ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 19 - ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் த்ரூதியா விபக்தி -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - नवदशः पाठः - तृतीया विभक्तिः

நாம் கற்கப் போவது.......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • கருவி, காரணம், உணர்ச்சிகளை குறிக்க மூன்றாம் வேற்றுமை - तृतीया विभक्तिः

Samskrita Sambashanam – सम्भाषणम् संस्कृतम्

ஸம்பாக்ஷண வீடியோவைக் காண தலைப்பை Click செய்யவும்.இப்பாடத்திற்குறிய ஸம்பாஷண வீடியோ यत्, अपि என்ற மேலும் இரு அவ்யயங்களை விளக்குகிறது. பாடம் 4 இல் நாம் கற்ற अस्मि மற்றும் स्मः க்ரியா பதங்களின் பயிற்சியாக அமைகிறது.

Conversation Practice - सम्भाषणाभ्यासः
यत् शब्दः
एकाग्रतया पठतु इति माता उक्तवती।माता उक्तवती यत् एकाग्रतया पठतु।
द्वारं पिदधातु इति सिक्षकः उक्तवान्।सिक्षकः उक्तवान् यत् द्वारं पिदधातु।
संस्कृतं वदन्तु इति अहं वदामि।अहं वदामि यत् संस्कृतं वदन्तु।
दीपं ज्वालयतु इति सेवकः वदति।सेवकः वदति यत् दीपं ज्वालयतु।
उष्णम् जलम् पिबतु इति वैद्यः वदति।वैद्यः वदति यत् उष्णम् जलम् पिबतु।
सत्यं वद इति गुरुः शिष्यं वदति।गुरुः शिष्यं वदति यत् सत्यं वद।
अपि शब्दः
अहं चलनचित्रं पश्यामि।
अभिषेकः अपि चलनचित्रं पश्यति।
युवकः दूरदर्शनम् पश्यति।
अहम् अपि दूरदर्शनं पश्यामि।
शिक्षकः विद्यालयं गच्छति।
अहम् अपि विद्यालयं गच्छामि।

तृतीया विभक्तिः – प्रस्तावः – முகவுரை

கீழேக் காணும் படங்களை கவனித்து வாக்கியங்களையும் படிக்கவும்.

कर्तृपदम्उपकरणम्क्रियापदम्
चित्रकारः कूर्चेन चित्रं रचयति।
कर्तृपदम्उपकरणम्क्रियापदम्
वृद्धः उपनेत्रेण पश्यति।
कर्तृपदम्उपकरणम्क्रियापदम्
बालकः द्विचक्रिकया गच्छति।
कर्तृपदम्उपकरणम्क्रियापदम्
महिला द्रोण्या जलम् आनयति।

மேற்கண்ட வாக்கியங்களில் மஞ்சள் பின்னனியில் तृतीया विभक्तिः வடிவங்கள் எடுத்துக் காட்டப் பட்டுள்ளன. கருவி வேற்றுமையான तृतीया विभक्तिः பொதுவாக கீழ்க்காணும் நான்கு இடங்களில் பயன் படுத்தப்படுகிறது.

இவையல்லாமல் வேறு பல சந்தர்ப்பங்களிலும் तृतीया विभक्तिः வாக்கியங்களில் பயன்படுகிறது. வித்யார்த்திகள் தொடக்க நிலையில் तृतीया विभक्तिः வடிவங்களின் பயிற்சி நன்கு பெறும் வண்ணம் இந்நான்கு காரணங்களைக் காட்டியுள்ளோம் வாக்கியங்களில் तृतीया विभक्तिः அதிகமாக இடம் பெறுகின்றன. கல்வி தொடர தொடர இவ்விபக்தியின் பயன்பாடுகளை விவரமாக கற்க இருக்கிறீர்கள்.

तृतीयाविभक्तिरूपाणि

மற்ற விபக்தி வடிவங்களைப் போலவே तृतीया विभक्तिः வடிவங்களும் अन्तः, लिङ्गः மற்றும் वचनम् ஒட்டி வேறுபடுகின்றன. முந்தைய உதாஹரணங்கள் तृतीया विभक्तिः வடிவங்களுக்கு நல்ல மாதிரிகளாக அமைகின்றன. இதுவரை நாம் கற்ற அஜந்த ஶப்தங்களின் (अजन्तशब्दाः) முதல் மூன்று (प्रथमा, द्वितीया, तृतीया) மற்றும் ஸம்போதனா (सम्बोधन-प्रथमा) விபக்தி வடிவங்களை கீழே அளித்துள்ளோம். உங்கள் கவனத்திற்காக तृतीया विभक्तिः வடிவங்கள் பின்னனியுடன் காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஸப்தத்தின் எட்டு வடிவங்களையும் காண தலைப்பை ‘Click’ செய்யவும்.

