ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 16 - ஸம்ஸ்க்ருத எதிர்கால வடிவங்கள் -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - षोडशः पाठः - भविष्यत्काले ऌट्

நாம் கற்கப் போவது.......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • ஸம்ஸ்க்ருத எதிர்கால க்ரியா பதங்கள் भविष्यत्काले ऌट्

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

முதலில் ஸம்பாஷண பயிற்சிக்காக பாடம் 14 இல் கண்ட வீடியோவின் இரண்டாம் பகுதியைக் காணலாம்.தலைப்பை Click செய்து வீடியோவைக் காணவும். நாம் கண்ட வீடியோ நல்ல ரீதியில் ஸம்ஸ்க்ருத எதிர்கால செயல்களைக் குறிக்கும் வாக்கியங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. இப்பாடத்தில் ஸம்ஸ்க்ருத பவிஷ்யத் கால (भविष्यत्काले क्रियारूपाणि) க்ரியா அமையும் முறைகளை கூடுதல் விவரங்களுடன் கற்க இருக்கிறோம். நாம் முன்பே இப்படிவின் பாடம் 10 இல் கற்ற ஸம்போதனா விபக்தி வடிவங்களையும் விளக்குகிறது.

भविष्यत्कालः – प्रस्तावः – ஸம்ஸ்க்ருதத்தில் எதிர்கால வினைச் சொற்கள் – அறிமுகம்

ஸம்ஸ்ம்ருதத்தில் இரு வகையான எதிர்கால வட்வங்கள் அமைகின்றன. ऌट्-लकारः ஸாமானிய எதிர்காலத்தையும் (Simple Future) लुट्-लकारः தொலை எதிர்காலத்தையும் (Distant Future) உணர்த்துகின்றன.

ஸாமானிய எதிர்காலம் (ऌट्-लकारः) ஸம்ஸ்க்ருதத்தில் முதல் எதிர்காலம் (First Future) என்றும் அறியப்படுகிறது. ऌट्-लकारः நடக்கவிருக்கும் செயலை உணர்த்துகிறது. இப்படிவில் இப்பாடத்தில் நாம் ஸாமானிய எதிர்கால வடிவங்கள் அமையும் முறையைக் கற்க இருக்கிறோம். அதனால் ऌट् வடிவங்களே எதிர்கால வடிவங்களாக குறிப்பிடப்படுகின்றன.

ऌटि क्रियारूपाणि - ஸம்ஸ்க்ருத ஸாமானிய எதிர்கால வடிவங்கள்

ஸம்ஸ்க்ருத எதிர்கால வடிவங்களில் பொதுவாக நான்கு விதமான உருவ ஒற்றுமைகள் காணப்படுகின்றன. ஒத்த எதிர்கால வடிவங்களையுடைய தாதுக்களை ஒன்று சேர்த்து பட்டியலில் அளித்துள்ளோம். தொடக்கமாக प्रथमपुरुषः एकवचनम् த்திற்கு உரிய நிகழ்கால (लट्) எதிர்கால (ऌट्) வடிவங்களை இணைத்துக் காட்டியுள்ளோம். தொடர்ந்து மற்ற புருஷ, வசனங்களுக்கான வடிவங்களை ஊகிக்க உதவும் மாதிரி வடிவங்களை கற்கலாம். ऌट् பதங்களுக்குரிய தமிழ் பொருளையும் கொடுத்துள்ளோம். எதிர்கால க்ரியா பதங்களை க்ளிக் செய்தால் அந்த தாதுவுக்குறிய அனைத்து ऌट् வடிவங்களையும் காணலாம். பட்டியலை download செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

