ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 17 - क्त्वा/ल्यप् ப்ரயோகம் -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - सप्तदशः पाठः - क्त्वा/ल्यप्-प्रत्ययान्तस्य प्रयोगः

நாம் கற்கப் போவது.......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • பூர்வகால செயலை உணர்த்தும் क्त्वा/ल्यप् வடிவங்கள்.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

ஸம்பாக்ஷண வீடியோவைக் காண தலைப்பை Click செய்யவும். இப்பாடத்திற்கான ஸம்பாஷண வீடியோ गतवान्, कृतवान्स प्राप्तवान् போன்ற क्तवतु வடிவங்களுக்கான பயிற்சியாக அமைகிறது. வீடியோ சில ்யய (अव्ययः) பதங்களின் உபயோகங்களையும் விளக்குகிறது. வீடியோவின் முதல் பகுதி ‘च’ மற்றும் ‘अतः’ ஆகிய அவ்யய பதங்களை விளக்குகிறது.

Conversation Practice - सम्भाषणाभ्यासः
अहं रामायणं, महाभारतं, भगवद्गीतां पठामि।
लेखनीं करवस्त्रं आनयतु।
भवन्तः किं किं खादन्ति?अहम् अन्नं पायसं लड्डुकं खादामि।
भवन्तः किं किं कुर्वन्ति?अहं श्रवणं क्रीडनम् अध्ययनम् करोमि।
अहं पठनं नृत्यं योगाभ्यासं करोमि।
भवतः/भवत्याः गृहे के के सन्ति?मम गृहे माता पिता भ्राता सन्ति।
भवन्तः कां कां भाषां जानन्ति?अहं संस्कृतं, कन्नट-भाषां, हिन्दी-भाषां आङ्ग्लभाषां जानामि।
भवन्तः किं किं दृष्टवन्तः?अहं दिल्हीनगरं चेन्नैनगरं उज्जय्नी नगरं दृष्टवान्।
अतः शब्दः
पिपासा अस्ति। अतः जलं पिबामि।बुभुक्षा अस्ति। अतः भोजनं खादामि।
वाहने इन्धनं नास्ति। अतः वाहनम् न चलति।अहं विज्ञानी। अतः अहं संशोधनम् करोमि।
गोपालः रुग्णः अस्ति।अतः सः शालां न गच्छति।
अतः सः वैद्यालयं गच्छति।
अतः सः निद्रां करोति।
अतः सः न क्रीडति।

क्त्वा-प्रत्ययप्रस्तावः – क्त्वा-प्रत्ययः முகவுரை

நாம் முன்பு பாடம் 12 இல் ‘कृत् प्रत्ययाः’ குழுவை சேர்ந்த क्तवतु प्रत्ययः பற்றி அறிந்தோம். क्तवतु வடிவங்கள் பூதகால செயல்களைக் குறிக்கின்றன. இப்பாடத்தில் நாம் மற்றொரு ‘कृत् प्रत्ययः’ அதாவது ‘क्त्वा’ ப்ரத்யய வடிவங்கள் மற்றும் செயல்பாட்டினைக் கற்க இருக்கிறோம்.
கீழ்க்காணும் படங்களையும் அவற்றில் காணும் செயல்களை விளக்கும் வாக்கியங்களையும் கவனிக்கவும்.

बालकः स्नाति।बालकः नमति।
बालकः स्नात्वा नमति।
பாலகன் குளித்து விட்டு வணங்குகிறான்
बालकः विद्यालयं गच्छति।बालकः पठति।
बालकः विद्यालयं गत्वा पठति।
பாலகன் பள்ளிக்குச் சென்று படிக்கிறான்.
बालकः क्रीडति।बालकः खादति।
बालकः क्रीडित्वा खादति।
பாலகன் விளையாடி விட்டு உண்கிறான்.