अकारान्तः पुल्लिङ्गः ‘रामः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारामःरामौरामाः
सं.प्रथमाहे रामहे रामौहे रामाः
द्वितीयारामम्रामौरामान्
तृतीयारामेणरामाभ्याम्रामैः
  • देवेन, शिवेन, हस्तेन போன்றவை तृतीया एकवचनम् இல் இயல்பான வடிவங்கள். பட்டியலில் காணும் ‘रामेण’ வடிவம் ‘रषाभ्यां नो णः समानपदे’ என்ற பாணினீய ஸூத்ரத்தை அனுஸரித்து அமைகிறது. ஸூத்ரத்தின் படி 'न' எழுத்து 'र्', 'ष्' அல்லது 'ॠ' வை தொடர்ந்து வந்தால் 'ण' ஆகிறது.
इकारान्तः पुल्लिङ्गः ‘हरिः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाहरिःहरीहरयः
सं.प्रथमाहे हरेहे हरीहे हरयः
द्वितीयाहरिम्हरीहरीन्
तृतीयाहरिणाहरिभ्याम्हरिभिः
  • மேலே காணும் ‘हरिणा’ பாணினீய ஸூத்ரம் रषाभ्यां नो णः समानपदे’ யின் படி அமைந்துள்ளது. பொதுவான तृतीया வடிவங்கள் कविना, विधिना போன்றவை.
उकारान्तः पुल्लिङ्गः ‘गुरुः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमागुरुःगुरौगुरवः
सं.प्रथमाहे गुरोहे गुरौहे गुरवः
द्वितीयागुरुम्गुरौगुरून्
तृतीयागुरुणागुरुभ्याम्गुरुभिः
  • ‘रषाभ्यां नो णः समानपदे’ ஸூத்ர அடிப்படையில் गुरुणा. பொதுவான வடிவங்கள் शम्भुना, भानुना
ऋकारान्तः पुल्लिङ्गः ‘दातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादातादातारौदातारः
सं.प्रथमाहे दातःहे दातारौहे दातारः
द्वितीयादातारम्दातारौदातॄन्
तृतीयादात्रादातृभ्याम्दातृभिः

ऋकारान्तः पुल्लिङ्गः ‘पितृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमापितापितरौपितरः
सं.प्रथमाहे पितःहे पितरौहे पितरः
द्वितीयापितरम्पितरौपितॄन्
तृतीयापित्रापितृभ्याम्पितृभिः

अकारान्तः स्त्रीलिङ्गः ‘रमा’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारमारमेरमाः
सं.प्रथमाहे रमेहे रमेहे रमाः
द्वितीयारमाम्रमेरमाः
तृतीयारमयारमाभ्याम्रमाभिः

इकारान्तः स्त्रीलिङ्गः ‘मति’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामतिःमतीमतयः
सं.प्रथमाहे मतेहे मतीहे मतयः
द्वितीयामतिम्मतीमतीः
तृतीयामत्यामतिभ्याम्मतिभिः

ईकारान्तः स्त्रीलिङ्गः ‘नदी’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमानदीनद्यौनद्यः
सं.प्रथमाहे नदिहे नद्यौहे नद्यः
द्वितीयानदीम्नद्यौनदीः
तृतीयानद्यानदीभ्याम्नदीभिः

उकारान्तः स्त्रीलिङ्गः ‘धेनु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाधेनुःधेनूधेनवः
सं.प्रथमाहे धेनोहे धेनूहे धेनवः
द्वितीयाधेनुम्धेनूधेनूः
तृतीयाधेन्वाधेनुभ्याम्धेनुभिः

ऋकारान्तः स्त्रीलिङ्गः ‘मातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामातामातरौमातरम्
सं.प्रथमाहे मातःहे मातरौहे मातरः
द्वितीयामातरम्मातरौमातॄन्
तृतीयामात्रामातृभ्याम्मातृभिः