प्रथमपुरुषे एकवचने ऌट् रूपाणि (Type I Ending in इष्यति)
वर्तमानेभविष्यत्काले
भवति (இருக்கிறான்)भविष्यति
गच्छति (போகிறான்)गमिष्यति
पठति (படிக்கிறான்)पठिष्यति
वदति (பேசுகிறான்)वदिष्यति
क्रीडति (விளையாடுகிறான்)क्रीडिष्यति
चलति (நகர்கிறான்)चलिष्यति
लिखति (எழுதுகிறான்)लेखिष्यति
करोति (செய்கிறான்)करिष्यति
हसति (சிரிக்கிறான்)हसिष्यति
पतति (விழுகிறான்)पतिष्यति
निन्दति (நிந்திக்கிறான்)निन्दिष्यति
रोदिति (அழுகிறான்)रोदिष्यति
फलति (வெற்றியடைகிறான்)फलिष्यति
स्मरति (நினைக்கிறான்)स्मरिष्यति
मिलति (சந்திக்கிறான்)मेलिष्यति
धावति (ஒடுகிறான்)धाविष्यति
नयति (கொண்டு செல்கிறான்)नेष्यति
शृणोति (கேட்கிறான்)श्रोष्यति
प्रथमपुरुषे एकवचने ऌट् रूपाणि (Type II Ending in यिष्यति)
प्रेषयति (அனுப்புகிறான்)प्रेषयिष्यति
मार्जयति (துடைக்கிறான்)मार्जयिष्यति
चोरयति (திருடுகிறான்)चोरयिष्यति
क्षालयति (கழுவுகிறான்)क्षालयिष्यति
प्रथमपुरुषे एकवचने ऌट् रूपाणि (Type III Ending in स्यति)
पिबति (குடிக்கிறான்)पास्यति
गायति (பாடுகிறான்)गास्यति
नमति (வணங்குகிறான்)नंस्यति
यच्छति /ददाति (கொடுக்கிறான்)दास्यति
निर्माति (கட்டுகிறான்)निर्मास्यति
जानाति (அறிகிறான்)ज्ञास्यती
उत्तिष्ठति (எழுகிறான்)उत्थास्यति
प्रथमपुरुषे एकवचने ऌट् रूपाणि (Type IV Ending in क्ष्यति)
पश्यति (பார்க்கிறான்)द्रक्ष्यति
त्यजति (விடுகிறான்)त्रक्ष्यति
पृच्छति (கேட்கிறான்)प्रक्ष्यति
शक्नोति (Can)शक्ष्यति
सिञ्चति (தெளிக்கிறான்)सेक्ष्यति
उपविशति (அமர்கிறான்)उपवेक्ष्यति

सर्वेषु पुरुषेषु लृट्-रूपाणि - மூன்று புருஷ நிலைகளிலும் எதிர்கால வடிவங்கள்

‘भू धातुः’ வின் அனைத்து ऌट् வடிவங்களையும் கீழே காண்கிறோம். இது தாதுவின் ऌट् प्रथमा-एकवचनरूपम् வடிவின் அடிப்படையில் மற்ற வடிவங்களைப் பெற உதவும்.

எதிர்கால க்ரியா வடிவங்கள் - ऌट्-लकार-रूपाणि ‘भू धातुः’
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःभविष्यतिभविष्यतःभविष्यन्ति
मध्यमपुरुषःभविष्यसिभविष्यथःभविष्यथ
उत्तमपुरुषःभविष्यामिभविष्यावःभविष्यामः

लृटि उदाहरणानि वाक्यानि - எதிர்கால எடுத்துக்காட்டுகள்

प्रथमपुरुषे
दिनेशः अग्रिममासे नूतनं भवनम क्रेष्यति।
(தினேஷ் அடுத்த மாதம் புது வீடு வாங்குகிறான்)
तरुणौ श्वः चलचित्रं द्रक्ष्यतः।
(இரு இளைஞர்களும் நாளை திரைப்படம் காணுவார்கள்)
छात्राः अग्रिमसप्ताहे प्रवेशपरीक्षां लेखिष्यन्ति।
(மாணவர்கள் அடுத்த வாரம் நுழைவு தேர்வு எழுதுகிறார்கள்)
मध्यमपुरुषे
त्वं राघवं प्रक्ष्यसि।
(நீ ராகவனைக் கேட்பாய்)
युवां नर्तिष्यथः।
(நீங்கள் இருவரும் நடனம் ஆடுவீர்கள்)
यूयं ग्रामं गमिष्यथ।
(நீங்கள் கிராமத்திற்கு செல்வீர்கள்)
उत्तमपुरुषे
अहं परश्वः पुस्तकं दास्यामि।
(நான் நாளை மறுதினம் புத்தகம் தருவேன்.)
आवां अग्रिमे वर्षे स्वदेशम् आगमिष्यावः।
(நாங்கள் இருவரும் அடுத்த வருடம் எங்கள் நாட்டிற்கு திரும்புவோம்)
वयं क्रीडाङ्गने क्रीडिष्यामः।
(நாங்கள் மைதானத்தில் விளையாடுவோம்.)