மேற்கண்ட வாக்கியங்களில் செயல்களின் வரிசையைக் கவனிக்கவும். ஒரு செயலின் முடிவில் மற்றொரு செயல் தொடங்குகிறது. ஒரே வாக்கியம் இரு செயல்களை காட்டும் பொழுது முதல் செயலைக் குறிக்கும் சொல் முக்கிய க்ரியா பதத்திலிருந்து மாறுபட்டு அமைந்துள்ளது. முதலில் நடக்கும் செயலை உணர்த்துவதால் இத்தகைய அமைப்புகள் ‘पूर्वकालिकाः’ என்று அறியப்படுகின்றன. पूर्वकालिका क्रिया வை உணர்த்த ‘क्त्वा’ प्रत्ययः வினைத் தாதுவுடன் இணைக்கப்படுகிறது. क्तवतु வடிவங்களைப் போல் அல்லாமல் क्त्वान्ताः அவ்யய வடிவங்கள். அதாவது இவ்வடிவங்கள் पुरुषः, वचनम् மற்றும் विभक्तिः யை ஒட்டி அமைவதில்லை.

‘क्त्वा’ प्रत्ययः பயன்படுத்தும்பொழுது முதலில் உள்ள ‘क् மறைவதால் त्वा प्रत्ययः என்றும் அறியப்படுகிறது.

क्त्वान्तरूपाणि – ‘क्त्वा’ வடிவங்கள்

நாம் இதுவரைக் கற்ற நமக்கு பரிச்சயமான சில தாதுக்களின் ‘क्त्वा’ வடிவங்களைக் கீழே காண்கிறோம். அமைக்கும் விதி எளிதில் விளங்கும் வண்ணம் வடிவ ஒற்றுமையுள்ள வடிவங்கள ஒருமித்துக் காட்டப்பட்டுள்ளன. PDF File Download செய்ய ‘இங்கே’ Click செய்யவும்.

लटिक्त्वान्तःलटिक्त्वान्तः
हसति (हस्)हसित्वाधरति (धृ)धृत्वा
क्रीडति (क्रीड्)क्रीडित्वाकरोति (कृ)कृत्वा
भ्रमति (भ्रम्)भ्रमित्वास्मरति (स्मृ)स्मृत्वा
जपति (जप्)जपित्वाहरति (हृ)हृत्वा
लिखति (लिख्)लिखित्वाशृणोति (श्रु)श्रुत्वा
खादति (खाद्)खादित्वा
खनति (खन्)खनित्वाजानाति (ज्ञा)ज्ञात्वा
क्रन्दति (क्रन्द)क्रन्दित्वास्नाति (स्ना)स्नात्वा
धावति (धाव)धावित्वा
निन्दति (निन्द्)निन्दित्वाक्रीणाति (क्री)क्रीत्वा
नृत्यति (नृत्)नर्तित्वानयति (नी)नीत्वा
पठति (पठ्)पठित्वाभवति (भू)भूत्वा
पतति (पत्)पतित्वा
मिलति (मिल्)मिलित्वापिबति (पा)पीत्वा
तिष्ठति (स्था)स्थित्वादहति (दह्)दग्ध्वा
गच्छति (गम्)गत्वापश्यति (दृश्)दृष्ट्वा
नमति (नम्)नत्वापृच्छति (प्रच्छ्)पृष्ट्वा
कर्षति (कृष्)कृष्ट्वा
त्यजति (त्यज्)त्यक्त्वाइच्छति (इष्)इष्ट्वा
पचति (पच्)पक्त्वा

क्त्वा-रूपाणि – उदाहरणवाक्यानि – ‘क्त्वा’ உதாஹரண வாக்கியங்கள்

अध्यापकः पाठं पाठयित्वा प्रश्नान् पृच्छति।ஆசிரியர் பாடத்தை கற்பித்து விட்டு கேள்விகள் கேட்கிறார்.
मयूरः मेघं दृष्ट्वा नृत्यं करोति।மயில் மேகத்தைப் பார்த்து நடனம் செய்கிறது.
त्वं चिन्तयित्वा उत्तरं लिख।நீ யோசித்து பதில் எழுது.
सः गृहपाठं कृत्वा शयनम् करोति।அவன் வீட்டு பாடம் செய்து முடித்து தூங்குகிறான்.
अहं दुरभ्यासं त्यक्त्वा सज्जनः भवामि।நான் கெட்ட பழக்கத்தை விட்டு நல்லவனாக இருக்கிறேன்.
विक्रेता पुस्तकं दत्त्वा धनं स्वीकरोति।விற்பனையாளர் புத்தகத்தைக் கொடுத்து பணம் பெறுகிறார்.
शिशुः जननीं स्मृत्वा रोदनं करोति।குழந்தை தாயை நினைத்து அழுகிறது.
क्रीडापटुः क्रीडित्वा विश्रामं करोती।விளையாட்டு வீரர் விளையாடி விட்டு ஓய்வு எடுக்கிறார்.
पिता मन्दिरं गत्वा देवं नमति।தந்தை கோவிலுக்கு சென்று தெய்வத்தை வணங்குகிறார் .
मुनिः वनं गत्वा ध्यानं करोति।முனிவர் வனத்திற்கு சென்று தவம் செய்கிறார்.

