ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 18 - तुमुन् ப்ரயோகம் -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - अष्टादशः पाठः - तुमुन् प्रयोगः

நாம் கற்கப் போவது.......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • உத்தேசம், விருப்பம் மற்றும் திறனை உணர்த்த तुमुन्-प्रयोगः

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

ஸம்பாக்ஷண வீடியோவைக் காண தலைப்பை Click செய்யவும். ஸம்பாஷண வீடியோவின் பின் பகுதி வாக்கியங்களில் एव , इति என்ற மேலும் இரு அவ்யயங்களின் பங்கினை விளக்குகிறது.

Conversation Practice - सम्भाषणाभ्यासः
एव शब्दः
नाणकं वामहस्ते वा दक्षिणहस्ते वा अस्ति?नाणकं वामहस्ते एव अस्ति।
अहं संस्कृतेन >एव सम्भाषणं करोमि।देशसेवाम् एव करोमि।
चायम् एव पिबामि।मम पिता कार्यालये एव अस्ति।
अहं सत्यम् एव वदामि।परीक्षाकाले एव अभ्यासं करोमि।
प्रातः एव रोटिकां खादामि।अहं प्रातः रोटिकाम् एव खादामि।
अहम् एव प्रातः रोटिकां खादामि।अहं प्रातः रोटिकां खादामि एव।
उपनेत्रं तत्र एव अस्ति।अत्र नास्ति एव।
इति शब्दः
सः किम् इति उक्तवान्?सः प्रतिदिनं शालां गच्छामि इति उक्तवान्।
सा किम् इति उक्तवती?सा रमा प्रतिदिनं देवालयं गच्छति इति उक्तवती।
अहं किम् इति लिखितवान्?भवान् परीक्षा इति लिखितवान्।
भवान् महाराजः इति लिखितवान्।
साधयतु अथवा विनश्यतु इति महात्मा गान्धी उक्तवान्।
“செய் அல்லது செத்து மடி” என்று மஹாத்மா காந்தி அவர்கள் கூறினார்.
मम माता दूरदर्शनम् अधिकं न पश्यतु इति उक्तवती।

तुमुन्-प्रत्ययः -प्रस्तावः – முகவுரை

क्तवतु, क्तवा ப்ரத்யயங்கள் தாதுக்களுடன் இணைந்து செயலை உணர்த்த முறையே நாம, அவ்யய வடிவங்களை ஏற்கின்றன என முந்தைய பாடங்களில் கற்றோம். இப்பாடத்தில் தாதுக்களுடன் இணைந்து அவ்யய வடிவங்களை அளிக்கும் तुमुन्-प्रत्ययः பற்றி கற்க இருக்கிறோம். வாக்கியங்களில் तुमुन् முடிவுகள் (तुमुनन्ताः) பொதுவாக கீழ்க்காணும் ஐந்து இடங்களில் பயன்படுத்தப் படுகின்றன.

இனி तुमुन् வடிவங்களின் அமைப்பு, அவை வாக்கியங்களில் மேலேக் குறிப்பிட்டவற்றை எவ்வாறு உணர்த்துகின்றன என்பதையும் கற்போம்.

तुमुनन्तः – रूपाणि

तुमुन्-प्रत्ययः தாதுக்களுடன் (धातवः) இணைந்து மாறாத அவ்யயங்களை (अव्ययाः) உருவாக்குகிறது. तुमुन् வடிவங்கள் புருஷ வசனங்களை அனுசரித்து மாறாததால், வாக்கியங்களில் இவற்றை எளிதில் அமைக்கலாம். அதிகம் பயன்படும் சில तुमुन् வடிவங்கள் கீழே பட்டியலில் தரப்பட்டுள்ளது.PDF File Download செய்ய ‘இங்கே’ Click செய்யவும்.