अकारान्तः नपुंसकलिङ्गः ‘फल’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाफलम्फलेफलानि
सं.प्रथमाहे फलहे फलेहे फलानि
द्वितीयाफलम्फलेफलानि
तृतीयाफलेनफलाभ्याम्फलैः
  • அனைத்து अकारान्ताः नपुंसकलिङ्गाः शब्दाः மூன்றாம் விபக்தியிலிருந்து अकारान्ताः पुल्लिङ्गाः शब्दाः (‘राम’ शब्दः) வடிவங்களைப் போன்ற அமைப்புகளையே பெறுகின்றன.
इकारान्तः नपुंसकलिङ्गः ‘वारि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमावारिवारिणीवारीणि
सं.प्रथमाहे वारे – हे वारिहे वारिणीहे वारीणि
द्वितीयावारिवारिणीवारीणि
तृतीयावारिणावारिभ्याम्वारिभिः

इकारान्तः नपुंसकलिङ्गः ‘दधि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादधिदधिनीदधीनि
सं.प्रथमाहे दधे – हे दधिहे दधिनीहे दधीनि
द्वितीयादधिदधिनीदधीनि
तृतीयादध्नादधिभ्याम्दधिभिः
  • ‘वारि’ மற்றும் ‘दधि’ ஶப்தங்களில் तृतीया அமைப்புகள் மாறுவதைக் கவனிக்கவும்,
उकारान्तः नपुंसकलिङ्गः ‘मधु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामधुमधुनीमधूनि
सं.प्रथमाहे मधो – हे मधुहे मधुनीहे मधूनि
द्वितीयामधुमधुनीमधूनि
तृतीयामधुनामधुभ्याम्मधुभिः

सर्वनाम-शब्दानां तृतीयाविभक्तिरूपाणि

வாக்கியங்களில் तृतीया विभक्तिः யின் பயன்பாட்டை கற்கும் முன் ஸர்வநாம ஶப்தங்களின் तृतीया வடிவங்களையும் அறிவோம்.

दकारान्तः पुल्लिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषःएतौएते
द्वितीयाएतम् - एनम्एतौएतान् - एनान्
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
  • एतेन முதலில் (முன் வாக்கியங்களில்) உபயோகபடுத்திய நிலையில் एनेन பயன்படுத்தப்படுகிறது.
दकारान्तः स्त्रीलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषाएतेएताः
द्वितीयाएताम् - एनाम्एतेएताः - एनाः
तृतीयाएतया - एनयाएताभ्याम्एताभिः
  • एतया முதலில் (முன் வாக்கியங்களில்) உபயோகபடுத்திய நிலையில் एनया பயன்படுத்தப்படுகிறது.
दकारान्तः नपुंसकलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएतत्त्एतेएतानि
द्वितीयाएतत् - एनत्एतेएतानि - एनानि
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
  • நபும்ஸக, புல்லிங்க तृतीया विभक्तिः வடிவங்கள் மாறுபடாமல் இருப்பதைக் கவனிக்கவும்.
दकारान्तः पुल्लिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासः तौते
द्वितीयातम्तौतान्
तृतीयातेनताभ्याम्तैः

दकारान्तः स्त्रीलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासातेताः
द्वितीयाताम्तेताः
तृतीयातयाताभ्याम्ताभिः

दकारान्तः नपुंसकलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमातत्तेतानि
द्वितीयातत्तेतानि
तृतीयातेनताभ्याम्तैः

मकारान्तः पुल्लिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकःकौके
द्वितीयाकम्कौकान्
तृतीयाकेनकाभ्याम्कैः

मकारान्तः स्त्रीलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकाकेकाः
द्वितीयाकाम्केकाः
तृतीयाकयाकाभ्याम्काभिः

मकारान्तः नपुंसकलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकिम्केकानि
द्वितीयाकिम्केकानि
तृतीयाकेनकाभ्याम्कैः

दकारान्तः पुल्लिङ्गः ‘भवत्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाभवान्भवन्तौभवन्तः
द्वितीयाभवन्तम्भवन्तौभवतः
तृतीयाभवताभवद्भ्याम्भवद्भिः

दकारान्तः ‘अस्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाअहम्आवाम्वयम्
द्वितीयामाम् - माआवाम् - नौअस्मान् - नः
तृतीयामयाआवाभ्याम्अस्माभिः

दकारान्तः ‘युष्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमात्वम्युवाम्यूयम्
द्वितीयात्वाम् - त्वायुवाम् - वाम्युष्मान् - वः
तृतीयात्वयायुवाभ्याम्युष्माभिः

करणम् उद्धिश्य तृतीया विभक्तिः

தமிழில் ஆல், ஆன் ,ஒடு, ஓடு என்பவை மூன்றாம் வேற்றுமை உருபுகள் என்று நாம் அறிவோம். இவற்றைப் போலவே ஸம்ஸ்க்ருதத்தில் तृतीया विभक्तिः கருவிப் பொருளை உணர்த்த வாக்கியங்களில் பயன்படுத்தப்படுகிறது.

