ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 15 - பூதகாலத்தில் தொடர் செயல் 'स्म' ப்ரயோகம் -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - पञ्चदशः पाठः - 'स्म' प्रयोगः

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • தொடர் இறந்தகால செயல்களைக் குறிக்கும் 'स्म' प्रयोगः’
  • क्तवतु, இறந்த கால வடிவங்களிடையிலுள்ள தொடர்பு.

स्म-प्रयोगः

கடந்த பாடத்தின் இறுதியில் நாம் கண்ட வாக்கியம்:

“अहं पठामि स्म ।”

வாக்கியத்தில் ‘நான் படித்துக் கொண்டிருந்தேன்’ என்ற பொருளை உணர்த்த पठामि என்ற நிகழ்கால வினைச்சொல்லை ‘स्म’ என்ற பதம் தொடர்கிறது. இத்தகைய ப்ரயோகம் பூதகாலத்தில் நடந்த வழக்கமான அல்லது தொடர் செயலை உணர்த்துகிறது. ‘स्म’ என்ற சொல் அவ்யய (अव्ययः) பதம்.

‘स्म’ என்ற சொல் நிகழ்கால (लट्) வினைச் சொல்லுடன் இணையும்பொழுது கடந்த கால தொடர் அல்லது வழக்கமான செயல் உணர்த்தப்படுகிறது.

உதாஹரணங்களின் மூலமாக ‘स्म’ ப்ரயோகத்தின் பொருளை தெளிவாக அறிந்துக் கொள்ளலாம்.

श्रीकृष्णः नवनीतम् चोरयति स्म।க்ருஷ்ணன் வெண்ணையை திருடி வந்தான்.
वयं मैसूरु-नगरे वसामः स्म ।நாங்கள் மைஸூரில் வாழ்ந்து வந்தோம்.
त्वं सम्यक् गायसि स्म ।நீ நன்கு பாடிக்கொண்டிருந்தாய்.
जनाः सन्तुष्टाः भवन्ति स्म ।மக்கள் நிறைவோடு இருந்து வந்தார்கள்.

இப்பாடத்தின் இறுதியில் ‘स्म’ ப்ரயோகததிற்கான அப்பியாசம் தரப்பட்டுள்ளது.

क्तवतु ப்ரயோகம் - लङ् க்ரியா பதங்கள்

முந்தைய பாடங்களில் क्तवतु முடிவுடைய நாமபதங்கள் பூதகால செயலை எவ்விதம் உணர்த்துகின்றன என்றும் பூதகால க்ரியா பதங்கள் (लङ्) எவ்வாறு அமைக்கப் படுகின்றன என்றும் பார்த்தோம். இப்பொழுது இவ்விரு வகைகளில் வாக்கியங்கள் எப்படி மாறி அமைகின்றன என்பதை பார்ப்போம், உதாஹரணங்கள் வசனத்தையொட்டி (वचनम् अनुसृत्य) வகைப்படுத்தப் பட்டுள்ளன.

वाक्ये क्तवतु-रूपम्वाक्ये लङ्-क्रियापदम्पुरुषः
एकवचनेश्रीरामः नगरं गतवान् ।श्रीरामः नगरम् अगच्छत् ।प्रथमपुरुषः
लक्ष्मीः नगरं गतवती ।लक्ष्मीः नगरम् अगच्छत् ।
त्वं नगरं गतवान् ।त्वं नगरम् अगच्छः ।मध्यमपुरुषः
त्वं नगरं गतवती ।
अहं नगरं गतवान् ।अहं नगरम् अगच्छम् ।उत्तमपुरुषः
अहं नगरं गतवती ।
द्विवचनेमार्जरौ मूषिकं खादितवन्तौ ।मार्जरौ मूषिकम् अखादताम् ।
இரு பூனைகள் எலியைத் தின்றன.
प्रथमपुरुषः
बालिके गीतं गीतवत्यौ ।बालिके गीतं अगायताम् ।
युवां कथां लिखितवन्तौ ।युवां कथाम् अलिखितम् ।मध्यमपुरुषः
युवां दुग्धं पीतवत्यौ ।युवां दुग्धम् अपिबतम् ।
आवां चित्रं दृष्टवन्तौ ।आवां चित्रं अपश्याव ।उत्तमपुरुषः
आवां शालां गतवत्यौ ।आवां शालां अगच्छाव ।
बहुवचनेशिष्याः गुरुं पृष्टवन्तः ।शिष्याः गुरुम् अपृच्छन् ।प्रथमपुरुषः
मातरः शाकान् क्रीतवत्यः ।मातरः शाकान् अक्रीणन् ।
यूयं क्रीडितवन्तः ।यूयम् अक्रीडत।मध्यमपुरुषः
यूयं नृतवत्यः ।यूयम् अनृत्यत ।
நீங்கள் (பெண்கள்) நடனம் ஆடினீர்கள்.
वयं संस्कृतं पठितवन्तः ।वयम् संस्कृतम् अपठाम ।उत्तमपुरुषः
वयं कथां श्रुतवत्यः ।वयम् कथाम् अश्रुणुम ।

