ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 2 - இருப்பைக் குறிக்கும் க்ரியா பதங்கள்

प्रावेशिकः स्तरः - द्वितीय-विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - द्वितीयः पाठः - अस्ति, स्तः, सन्ति

நாம் கற்கப் போவது........

இப்படிவின் முதல் பாடமான प्रथमा विभक्ति யில் நாம் கற்றது....

  • நாமபதங்கள் पुल्लिङ्गं, स्त्रीलिङ्गं மற்றும் नपुंसकलिङ्गं என்று மூன்று லிங்கங்களாக பிரிக்கப்படுகின்றன.
  • நாம்பதங்கள் एकवचनम्, द्विवचनम् , बहुवचनम् என்று மூன்று வகையான வசனங்களையும் கொண்டுள்ளன.
  • மூன்று லிங்கங்களிலும் மூன்று வசனங்களிலும் प्रथमा विभक्तिः ரூபங்கள்.
  • ஸர்வ நாமஸப்தங்களின் प्रथमा विभक्तिः வடிவங்கள்.

முதல் பாடத்தில் கற்ற எளிய வாக்கியங்களை (लगु-वाक्यानि) மறுபடியும் பார்ப்போம்.

एषः छात्रः - இவன் மாணவன்
एषा पेटिका - இது பெட்டி
एतानि फलानि - இவைகள் பழங்கள்

தமிழுக்கும் ஸம்ஸ்க்ருதத்திற்கும் உள்ள ஒரு ஒற்றுமையை நாம் இங்கே காண்கிறோம். இவ்வாக்கியங்களில் வினையைக்குறிக்கும் क्रियापदानि இடம் பெறவில்லை. தமிழைப் போலவே ஸம்ஸ்க்ருத வாக்கியங்களில் பல இடங்களில் क्रियापदम् இல்லாமலேயே செயல் அறியப்படுகிறது.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

முதல் வகுப்பில் கண்ட பள்ளிக்கூட ஸம்பாஷணம் வீடியோவை மீண்டும் காண்போம்.
வீடியோவில் கற்ற சில வாக்கியங்களைப் பார்ப்போம்.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் - सम्भाषणाभ्यासः
फलम् अस्ति – பழம் இருக்கிறது. पुस्तकम् नास्ति – புஸ்தகம் இல்லை.
धनस्यूतः अस्ती – பணப்பை இருக்கிறது.धनम् नास्ति – பணம் இல்லை.
आसन्दः अत्र अस्ति - நாற்காலி இங்கே இருக்கிறது.उदयनः तत्र अस्ति – உதயனன் அங்கே இருக்கிறான்.
भवतः मित्रं कुत्र अस्ति? – உங்கள் நண்பர் எங்கே இருக்கிறார்?मम मित्रं अन्यत्र अस्ति – என் நண்பன் வேறிடத்தில் இருக்கறான்.
प्रकाशः सर्वत्र अस्ति – வெளிச்சம் எங்கும் இருக்கிறது.छात्राः एकत्र सन्ति – மாணவர்கள் (ஆண்) ஒரு இடத்தில் இருக்கிறார்கள்.
அறியப்படவேண்டிய சொற்கள் -     अस्ति    नास्ति    अत्र    तत्र    कुत्र   अन्यत्र   सर्वत्र   एकत्र

आम् , न

अस्ति, नास्ति , सन्ति என்ற வீடியோவில் கேட்ட வார்த்தைகளை படங்களுடன் இணைத்துக் கற்கலாம். தமிழில் பழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தையையும் காணலாம்.

किम्, एषः वृक्षः?
आम्।
आम् एषः वृक्षः।

किम्, एषः वृक्षः अस्ति?
आम् एषः वृक्षः अस्ति।
किम् सः सिंहः?
न।
न, सः वानरः।

किम् सः सिंहः अस्ति?
न, सः सिंहः नास्ति।
सः वानरः अस्ति।
किम् सा दर्वी?
आम्।
आम्, सा दर्वी।

किम्, सा दर्वी अस्ति?
आम्, सा दर्वी अस्ति।
किम्, एषा लेखनी?
न।
न, एषा अङ्कनी।

किम्, एषा लेखनी अस्ति?
न, एषा लेखनी नास्ती।
एषा अङ्कनी अस्ति।
किम्, एतत् नेत्रम्?
न।
न, एतत् उपनेत्रम्।