தமிழில் ஆல், ஆன் ,ஒடு, ஓடு உருபுகள் உணர்த்தும் பொருளை ஸம்ஸ்க்ருதத்தில் तृतीया विभक्तिः காட்டுகிறது. ‘केन’, ‘कया’ அல்லது ஒத்த வினாக்களுக்கு விடையாக வாக்கியத்தில் तृतीया-विभक्ति-शब्दः அமைகிறது.



இப்பொழுது உதாஹரண வாக்கியங்களை பாருங்கள். கீழ்க்காணும் வாக்கியங்களில் तृतीया विभक्तिः செயலின் கரணத்தைக் காட்டுகிறது.

तृतीया विभक्तिः - एकवचनम्
कृष्णः चमसेन खादति।
க்ருஷ்ணன் கரண்டியால் உண்கிறான்.
कृष्णः केन खादति।
कृष्णः चमसेन खादति।
चमसः अकारान्तः पुल्लिङ्गः
सा चुरिकया शाकम् कर्तयति।
அவள் காயை கத்தியால் வெட்டுகிறாள்.
सा कया शाकम् कर्तयति?
सा चुरिकया शाकम् कर्तयति।
चुरिका आकारान्तः स्त्रीलिङ्गः
उद्यानपालः जलेन सस्यानि सिञ्चति।
தோட்டக்காரர் நீரால் செடிகளை நனைக்கிறார்.
उद्यानपालः केन सस्यानि सिञ्चति?
उद्यानपालः जलेन सस्यानि सिञ्चति।
जलम् अकारान्तः नपुंसकलिङ्गः
सेविका सम्मार्जन्या स्वच्छम् करोति।
பணிப்பெண் துடைப்பத்தால் சுத்தம் செய்கிறாள்.
सेविका कया स्वच्छम् करोति?
सेविका सम्मार्जन्या स्वच्छम् करोति।
सम्मार्जनी ईकारान्तः स्त्रीलिङ्गः
तृतीया विभक्तिः - द्निवचनम्
अहं हस्ताभ्याम् पात्रम् उद्धारयामि।
நான் இரு கைகளால் பாத்திரத்தை எடுக்கிறேன்.
अहं काभ्याम् पात्रम् उद्धारयामि?
अहं हस्ताभ्याम् पात्रम् उद्धारयामि।
हस्तः अकारान्तः पुल्लिङ्गः
तौ गदाभ्यां युद्धं कुरुतः।
அவர் இருவரும் கதையால் யுத்தம் செய்கிறார்கள்.
तौ काभ्याम् युद्धं कुरुतः?
तौ गदाभ्यां युद्धं कुरुतः।
गदा आकारान्तः स्त्रीलिङ्गः
वयम् नेत्राभ्याम् पश्यामः।
நாம் இரு கண்களால் காண்கிறோம்.
वयम् काभ्याम् पश्यामः?
वयम् नेत्राभ्याम् पश्यामः।
नेत्रम् अकारान्तः नपुंसकलिङ्गः
तृतीया विभक्तिः - बहुवचनम्
गजः पादैः चलति।
யானை கால்களால் நடக்கிறது.
गजाः कैः चलति?
गजाः पादैः चलति।
पादः अकारान्तः पुल्लिङ्गः
युवत्यः पुष्पैः मालां रचयन्ति।
இளம் பெண்கள் பூக்களால் மாலை தொடுக்கிறார்கள்.
युवत्यः कैः मालां रचयन्ति?
युवत्यः पुष्पैः मालां रचयन्ति।
पुष्पम् अकारान्तः नपुंसकलिङ्गः
बालिकाः द्विचक्रिकाभिः विद्यालयं गच्छन्ति।
பெண் குழந்தைகள் சைக்கிளில் பள்ளி செல்கிறார்கள்.
बालिकाः काभिः विद्यालयं गच्छन्ति?
बालिकाः द्विचक्रिकाभिः विद्यालयं गच्छन्ति।
द्विचक्रिका आकारान्तः स्त्रीलिङ्गः