பூர்வகால க்ரியயை குறிக்கும் ‘क्त्वा’ பயன்பாட்டிற்கான பயிற்சி வினாக்கள் இப்பாடத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ளன.

उपसर्ग-योगे ‘ल्युप्’ - உபஸர்கம் முன்பிருந்தால் ‘ल्युप्’

இப்படிவின் பாடம் 11 இல் நாம் உபஸர்கங்கள் (उपसर्गाः) இணையும் பொழுது தாதுவின் பொருள் மாறுகிறது என்று பார்த்தோம். பூர்வகால செயலை உணர்த்த உபஸர்கம் இல்லா நிலையில் ‘क्त्वा’ प्रत्ययः இணைவது போல் உபஸர்கம் சேர்ந்த நிலையில் ‘ल्युप्’ प्रत्ययः இணைந்து பூர்வகாலத்தை உணர்த்துகிறது.

सीता रामम् अनुसरति। सीता वनं गच्छति।
सीता रामम् अनुसृत्य वनं गच्छति।

பூர்வகாலத்தை உணர்த்த ‘अनुसृत्य’ என்று மாறுபட்ட அமைப்பைக் காண்கிறோம். ‘क्त्वा’ மாதிரியில் ‘अनुसृत्वा’ என்று இல்லாமல் ‘अनुसृत्य’ என்று காணப்படுகிறது.

அனுபந்த விதிகளை ஒட்டி ‘ल्युप्’ இன் முதல் எழுத்தான ‘ल्’ வும் இறுதி எழுத்தான ‘प्’ வும் மறைகின்றன. எஞ்சிய ‘य’ வினை தாதுவுடன் இணைகிறது.

ल्यबन्त-रूपाणि – ‘ल्यप्’ வடிவங்கள்

கீழ்க்காணும் பட்டியல் உபஸர்கங்களுடன் கூடிய ‘ल्यप्’ வடிவங்களை உபஸர்கங்கள் இல்லாத ‘क्त्वा’ வடிவங்களுடன் இணைத்து காட்டுகிறது. PDF File Download செய்ய ‘இங்கே’ Click செய்யவும்.

क्त्वा-प्रत्ययान्तरूपाणि ल्यप्-प्रत्ययान्तरूपाणि च
क्रियापदम्क्त्वान्तरूपम्उपसर्गसहितं क्रियापदम्ल्यबन्तरूपम्
गच्छतिगत्वाआगच्छतिआगत्य
नयतिनीत्वाआनयतिआनीय
स्मरतिस्मृत्वाविस्मरतिविस्मृत्य
लिखतिलिखित्वाविलिखतिविलिख्य
क्रीणातिक्रीत्वाविक्रीणातिविक्रीय
जानातिज्ञात्वाविजानातिविज्ञाय
स्थापयतिस्थापयित्वासंस्थापयतिसंस्थाप्य
प्रेषयतिप्रेषयित्वासम्प्रेषयतिसम्प्रेष्य
हरतिहृत्वासंहरतिसंहृत्य
नमतिनत्वाप्रणमतिप्रणम्य
क्षालयतिक्षालयित्वाप्रक्षालयतिप्रक्षाल्य
कर्षतिकृष्ट्वाआकर्षतिआकृष्य
तिष्ठतिस्थित्वाउत्तिष्ठतिउत्थाय
भवतिभूत्वाअनुभवतिअनुभूय
दिशतिदिष्ट्वानिर्दिशतिनिर्दिश्य
करोतिकृत्वापरिष्करोतिपरिष्कृत्य

ल्यबन्त-रूपाणि – उदाहरणानि – ‘ल्यप्’ ரூப உதாஹரணங்கள்

छात्रः कक्ष्यां प्रविष्य उपविष्टवान्।மாணவன் அறையில் நுழைந்து அமர்ந்தான்.
अहं लेखनम् परिष्कृत्य प्रेषयामि।கட்டுரையை திருத்தி அனுப்புகிறேன்.
सर्वे हस्तान् प्रक्षाल्य भोजनं कुर्वन्तु।கை கழுவி சாப்பிடு.
मित्राणि उपविश्य वार्तालापं कुर्वन्ति।நண்பர்கள் அமர்ந்துக் கொண்டு பேசுகிறார்கள்.
बालकः क्रीडनं समाप्य गृहं गतवान्।பாலகன் விளையாடுவதை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றான்.