किम्, एतत् नेत्रम् अस्ति?
न, एतत् नेत्रं नास्ति।
एतत् उपनेत्रम् अस्ति।
किम् तत् लोकयानम्?
आम्।
आम् तत् लोकयानम्।

किम् तत् लोकयानम् अस्ति?
आम्, तत् लोकयानम् अस्ति।
  • உடன்பாடு அல்லது எதிர்மறை வாக்கியங்களில் க்ரியா பதம் கட்டாயமில்லை.
  • आम् – ஆம் (தமிழுலுள்ளது போலவே). न – இல்லை.
  • क्रियापदम् अस्ति உடன்பாட்டையும் क्रियापदम् नास्ति எதிர்மறையையும் உணர்த்துகின்றன.

लट् लकारः

காலம் அல்லது பாவ நிலையை உணர்த்த ஸம்ஸ்க்ருதத்தில் க்ரியா பதங்கள் பாணினியினால் பத்து வகைகளாக வகுக்கப்பட்டுள்ளன. இவைகள் லகாரங்கள் (लकाराः) என அறியப்படுகின்றன. நாம் முதலில் கற்க இருப்பது நிகழ்காலத்தை உணர்த்தும் ‘லட் லகாரம் लट् लकारः’.

अस्ति, स्तः, सन्ति

ஸம்ஸ்ம்ருதத்தில் வினைச்சொல்லின் மூல ரூபம் தாது धातुः என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு லகாரத்திலும் க்ரியபதங்கள் पुरुषः (நிலை) மற்றும் वचनम् (எண்) அனுஸரித்து தாதுவிலிருந்து அமைகின்றன.

லிங்கத்தை (लिङ्गम्) ஒட்டி க்ரியாபதங்கள் அமைவதில்லை. लकारः, पुरुषः மற்றும் वचनम् ஒட்டியே க்ரியாபதங்கள் அமைகின்றன.

வசனங்கள் एकवचनम्, द्विवचनम् , बहुवचनम् மூன்றென அறிவோம். தமிழில் உள்ளது போலே ஸம்ஸ்க்ருததிலும் प्रथमपुरुषः, मध्यमपुरुषः, उत्तमपुरुषः என்று நிலைகளும் மூன்று.

கவனிக்க; ஸம்ஸ்க்ருதத்தில் நிலைகளின் வரிசை திரும்பியுள்ளது.

முன் கண்ட படங்களுடன் கூடிய எடுத்துகாட்டுகளிலிருந்து अस्ति இருப்பதையும் नास्ति இல்லாததை குறிப்பதையும் அறிந்தோம். अस् தாதுவின் प्रथमपुरुषः (படர்க்கை ), एकवचनम् (ஒருமை) लट् लकार வடிவம் अस्ति. लट् लकार த்தில் இந்த தாதுவின் ஏனைய வசன, புருஷ வடிவங்களின் எடுத்துக்காட்டுகளைப் பார்ப்போம். பின்னர் இவற்றை ஒன்றாக ஒரு பட்டியலில் காணலாம்.

किम्, एतौ गजौ ?
आम्।
आम्, एतौ गजौ।

किम्, एतौ गजौ स्तः?
आम्, एतौ गजौ स्तः।
किम् ते कलिके?
आम्।
आम्, एते कलिके।

किम् ते कलिके स्तः ?
आम्, एते कलिके स्तः।
किम्, एते फले ?
न।
न, एते पुष्पके।

किम्, एते फले स्तः ?
न, एते फले न स्तः।
एते पुष्पके स्तः।
किम्, ते अध्यापकाः?
न।
न, ते छात्राः।

किम्, ते अध्यापकाः सन्ति?
न, ते अध्यापकाः न सन्ति।
ते छात्राः सन्ति।
किम्, एताः वैध्याः?
न।
न, एताः नर्तक्यः।

किम्, एताः वैध्याः सन्ति?
न, एताः वैध्याः न सन्ति।
एताः नर्तक्यः सन्ति।
किम् तानि छत्राणि?
आम्।
आम्। तानि छत्राणि।

किम् तानि छत्राणि सन्ति?
आम्, तानि छत्राणि सन्ति।

अस्-धातुरूपाणि

பட்டியல் अस् தாதுவின் प्रथमपुरुषः வடிவங்களைக் காட்டுகிறது. தொடரும் பாடங்களில் மற்ற வடிவங்களை கற்கும்பொழுது பட்டியல் நிறைவு பெறும்.

