ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 24 - ஸம்ஸ்க்ருத அவ்யயங்கள் -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - चतुर्विंशतिः पाठः - अव्ययानि

நாம் கற்கப் போவது......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • ஸம்ஸ்க்ருத அவ்யயங்கள் – अव्यय-पदानि.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்துடன் இணைந்த ஸம்பாஷண வீடியோவைக் காண தலைப்பைக் ‘க்ளிக்’ செய்யவும். வீடியோவில் நாம் காண்பது.......

வகுப்பறையில் (வீடியோவில்) புனையப்பட்ட வாக்கியங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸம்பாஷண பயிற்சி - सम्भाषणाभ्यासः
अद्यतन-गृहपाठं लिखितवान् वा?
இன்றைய வீட்டு பாடம் எழுதினாயா?
अद्यतन-बालकाः एव श्वस्तन-पौराः।
இன்றைய பிள்ளைகள் நாளைய குடிமகன்கள்.
श्वस्तन-कार्यम् अद्य एव चिन्तयतु।
நாளையக் காரியத்தைக் குறித்து இன்றே சிந்தி!
ह्यस्तन-पत्रिकां पठितवान् वा?
ह्यस्तन-गृहपाठं लिखितवती वा?
ह्यस्तन-पाठं न पठितवती।
अद्यतन-अल्पाहारे मिष्टान्नं भवतु।
இன்றைய சிற்றுண்டியில் இனிப்பு இருக்கட்டும்.
भारतदेशस्य पूर्वतन-नाम आर्यावर्तः।
பாரத தேசத்தின் முந்தைய பெயர் ஆரியாவர்த்தம்.
लाल् बहादूर शास्त्री भारतदेशस्य पूर्वतन-प्रधान-मन्त्री।
லால் பஹாதூர் ஶாஸ்திரீ பாரத நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி.
विवेकानन्दस्य पूर्वतन-नाम नरेन्द्रः.।
விவேகானந்தரின் முந்தைய பெயர் நரேந்திரன்.
इदानीम्तन-बालाः बहु चतुराः सन्ति।
இந்நாளைய பிள்ளைகள் மிகவும் கெட்டிக்காரர்கள்.
इदानीम्तन-युवकाः परिश्रमं न कुर्वन्ति।
இந்நாளைய இளைஞர்கள் கடினமாக உழைப்பதில்லை.
इदानीम्तन-महिलाः सर्वेषु क्षेत्रेषु कार्यानि कुर्वन्ति।
இந்நாளில் பெண்கள் அனேத்து காரியங்களிலும் ஈடுப்பட்டுள்ளார்கள்.
इदानीम्तन-कार्यालये सङ्गणकानि सन्ति।
இந்நாளைய அலுவலகங்களில் கணினிகள் உள்ளன.
पूर्वतनकाले यन्त्रस्य उपयोगः अधिकः नासित्।
முந்தைய நாட்களில் எந்திரங்களின் உபயோகம் அதிகமாக இல்லை.
इदानीम्तनकाले सर्वे यन्त्रस्य उपयोगं कुर्वन्ति।
இந்நாட்களில் அனைத்து இடங்களிலும் எந்திரங்கள் உபயோகப்படுகின்றன.
अद्य अहम् अत्र अस्मि।
गत-दिने मैसूरु नगरे आसम्।
गत-सप्ताहे मम परीक्षा आसीत्।
गतमासे मम कन्याः विवाहः आसीत्।
गतवर्षे मम सहोदरः विदेशं गतवान्।
गतसप्ताहे मम सख्याः जन्मदिनम् आसित्.
आगामि-सप्ताहे मम जन्मदिनं भविष्यति।
आगामिमासे दीपावली भविष्यति।

