாம். பூதகால வடிவங்களைத் திரும்ப திரும்ப படித்து முறைகளைக் கற்கவும். மனப்பாடமாக அறிய முயற்சி செய்யுங்கள். தொடக்கத்தில் கடினமாக தோன்றினாலும் பொது அமைப்புகளை அடையாளம் கண்டறிவதன் மூலம் கற்பது எளிதாகும்.
इदानीम् अभ्यासं कुर्म ।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. लट् வடிவங்களுடைய लङ् வடிவங்களை எழுதவும். उचितानि लङ्-रूपाणि लिखत।

    उदाहरणम्

    लिखति
    प्रथमपुरुषः एकवचनम्
    लङि - अलिखत्

    1. गच्छति
    2. स्नामि
    3. चर्वामि (to chew)
    4. जपसि
    5. क्रीडावः
    6. तर्जयन्ति
    7. तिष्ठत (स्था)
    8. पिबति
    9. धावथः
    10. रुदिमः

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும்.. दत्तानां वाक्यानां संकृत-अनुवादम् कुरुत ।
    1. அவர்கள் ஏரியில் நீந்தினார்கள். (ஏரியில் - सरोवरे நீந்துதல் – तॄ)
    2. நேற்று நான் கோவிலுக்கு சென்றேன். (கோவில் – मन्दिरम्)
    3. தாய் உணவு சமைத்தாள். (உணவு - भोजनम् சமைத்தல் – पच्)
    4. நீ சென்ற வாரம் நான் பணம் கொடுத்தாய். (சென்ற வாரம் – गत सप्ताहे)
    5. நாங்கள் .

  3. உரிய ‘लङ्/ வடிவங்களைக் கொண்டு வாக்கியங்களை பூர்த்தி செய்யவும். उचितेन लङ्-क्रियारूपेण वाक्यानि पूरयतु ।

    उदाहरणम्

    वयं पत्रं ________ (लिख्)
    वयं पत्रं अलिखाम ।

    1. अध्यापकाः पाठान् ______ (पाठय)
    2. रमा पाठं _____ (अव + गच्छ)
    3. आरक्षकौ चोरं ______ (ताडय)
    4. यूयं लेखनीं ______ (यच्छ)
    5. वानराः फलं ______ (खाद)
    6. अहं गणितं ______ (पठ)
    7. आवाम् ______ (क्रीड)
    8. त्वं श्लोकं _____ (वद)
    9. मेघः _______ (वर्षय)
    10. युवां शाकं ______ (कर्तय)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


अहं पठामि स्म ।

மேலே தரப்பட்டுள்ள வாக்கியம் பூதகால செயலை உணர்த்துகிறது. எதனால் ‘पठामि’ என்ற நிகழ்கால க்ரியா பதம் வருகிறது? இதைப் போன்று பூதகாலத்தில் வழக்கமாக இருந்த செயலைக் குறிக்கும் ப்ரயோகத்தை அடுத்த பாடத்தில் கற்க இருக்கிறோம்.
பாடம் 15: பூதகாலத்தில் தொடர் செயல் 'स्म' ப்ரயோகம் - 'स्म' प्रयोगः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...