इदानीं क्त्वान्त-लयबन्त-पदान् सम्बन्धिताः अभायासाः करवाम। இப்பொழுது ‘क्त्वा’ மற்றும் ‘ल्यप्’ வடிவங்களுக்கான பயிற்சி பாடங்களை செய்வோம்.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கொடுக்கப் பட்டுள்ள க்ரியா பத்த்திற்குரிய பூர்வகால ரூபம் (क्त्वा/ल्यप्) எழுதவும். क्रियापदम् अनुरूपम् पूर्वकालिकरूपम् (क्त्वा/ल्यप्) लिखत।

    उदाहरणम्

    लिखति – लिखित्वा
    आगच्छति - आगत्य

    1. सरति
    2. अनुसरति
    3. भवति
    4. अनुभवति
    5. हसति
    6. उपहसति
    7. तिष्ठति
    8. उत्तिष्ठति
    9. क्षालयति
    10. प्रक्षालयति

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संस्कृत-अनुवादम् कुरुत ।
    1. நான் குளித்து விட்டு கடவுளை வணங்குகிறேன்.
    2. நான் காலை உணவை முடித்து விட்டு அலுவலகம் செல்கிறேன். (அலுவலகம் – कार्यालयः, காலை உணவு – प्रातराशः, முடித்தல் - स्वीकरोति)
    3. நான் தொலைக்காட்சி பார்த்து விட்டு உணவு உண்பேன். (தொலைக்காட்சி - दूरदर्शनम् )
    4. பாலகன் வீட்டிற்குள் நுழைந்தவுடன் கை கழுவுகிறான்.
    5. அவன் என்னை தொடர்ந்து வேகமாக வருகிறான். (தொடர்தல் – अनुसरति, வேகமாக - वेगेन)

  3. வாக்கியங்களை क्त्वा அல்லது ल्यप् முடிவுகளைக் கொண்டு இணைக்கவும். अधोलिखितानि वाक्यानि क्त्वान्तेन पदेन वा ल्यबन्तेन पदेन योजयन्तु।
    1. कृषकः भूमिं खनति, सस्यं रोपयति।
    2. शिशुः पतति, रोदनं करोति।
    3. बिडालः गृहं प्रविशति, दुग्धं पिबति। (बिडालः - பூனை)
    4. बालकः कन्दुकम् आनयति, क्रीडति। (कन्दुकम् - பந்து)
    5. पितामहः कथां कथयति, प्रश्नं पृच्छति।
    6. आरक्षकः धावति, चोरं गृह्णाति।
    7. ग्राहकः वस्तु स्वीकरोति, धनं ददाति। (ग्राहकः - வாங்குபவர்)
    8. जननी अतिथिं सत्करोति, भोजनं ददाति।
    9. बालिका फलं खादति, जलं न पिबति।
    10. भवन्तः गीतं शृण्वन्ति, चायं पिबन्ति। (चायम् - Tea)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


பாலகன் படிப்பதற்காக பள்ளி செல்கிறான்.
அவள் பழங்கள் வாங்க கடைக்கு செல்கிறாள்.

மேல் காணும் வாக்கியங்களில் ‘படிப்பதற்காக’ ‘வாங்க’ முக்கிய செயலின் உத்தேசத்தை உணர்த்துகின்றன. இவ்வாறு உத்தேசம் அல்லது விருப்பத்தை உணர்த்தும் ஸம்ஸ்க்ருத சொல் வடிவம் எது? இத்தகைய வடிவங்களைப் பெற பயன்படும் ‘तुमुन्’ ப்ரத்யயம் பற்றி அடுத்தப் பாடத்தில் கற்க இருக்கிறோம். நமது அடுத்த பாடம்.......
பாடம் 18: तुमुन् ப்ரயோகம் - तुमुन् प्रयोगः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...