अव्ययानि पदानि

முன் படித்த பாடங்களிலும் கண்டு கேட்ட ஸம்பாஷண வீடியோக்களிலும் நாம் சில அவ்ய்ய பதங்களை (अव्ययानि पदानि) கற்றிருக்கிறோம். ‘सुप्तिङन्तं पदम् ’ (1.4.14) என இருவகையாகவே ऋषिः पाणिनिः பதத்தை (पदम्) வரையறுத்துள்ளார். அதாவது ‘सुप्’ அல்லது ‘तिङ्’ प्रत्ययाः முறையே ப்ராதிபதிகம் தாதுவுடன் இணைந்து பதங்கள் உருவாகின்றன. இவை நாம, க்ரியா (नामपदानि, क्रियापदानि) பதங்களாகின்றன, அவ்யயங்களும் प्रातिपदम्, सुप् சேர்க்கையால்தான் உருவாகின்றன. ஆனால் பத நிர்மாண சமயத்தில் 'सुप्’ प्रत्ययः தள்ளப்படுவதால் அனைத்து விபக்தி, லிங்க வசனங்களிலும் ஒரே வடிவத்தைப் பெறுகின்றன. ஆதலால் அவ்யயங்களும் பத அந்தஸ்த்தை (पद-संज्ञा) பெறுகின்றன.

ஸம்ஸ்க்ருத அவ்யய பதங்கள் ‘सुप्’ प्रत्ययः’ தள்ளப்படுவதால் உருவாகும் ‘सुबन्तपदानि’. அவை அனைத்து விபக்தி, லிங்க வசனங்களிலும் மாறாமல் ஒரே வடிவத்துடன் இருக்கின்றன.

ஸம்ஸ்க்ருதத்தில் அவ்யயங்கள் பல இருக்கின்றன. நாம் அவ்யயங்களின் பொதுவான வகைகளைக் கூறி உதாஹரணத்திற்காக சில அவ்யயங்களையும் கொடுத்துள்ளோம். அதிகமாக பயன்படும் அவ்ய்ய பதங்களை உள்ளடக்கிய உதாஹரண வாக்கியங்களையும் தந்துள்ளோம்.

வினையுரிச்சொற்கள் அவ்யயங்கள் – क्रियाविशेषणानि अव्ययानि

வினையுரிச்சொற்கள் (Adverbs) ஸம்ஸ்க்ருதத்தில் क्रियाविशेषणानि என்று அறியப்படுகின்றன. கீழே நாம் சில முக்கிய க்ரியா விசேஷணங்களையும் அவை க்ரியாவின் எந்த அம்சத்தை காட்டுகின்றன என்பதையும் காட்டியுள்ளோம். தொடரும் படிவில் பாடப்பகுதிகளை கற்கும்பொழுது உங்களால் இத்தகைய அவ்யயங்களையும் வாக்கியத்தில் அவற்றின் பங்கினையும் அறிந்துக் கொள்ள இயலும்

अव्ययम्தமிழாக்கம்प्रकारः
अद्य, श्वः, ह्यः इत्यादयःநாம் இத்தகைய அவ்யயங்களின் பரிச்சயம் முந்தைய பாடங்களில் பெற்றுள்ளோம்.कालवाचकानि
प्रातः, सायम्காலை, மாலைकालवाचके
अधुना, इदानीम्, सम्प्रतिஇப்பொழுது, இக்காலத்தில்कालवाचकानि
सदा, सर्वदाஎப்பொழுதும்कालवाचके
एकदाஒரே ஓரு சமயம்कालवाचकम्
कदाचित्ஒரு சமயம்कालवाचकम्
तदाஅப்பொழுதுकालवाचकम्
यदा.......तदाWhen…….. thenकालवाचके, सम्बग्द-बोधके
अत्र, तत्र, सर्वत्र, अन्तः, बहिः, अग्रे, पुरतः, परितःநாம் இத்தகைய அவ்யயங்களின் பரிச்சயம் முந்தைய பாடங்களில் பெற்றுள்ளோம்..स्थानवाचकानि
यत्र.......तत्रWhere…….thereस्थानवाचके, सम्बग्द-बोधके
उच्चैःஉரக்கरीतिवाचकम्
शनैःமெல்லरीतिवाचकम्
पुनः, भूयःமீண்டும்रीतिवाचके
शीघ्रम्விரைவாகरीतिवाचकम्
मन्दम्மெதுவாகरीतिवाचकम्
सम्यक्நன்றாகरीतिवाचकम्
तथाஅவ்வாறுरीतिवाचकम्
यथा.......तथाAs…….soरीतिवाचके, सम्बन्ध-बोधके
इत्थम्, एवम्இவ்வாறுरीतिवाचके
किञ्चित्, ईषत्சிறிதுपरिमाणवाचके
केवलम्மாத்திரம்परिमाणवाचकम्
तावत्அவ்வளவுपरिमाणवाचकम्
यावत्.......तावत्As much…….that muchरीतिवाचके, सम्बन्ध-बोधके
किम्, कदा, कुत्र, किमर्थम्, कथम्, कुतःவினாக்கள்प्रश्नवाचकानि