सहयोगे तृतीया

வாக்கியங்களில் பெயர் சொற்கள் ‘सह’ பதத்துடன் வரும்கொழுது तृतीया विभक्तिः யை ஏற்கின்றன. அவ்யய ஶப்தமான ‘सह’ ‘உடன்’ என்ற பொருளைக் குறிக்கிறது. குறிப்பிட்ட செயல் கர்த்தாவால் வேறு ஒருவருடன் அல்லது சிலருடன் செய்யப்படும்போது ‘सह’ பயன்படுத்தப்படுகிறது. तृतीया विभक्तिः ரூபம் ‘सह’ உடன் இணைந்து வருவதை கீழ்க் காணும் உதாஹரணங்கள் விளக்குகின்றன.

पुत्रः जनन्या सह मन्दिरं गच्छति।மகன் அன்னையுடன் ஆலயம் செல்கிறான்.
त्वम् आवाभ्याम् सह क्रीड।நீ எங்கள் இருவருடன் விளையாடு.
अहं मित्रैः सह तरामि।நான் என் நண்பர்களுடன் நீந்துகிறேன்.
भवन्तः मया सह आगच्छन्तु।நீங்கள் அனைவரும் என்னுடன் வாருங்கள்.
तत्र त्वया सह कः अस्ति।அங்கே உன்னுடன் யார் இருக்கிறார்?
अध्यापिका छात्रैः सह पर्यटनं कृतवती।ஆசிரியை மாணவர்களுடன் யாத்திரை சென்றாள்.
शिष्याः गुरुणा सह वसन्ति।சிஷ்யர்கள் குருவுடன் வசிக்கிறார்கள்.

विनायोगे तृतीया

பெயர்சொற்கள் ‘विना’ என்ற அவ்யயத்துடன் இணைந்து வரும்பொழுதும் तृतीया विभक्तिः யை ஏற்கின்றன. ‘विना’ ‘இல்லாமல்’ என்ற ‘सह’ ஶப்தத்தின் எதிர்மறைப் பொருளை உணர்த்துகிறது. ‘विना’ பயன்பாட்டினை உதாஹரணங்கள் விளக்குகின்றன

मीनाः जलेन विना न जीवन्ति।நீரில்லாமல் மீன்கள் வாழ்வதில்லை.
वृद्धः दण्डेन विना न चलति।முதியவர் கைத்தடி இல்லாமல் நடக்க மாட்டார்.
अन्नेन विना जनाः दुर्बलाः भवन्ति।உணவில்லாமல் மக்கள் வலிவிழந்தவர் ஆகின்றனர்.
रामः भरतशत्रुघ्नाभ्यां विना अरण्यम् गतवान्।ராமன் பரத-சத்ருக்னர்கள் இல்லாமல் வனம் சென்றான்.
पुत्रः पित्रा विना नगरं गतवान्।மகன் தந்தை இல்லாமல் நகரத்திற்கு சென்றான்.

भाववाचकेभ्यः तृतीया

மேலும் ஒரு तृतीया विभक्तिः பயன்பாட்டுடன் இப்பாடத்தை நிறைவு செய்கிறோம். செயலின் பின்னனியலுள்ள உணர்வுகளை तृतीया विभक्तिः வடிவங்கள் குறிக்கின்றன. செயல் எலையில் செய்யப்பட்டது என்பதை तृतीया विभक्तिः ரூபங்கள் உணர்த்துகின்றன. உதாஹரணங்களை கவனிக்கவும்.

वयम् आनन्देन क्रीडामः।நாங்கள் ஆனந்தமாக விளையாடுகிறோம்.
ते कष्टेन जीवन्ति।அவர்கள் கஷ்டபட்டு வாழ்கிறார்கள்.
सः स्पष्टतया संस्कृतं वदति।அவர் ஸம்ஸ்க்ருதம் தெளிவாக பேசுகிறார்.
छात्रः आलस्येन न पठतु।மாணவன் சோம்பேறித்தனமாக படிக்கலாகாது.
अश्वः वेगेन धावति।குதிரை வேகமாக ஓடுகிறது.