अस् – लट् लकारः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअस्तिस्तःसन्ति
मध्यमपुरुषः
उत्तमपुरुषः

अस् க்ரியாபதங்களைக் கொண்ட சற்றே நீண்ட வாக்கியங்களுடன் இப்பாடத்தை நிறைவு செய்கிறோம்.

लक्षमीः अध्यापिका अस्ति।
லக்ஷ்மீ ஆசிரியையாக இருக்கிறாள்/இருக்கிறார்.
युवकः आरक्षकः नास्ति। सः सैनिकः अस्ति।
இளைஞர் காவலர் இல்லை. அவர் போர் வீரர்.

பயிற்சி இல்லாத பாடமா? अभ्यासेन एव ज्ञानं दृढं भवति। இதோ சில சுவாரஸ்யமான பயிற்சி பாடங்கள்.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. अस्ति, அல்லது नास्ति உபயோகித்து படத்தில் உள்ளதா இல்லையா என்பதைக் காட்டுங்கள். चित्रं दृष्ट्वा रिक्तस्थानानि अस्ति वा नास्ति उपयुज्य पूरयन्तु।

    1. पर्वतः ______.
    2. नौका ______.
    3. सरोवरः ______.
    4. आकाशः ______.
    5. कमलम् ______.
    6. मेघः ______.
    7. सूर्यः _______.
    8. भवनम् _______.
    9. जलम् _______.
    10. बालिका ________.

  2. கீழ்க்காணும் பதங்களுடன் अस्ति அல்லது सन्ति சேர்த்து வாக்கியங்கள் அமைக்கவும். निर्दिष्टैः पदैः सह अस्ति वा सन्ति योजयित्वा वाक्यानि रचयन्तु।

  3. பட்டியலில் வாக்கியங்களை பூர்த்தி செய்யுங்கள். कोष्टे दत्ताम् सूचनाम् अनुसृत्य वाक्यानि रचयन्तु।
    रमानर्तकी
    शङ्करःवैद्यः
    अर्जुनःयोद्धा
    राजेशःअध्यापकः
    राधिकाअध्यापिका
    जननीसुन्दरी
    बालकःछात्रः
    वृद्धःस्वस्थः
    जनकःशान्तः
    सीतासेविका
  4. उदाहरणम् – எடுத்துக்காட்டு

    रमा नर्तकी अस्ति।
    शङ्करः वैद्यः नास्ति।

उत्तराणि – விடைகள்       

शब्दार्थः
नौका - आकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - படகு
कमलम् - अकारान्तः नपुंसकलिङ्गशब्दः एकवचनम् - தாமரை
भवनम् - अकारान्तः नपुंसकलिङ्गशब्दः एकवचनम् - வீடு
भल्लूकाः - अकारान्तः पुल्लिङ्गशब्दः वहुवचनम् - கரடிகள்
छुरिका - आकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनमं - கத்தி
नर्तकी - ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - நர்த்தகி
व्यजनानि - अकारान्तः नपुंसकलिङ्गशब्दः बहुनतनम् - விசிறிகள்
वैद्यः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - ஆண் மருத்துவர்
वैद्या - आकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - பெண் மருத்துவர்
योद्धा - ऋकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - போராளி
जननी - ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - தாய்
जनकः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - தந்தை
वृद्धः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - வயதானவர்
सुन्दरी - ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - சுந்தரி
स्वस्थः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - ஆரோக்கியமான
शान्तः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - சாந்தமான
सेविका - आकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - பணிப்பெண்

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.

இப்பாடத்தில் நாமபதம், க்ரியாபதம் இரண்டையும் இணைத்து வாக்கியங்கள் அமைக்க கற்றோம். தொடரும் பாடத்தில் வேறு சில தாதுக்களின் க்ரியா பதங்களைக் கற்க இருக்கிறோம்.
பாடம் 3: பரஸ்மைபதீ க்ரியா பதங்கள் - परस्मैपदी क्रियापरिचयः - लट् लकारः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...