கீழ்க்கண்ட பட்டியலில் क्तवत्वन्ताः ங்களுக்குரிய लङ् வடிவங்கள் प्रथमपुरुषः-एकवचनम् இல் தரப்பட்டுள்ளன. முந்தைய பாடத்தில் கண்ட மாதிரிகளைக் கொண்டு மற்ற நிலைகளுக்குரிய लङ् வடிவங்களைப் பெறலாம். Pdf file download செய்ய பட்டியலைக் க்ளிக் செய்யவும்.

लट्-रूपम्
प्र.पु-एकवचनम्
क्तवतु-रूपाणिलङ्-रूपम्
प्र.पु-एकवचनम्
पुल्लिङ्गेस्त्रीलिङ्गेनपुंसके
पठतिपठितवान्पठितवतीपठितवत्अपठत्
पततिपतितवान्पतितवतीपतितवत्अपतित्
क्रीडतिक्रीडितवान्क्रीडितवतीक्रीडितवत्अक्रीडत्
लिखतिलिखितवान्लिखितवतीलिखितवत्अलिखत्
मिलतिमिलितवान्मिलितवतीमिलितवत्अमिलत्
खादतिखादितवान्खादितवतीखादितवत्अखादत्
निन्दतिनिन्दितवान्निन्दितवतीनिन्दितवत्अनिन्दत्
प्रेषयतिप्रेषितवान्प्रेषितवतीप्रेषितवत्अप्रेषयत्
प्रक्षालयतिप्रक्षालितवान्प्रक्षालितवतीप्रक्षालितवत्अप्रक्षालयत्
स्थापयतिस्थापितवान्स्थापितवतीस्थापितवत्अस्थापयत्
सूचयतिसूचितवान्सूचितवतीसूचितवत्असूचयत्
उत्तिष्ठतिउत्थितवान्उत्थितवतीउत्थितवत्उदतिष्ठत्
उपविशतिउपविष्टवान्उपविष्टवतीउपविष्टवत्उपाविशत्
पिबतिपीतवान्पीतवतीपीतवत्अपिबत्
इच्छतिइष्टवान्इष्टवतीइष्टवत्एच्छत्
गच्छतिगतवान्गतवतीगतवत्अगच्छत्
आगच्छतिआगतवान्आगतवतीआगतवत्आगच्छत्
नयतिनीतवान्नीतवतिनीतवत्अनयत्
आनयतिआनीतवान्आनीतवतीआनीतवत्आनयत्
करोतिकृतवान्कृतवतीकृतवत्अकरोत्
शृणोतिश्रुतवान्श्रुतवतीश्रुतवत्अशृणोत्
स्मरतिस्मृतवान्स्मृतवतीस्मृतवत्अस्मरत्
स्वीकरोतिस्वीकृतवान्स्वीकृतवतीस्वीकृतवत्स्वीकरोत्
आह्वयतिआहूतवान्आहूतवतीआहूतवत्आह्वयत्
वदतिउक्तवान्उक्तवतीउक्तवत्अवदत्
पश्यतिदृष्टवान्दृष्टवतीदृष्टवत्अपश्यत्
पृच्छतिपृष्टवान्पृष्टवतीपृष्टवत्अपृच्छत्
त्यजतित्यक्तवान्त्यक्तवतीत्यक्तवत्अत्यजत्
जानातिज्ञातवान्ज्ञातवतीज्ञातवत्अजानात्
ददातिदत्तवान्दत्तवतीदत्तवत्अददात्
क्रीणातिक्रीतवान्क्रीतवतीक्रीतवत्अक्रीणात्
रोदितिरुदितवान्रुदितवतीरुदितवत्अरोदत्
शक्नोतिशक्तवान्शक्तवतीशक्तवत्अश्क्नोत्