இப்பாடம் சற்றே கடினமாக தோன்றுகிறதா? தற்பொழுது நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது तृतीया विभक्तिः வடிவங்களை கற்றலும் படிக்கும் வாக்கியங்களில் அவற்றை கண்டறிவதும் ஆகும். இவ்வகையில் நம்மால் तृतीया विभक्तिः உபயோகத்தை எளிதில் அறிந்துக் கொள்ள முடியும். வழக்கம் போல் பயிற்சியுடன் பாடத்தை முடிக்கிறோம். अभ्यासं कृत्वा पाठं समापयाम।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கொடுக்கப்பட்ட ஶப்தத்தின் तृतीया विभक्तिः ரூபங்கள் மூன்று வசனத்திலும் எழுதுக. दत्तस्य शब्दस्य तृतीयाविभक्तिरूपाणि त्रिषु अपि वचनेष् लिखन्तु।

    उदाहरणम्

    सुधाखण्डः – अकारान्तः पुल्लिङ्गशब्दः
    सुधाखण्डेन सुधाखण्डाभ्याम् सुधाखण्डैः

    1. धैर्यम् – अकारान्तः नपुंसकलिङ्गशब्दः
    2. नौका (படகு) – आकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    3. शक्तिः – इकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    4. त्वम् – दकारान्तः युष्मद्-शब्दः त्रिषु लिङ्गेषु
    5. शम्भुः – उकारान्तः पुल्लिङ्गशब्दः
    6. त्यागः – अकारान्तः पुल्लिङ्गशब्दः
    7. मुनिः – इकारान्तः पुल्लिङ्गशब्दः
    8. भ्राता – ऋकारान्तः पुल्लिङ्गशब्दः
    9. गौरी – ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    10. अस्थि – इकारान्तः नपुंसकलिङ्गशब्दः (दधिशब्दवत्)

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संस्कृत-अनुवादम् कुरुत ।
    1. ரமேஷ் சுரேஷுடன் பூங்காவை நோக்கி ஓடுகிறான் (பூங்காவை நோக்கி– उद्यानं प्रति)
    2. முதியவர் கைத்தடியுடன் நடக்கிறார். (கைத்தடி - दण्डः)
    3. சிவன் (தன்) சகோதரன் இல்லாமல் பள்ளிக்கு வர மாட்டான்.
    4. ரமா பேனாவினால் எழுதுகிறாள். (பேனா – लेखनी)
    5. தாய்மார்கள் குழந்தைகளை அன்புடன் வளர்க்கிறார்கள். (வளர்த்தல்– पालय அன்பு - प्रीतिः)

  3. கோடிட்ட இடங்களை அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தாதுக்களுக்குரிய तृतीया विभक्तिः கொண்டு நிரப்பவும். आवरणे दत्तैः शब्दानां तृतीया-पदैैः रिक्तस्थानानि पूरयतु।
    1. वयं _____ श्रुणुमः। (कर्ण)
    2. अहं _____ जिघ्रामि। (नासिका) (जिघ्रामि - smell)
    3. महिला _____ अलङ्करोति। (कङ्कणम् - बहुवचनम्)
    4. जननी ______ पाकं करोति। (अनायासः)
    5. मित्राणि _____ कालं यापयन्ति। (वार्तालापः)
    6. पर्यटकाः ______ जलं पिबन्ति। (कूपी)
    7. भक्ताः ______ देवं अर्चन्ति। (पुष्पाणि)
    8. जननी ____ सह निद्राति। (शिशुः)
    9. _____ विना प्रकाशः न भवति। (सूर्यः)
    10. अर्जुनः _____ विश्वरूपं दर्शितवान्। (आश्चर्यम्))

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


கருவியை உணர்த்தவும் ஆல், ஆன், ஒடு, ஓடு என்கின்ற உருபுகளுக்கு இணையாகவும் तृतीयाविभक्तिः பயன்படுகிறது என்று கண்டோம். முன்பொரு பாடத்தில் द्वितीयाविभक्तिः, கர்மத்தை உணர்த்துவதையும் கண்டோம். இந்த வாக்கியத்தை கவனியுங்கள்......

ஆசிரியர் மாணவனுக்கு புத்தகத்தை கொடுக்கிறார்.

மேற்கண்ட வாக்கியத்தில் புத்தகத்தை செயல்பாடு பொருளாகவும் (कर्म) மாணவனனை செயலின் பயனை பெறுபவராகவும் காண்கிறோம். நான்காம் வேற்றுமை ஸம்ஸ்க்ருதத்தில் எப்படி அமைகிறது? चतुर्थी विभक्तिः பற்றி அடுத்த பாடம் விளக்குகிறது. நமது அடுத்த பாடம்.........
பாடம் 20: ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் சதுர்த்தீ விபக்தி- चतुर्थी विभक्तिः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...