நாம் இதுவரை लट (நிகழ்காலம்), लोट् (ஆணை, தூண்டுதல்), लङ् (பூதகாலம்) மற்றும் ऌट् (எதிர்காலம்) என நான்கு லகாரங்களை (चत्वारः लकाराः) கற்றிருக்கிறோம். அடுத்த படிவில் அனைத்து விபக்திகளுடனும் பல வித ப்ரயோகங்களில் வாக்கிய அமைப்பகளை கற்கும்பொழுது இவற்றை அதிக விவரங்களுடன் கற்க இருக்கிறோம். இப்பொழுது ,ऌट् வடிவங்களின் அப்பியாசம் பயிலுவோம். ऌट्-रूपाणाम् अभ्यासं कुर्म।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. வர்த்தமான க்ரியா பதங்களுக்குரிய பவிஷ்யத் கால பதங்கள் எழுதுக. वर्तमानतः भविष्यत्कालरूपे परिवर्त्तनं कुरुत।
    1. लिखतः
    2. पिबामः
    3. पाठयसि
    4. त्यजामि
    5. रोदिवः
    6. गायन्ति
    7. वदतः
    8. नयति
    9. मिलथ
    10. शृणुथः

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संस्कृत-अनुवादम् कुरुत ।
    1. நாளை நாங்கள் பாடம் படிப்போம்.
    2. நான் உன்னை அடுத்த வாரம் சந்திப்பேன்.
    3. காலை உணவிற்கு லதா காபி குடிப்பாள். (காலை உணவிற்கு – अल्पाहारे)
    4. நாளை நீங்கள் எங்கே இருப்பீர்கள்? (நீங்கள் – भवान्)
    5. நாங்கள் இருவரும் கதை கேட்கவிருக்கிறோம்.

  3. கட்டத்திருள்ள பொருத்தமான சொற்களைக் கொண்டு காலி இடங்களை நிரப்பவும். मञ्जूषायाः उचितानि पदानि चित्वा रिक्तस्थानानि पूरयत।
    गमिष्यति       उत्थास्यसि      प्रक्षालयिष्यन्ति      फलिष्यन्ति      वदिष्यथ
    विहरिष्यन्ति      गास्यामः      नेष्यामि      प्रक्ष्यामि      खादिष्यथः
    1. ग्रीष्मकाले आम्राः ............
    2. मम पुत्रः अपि अग्रिमवर्षे विश्वविद्यालयं ..............
    3. श्वः अहम् तम् ...............
    4. अहं पेटिकां गृहं .............
    5. युवां फलानि .............
    6. प्रातः त्वं कदा ............. ?
    7. ताः गृहं .................
    8. सायङ्काले युवकाः ...........
    9. सभायां वयं ...............
    10. यूयं श्लोकं ...............

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


நான் காலை உணவு உண்டு விட்டு அலுவலகம் செல்கிறேன்.
நான் குளித்து விட்டு கடவுளை வணங்குகிறேன்.

மேலே கண்ட வாக்கியங்களில் இரண்டு செயல்களைக் காண்கிறோம். இத்தகைய வாக்கியங்களை ஸம்ஸ்க்ருதத்தில் எவ்வாறு எழுதலாம்? ஒரு செயல் மற்றதை தொடர்கிறது என்பது எவ்வாறு உணர்த்தப்படுகிறது? பார்ப்போம் அடுத்தப் பாடத்தை.........
Lesson 17: क्त्वा/ल्यप् ப்ரயோகம் - क्त्वा/ल्यप्-प्रत्ययान्तस्य प्रयोगः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...