लटितुमुनन्तःलटितुमुनन्तः
पठतिपठितुम्जानातिज्ञातुम्
खादतिखादितुम्ददातिदातुम्
चलतिचलितुम्तिष्ठतिस्थातुम्
वदतिवदितुम्गच्छतिगन्तुम्
लिखतिलेखितुम्नमतिनन्तुम्
क्रीडतिक्रीडितुम्करोतिकर्तुम्
रक्षतिरक्षितुम्स्मरतिस्मर्तुम्
धावतिधावितुम्पश्यतिद्रष्टुम्
हसतिहसितुम्पृच्छतिप्रष्टुम्
भक्षयतिभक्षयितुम्शृणोतिश्रोतुम्
नृत्यतिनर्तितुम्आकर्षतिआक्रष्टुम्
दण्डयतिदण्डयितुम्प्रविशतिप्रवेष्टुम्
नयतिनेतुम्विस्मरतिविस्मर्तुम्
उन्नयतिउन्नेतुम्उत्तिष्ठतिउत्थातुम्
जयतिजेतुम्आरुह्यतिआरोढुम्
क्रीणातिक्रेतुम्पचतिपक्तुम्
पिबतिपातुम्गृह्णातिग्रहीतुम्

வினைத்தாது உபஸர்கத்துடன் இணைவதனால் तुमुन् வடிவங்கள் மாறுவதில்லை. உதாஹரணம்: नेतुम्,उन्नेतुम्. स्मर्तुम्, विस्मर्तुम्.

तुमुन् வடிவங்கள் எதிர்கால வடிவங்கள் (ऌट्) இடையே ஒற்றுமை காணப்படுகிறது. எதிர்கால வடிவங்களில் इष्यति அல்லது क्ष्यति என்பவற்றை நீக்கி அவ்விடங்களில் பொருத்தமான तुमुन् முடிவகளை சேர்க்க இயலும். கீழ்க்காணும் படம் இப்பொருத்தத்தை தெளிவாக விளக்குகிறது.

முக்கிய செயலின் உத்தேசம் – क्रियार्था क्रिया

முந்தைய பாடத்தை நாம் இவ்விரண்டு வாக்கியங்களுடன் முடித்தோம்....

பாலகன் படிப்பதற்காக பள்ளி செல்கிறான்.
அவள் பழங்கள் வாங்க கடைக்கு செல்கிறாள்.

முதல் வாக்கியத்தில் பள்ளி ‘செல்வதின்’ உத்தேசம் ‘படித்தல்’. அதே போல் இரண்டாவது வாக்கியத்தில் கடைக்கு ‘செல்வதின்’ உத்தேசம் பழம் ‘வாங்குதல்’. இவற்றிற்குரிய ஸம்ஸ்க்ருத வாக்கியங்கள் இவ்வாறு அமைகின்றன.

बालकः पठितुं विद्यालयं गच्छति।
सा फलानि क्रेतुं आपणं गच्छति।

पठितुं, क्रेतुं என்ற तुमुन् வடிவங்கள் क्रियार्था क्रिया அதாவது உத்தேசத்தை உணர்த்துகின்றன. क्रियार्था क्रिया க்களை தொடரும் செயலாகவும் காணலாம் (பூர்வ காலத்தை உணர்த்தும் क्त्वान्ताः க்களைப் போல்). அவ்யயங்களான (अव्ययाः) तुमुन् வடிவங்கள் எல்லா காலங்களிலும் அனைத்து புருஷ, வசனங்களுக்கும் ஒன்றாகவே உள்ளன. உதாஹரணங்களை இதை மேலும் தெளிவுப் படுத்துகின்றன. ‘किमर्थम्?’ என்ற கேள்விக்கு क्रियार्था क्रिया விடையாக அமைகிறது.