பயிற்சியுடன் பாடத்தை முடிப்போம் इदानीम् कञ्चित् अभ्यासं कृत्वा पाठं समापयाम.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கொடுக்கப்பட்டுள்ள தாதுவை பயன்படுத்தி உதாஹரணத்தில் உள்ளது போல் வாக்கியங்கள் அமைக்கவும். उदाहरणानुगुणं दत्तं धातुं उपयुज्य वाक्यानि रचयन्तु ।

    उदाहरणम्

    राजीवः विश्वविद्यालये ________ (पठ्)
    राजीवः विश्वविद्यालये पठति स्म ।

    1. मुनयः ______ (जप्)
    2. वयं _______ (खेल्)
    3. मम पितरौ मुम्बई-नगरे _______ (वस्) (पितरौ – பெற்றோர்)
    4. चन्द्रगुप्तः मगदराज्यं ________ (पालय)
    5. अहं विद्यालये ________ (पाठ ணிஜந்தம்)
    6. हरिश्चन्द्रः सर्वदा सत्यं _____ (वद्)
    7. ह्यः भवान् _____ (अट्)
    8. महिलाः पाककार्यं ______ (कृ)
    9. राधा सङ्गीतं _______ (शिक्ष् आत्मनेपदी)
    10. आवां नियमेन व्यायामं _____ (कृ)

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संस्कृत-अनुवादम् कुरुत ।
    1. நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.
    2. ரவி கார் ஓட்டிக் கொண்டிருந்தான். (கார் - कार्यानम् , ஓட்டுதல்– चाल णिजन्तम्)
    3. உமா குளித்துக் கொண்டிருந்தாள். (குளித்தல்– स्ना).
    4. குதிரைகள் ஓடிக்கொண்டிருந்தன.
    5. மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

  3. लङ् க்ரியா பதங்கள் கொண்டு வாக்கியங்களை மாற்றி அமைக்கவும். वाक्याणि लङ्-क्रियापदानि उपयुज्य परिवर्तयन्तु ।

    उदाहरणम्

    त्वं दुग्धम् पीतवान् ।
    लङि – त्वं दुग्धम् अपिबः ।

    1. अध्यापकाः पाठान् पाठितवन्तः ।
    2. जननी अन्नं पक्ववती ।
    3. वयं सर्वे भगवद्गीतां पठितवन्तः ।
    4. त्वं परीक्षाम् उत्तीर्णवान् ।(उत् + तॄ)
    5. अतिथयः आगतवन्तः ।
    6. प्रेमा गीतवती ।
    7. अहं देवं नतवान् ।
    8. मम मित्रं उक्तवान् ।
    9. आवां भोजनं कृतवन्तौ ।
    10. यूयं फलं खादितवन्तः ।

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


ह्यः शनिवारः आसित् ।
अद्य भानुवासरः (रविवासरः) अस्ति ।
श्वः सोमवासरः भविष्यति ।

முதல் வாக்கியம் பூதகாலத்தையும் இரண்டாம் வாக்கியம் நிகழ் காலத்தையும் குறிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இருந்து கடைசி வாக்கியத்திலுள்ள க்ரியாபதம் ‘भविष्यति’ எதிர்காலத்தை உணர்த்துகிறது என்பதை நாம் ஊகிக்க இயலும். அடுத்தப் பாடத்தில் நாம் கற்க இருப்பது ஸம்ஸ்க்ருத எதிர்கால க்ரியா அமைப்புகளைப் பற்றித்தான்! அடுத்தப் பாடம்........
பாடம் 16: ஸம்ஸ்க்ருத எதிர்கால வடிவங்கள் - भविष्यत्काले ऌट्

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...