अहं पठनार्थं विद्यालयं गच्छामि।
अहं किमर्थे विद्यालयं गच्छामि?
अहं पठितुं विद्यालयं गच्छामि।
गजः जलं पानार्थं जलाशयं गच्छति।
गजः किमर्थं जलाशयं गच्छति?
गजः जलं पातुम् जलाशयं गच्छति।
महिलाः अर्चनार्थं मन्दिरं गमिष्यन्ति।
महिलाः किमरथं मन्दिरं गमिष्यन्ति?
महिलाः अर्चितुं मन्दिरं गमिष्यन्ति।
माता पचनार्थं पाकाशालाम् आगच्छत्।
माता किमर्थं पाकाशालाम् आगच्छत्?
माता पक्तुं पाकाशालाम् आगच्छत्।
माता पाकं कर्तुं पाकाशालाम् आगच्छत्।
आरक्षकाः रक्षणार्थं द्वारे तिष्ठन्ति।
आरक्षकाः किमर्थं द्वारे तिष्ठन्ति?
आरक्षकाः रक्षितुम् द्वारे तिष्ठन्ति।

तुमुनन्तः + इच्छति

इच्छति என்ற क्रियापदम् தொடரும் போல் तुमुन् பதங்கள் செய்ய விரும்பும் செயலை உணர்த்துகின்றன.

रामः पठनम् इच्छति।रामः पठितुम् इच्छति।
बालकः क्रीडनम् इच्छन्ति।बालकः क्रीडितुम् इच्छन्ति।
वयं दर्शनम् इच्छामः।वयं द्रष्टुम् इच्छामः।
तौ धावनम् इच्छतः।तौ धावितुम् इच्छतः।
त्वम् खादनम् इच्छसि।त्वम् खादितुम् इच्छसि।
अहं दानम् इच्छामि।अहं दातुम् इच्छामि।

तुमुनन्तः + जानाति/ शक्नोति/ अर्हति

तुमुन् வடிவங்கள் அறிந்ததை, செயல் திறனை அல்லது தகுதியையும் உணர்த்துகின்றன.

रविः भाषितुं जानाति।
ரவி சொற்பொழிவாற்ற அறிவான்.
अहं कवितां रचयितुं शक्नोमि।
நான் கவிதை எழுதும் திறன் உள்ளவன்.
अर्जुनः योद्धुम् जानाति।
அர்ஜுனன் போரிடல் அறிவான்.
सः रुग्णः इदानीं गन्तुं न शक्नोति।
அந்த நோயாளி இப்பொழுது நடக்க இயலாதவன்
भीमः पक्तुं जानाति।
பீமன் சமையல் அறிவான்.
किं बालकाः श्लोकं पठितुं शक्नुवन्ति?
பாலகர்கள் ஶ்லோகம் படிக்க இயன்றவர்களா?
भगिनी गातुं जानाति।
சகோதரி சங்கீதம் அறிவாள்.
यूयं आसनेषु उपवेष्टुं शक्नुथ।
நீங்கள் இருக்கைகளில் அமரலாம்.
बालकः गणयितुं जानाति।
பாலகன் எண்ணுதல் அறிவான்.
ताः नृत्यं कर्तुं शक्नुवन्ति
அந்த பெண்கள் நடனம் ஆடக்கூடியவர்கள்.
भवान् मम अपराधं क्षन्तुं अर्हति।
தாங்கள் என் தவறைப் பொறுக்கக் கூடியவர்கள்.
वयं सर्वे कर्म कर्तुं अर्हामः।
நாம் அனைவரும் கர்மம் செய்யத் தகுந்தவர்கள்.

அடுத்த நிலையில் கதை போன்ற பல வகையான பாடங்களை கற்கும்பொழுது வேறு மாறுப்பட்ட சந்தர்பங்களில் तुमुन् வடிவங்கள் இடம் பெறுவதைக் காணலாம். இப்பொழுது அப்பியாசங்களுடன் பாடத்தை முடிப்போம். अभ्यासानि कर्तुं सिद्धाः वा?

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. உதாஹரணத்தில் உள்ளது போல் तुमुन् வடிவம் கொண்டு இரு வாக்கியங்களை இணைக்கவும். उदाहरणानुगुणं तुमुनन्तपदं प्रयुज्य वाक्यमेकं रचयतु।

    उदाहरणम्

    छात्रः ग्रन्थालयं गच्छति। पुस्तकान् पठिष्यति।
    छात्रः पुस्तकान् पठितुं ग्रन्थालयं गच्छति।

    1. युवकः व्यायामं करोति। स्वास्थ्यं रक्षति।
    2. अर्जुनः युध्यते। शत्रून् जयति।
    3. अहम् आपणं गच्छामि। शाकान् क्रेष्यामि।
    4. मित्राणि उपाहारगृहं गच्छन्ति। चायं पास्यन्ति। (उपाहारगृहं – Restaurant)
    5. संन्यासी नदीं गच्छति। स्नास्यति।
    6. राधा वेदिकां आरोहति। नर्तिष्यति। (वेदिका - Stage)
    7. छात्रः प्रातः शीघ्रम् उत्तिष्ठति। पाठं पठिष्यति।
    8. पिता प्रकोष्ठं गच्छति। पत्रं लेखिष्यति। (प्रकोष्ठः – Room)
    9. महिला वेषं परिवर्तयति। बहिः गच्छति।
    10. भक्तः मन्दिरं गच्छति। देवं नमति।

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संस्कृत-अनुवादम् कुरुत ।
    1. நான் computer வாங்க விரும்புகிறேன். (Computer – सङ्गणकम्)
    2. லலிதா பாடக் கூடியவள்.
    3. வாசுதேவன் கார் ஓட்டக் கூடியவன். (Car – कार्यानम्)
    4. எங்களால் ஸம்ஸ்க்ருதத்தில் பேச இயலும். (ஸம்ஸ்க்ருத்தில் பேசுதல் – संस्कृतेन सम्भाषणम्)
    5. உன்னால் Cricket ஆட இயலாது. (Cricket – क्रिकेट्)

  3. கோடிட்ட இடங்களை கொடுக்கப்பட்டுள்ள தாதுக்களுக்குரிய तुमुनन्ताः கொண்டு நிரப்பவும். कोष्टे दत्तेन धातुना सह तुमुन्- प्रत्ययं योजयित्वा रिक्ते स्थाने उचितं रूपं लिखतु।
    1. द्विचक्रिकाम् अत्र _____ शक्नोषि। (स्था)
    2. अहं कथां _____ न शक्नोमि। (वच्)
    3. व्याग्रः वृक्षम् _____ शक्नोति (आरुह्)
    4. कविः काव्यं ______ शक्नोति। (लिख्)
    5. नलः _____ अजानीत्। (पच्)
    6. भवति, एतत् उपकारं ______ अर्हति। (कृ)
    7. बालिका संयक् ______ जानाति। (गा)
    8. छात्रः प्रश्नं अर्हति। (पृच्छ्)
    9. मूषकः बिलं _____ शक्नोति। (प्रविश्)
    10. भ्राता पत्रं _____ पत्रालयं गच्छति। (प्रेष् + णिच् = प्रेषय)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


கடந்த சில பாடங்களில் செயலை உணர்த்தும் வடிவங்களை படித்துக் கொண்டிருக்கிறோம். ஏழு விபக்தி வடிவங்களில் இரண்டு விபக்திகளையும் வாக்கியங்களில் அவை உணர்த்தும் கற்றிருக்கிறோம். ஸம்ஸ்க்ருத கல்விக்கு விபக்தி ஞானம் அஸ்திவாரம் போன்றது. இப்போழுது तृतीया विभक्तिः வடிவங்கள் மற்றும் அவை உணர்த்தும் பொருள்களையும் கற்க சமயம் ஆகி விட்டது. அதனால் நமது அடுத்தப் பாடம்.......
பாடம் 19: ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் த்ரூதியா விபக்தி - तृतीया विभक्तिः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...