• कालवाचक, स्थानवाचक, रीतिवाचक மற்றும் परिमाणवाचक அவ்யயங்கள் முறையாக कदा, कुत्र/कुतः , कथम्, कियत् என்ற கேள்விகளின் பதில்களாக அமைகின்றன.

வாக்கிய இணைப்புகள் – समुच्चयबोधकानि पदानि

வாக்கியங்களை இணைக்கும் அவ்யயங்கள் வாக்கியங்களில் அதிகம் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை கீழேக் காட்டியுள்ளோம்.

अव्ययपदम्பொருள்
च / तथाAnd மற்றும்
अपिAlso கூட
अतःஅதனால்
यतःஏனென்றால்
परन्तु / किन्तुஆனால்
यदि / चेत्If
तर्हिThen

உதாஹரண வாக்கியங்கள் – उदाहरणवाक्यानि

‘तु’, ‘हि’ போன்ற மேலும் சில அவ்யயங்கள் வெறும் இடைச்சொற்களாக வருகின்றன. மேலேக் கொடுக்கப்பட்டுள்ள அவ்யய பதங்கள் அமைந்த சில உதாஹரண வாக்கியங்களை பார்ப்போம். அவ்யய பதங்கள் மஞ்சள் பின்னனியில் காட்டப்பட்டுள்ளன.

शशकः शीघ्रम् गच्छति।முயல் வேகமாக செல்கிறது.
कूर्मः मन्दम् गच्छति।
कूर्मः शनैः गच्छति।
ஆமை மெதுவாக செல்கிறது.
शिशुः उच्चैः रोदिति।குழந்தை சத்தமாக அழுகிறது.
कृपया शनैः वदतु।மெதுவாக பேசுங்கள்.
बालिका सम्यक् गायति।சிறுமி நன்றாக பாடுகிறாள்.
रामः गच्छति। लक्ष्मणः गच्छति।
रामः लक्ष्मणः गच्छतः।
இராமனும் லக்ஷ்மணனும் போகிறார்கள்.
प्रार्थना-समये.....
अध्यापकाः आसन्। अध्यापिकाः आसन्। छात्राः आसन्।
प्रार्थना-समये अध्यापकाः, अध्यापिकाः छात्राः आसन्।
ப்ரார்த்தனை வேளையில் ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் இருந்தனர்.
And
रामलक्ष्मणेभ्यः सह सीता अपि वनम् अगच्छत्।இராம லக்ஷ்மணர்களுடன் சீதையும் வனம் சென்றாள்.
मम पुत्रस्य अपि नाम गिरीशः।என் மகனின் பெயரும் கிரீஶ்.
अपि Also
बालिकाभ्यः एव पाञ्चालिका रोचते, न तरुणीभ्यः।சிறுமிகளுக்கு மட்டுமே பொம்மை பிடிக்கிறது. இளம் பெண்களுக்கு அல்ல.
संस्कृतवर्गे संस्कृतेन एव सम्भाषणं कुर्मः।ஸம்ஸ்க்ருத வகுப்பில் நாங்கள் ஸம்ஸ்க்ருதத்தில் மட்டுமே பேசுகிறோம்.
एव மாத்திரம், மட்டும்

‘च’ என்ற அவ்யயம் குழு அல்லது ஒன்று கூட்டலைக் காட்டுகிறது. வாக்கியத்தில் ‘च’ பெயர்களின் இறுதியில் அமைகிறது.
இராமனும் கிருஷ்ணனும் रामः कृष्णः च



ஏழு விபக்திகளிலும் அமைந்த பதங்களுடன் ‘अपि’ அவ்யயம் இணைகிறது.



உறுதியாக (निश्चयः) ஒன்றைக் கூற ’एव’ பயன்கடுகிறது. ‘एव’ ஒன்றை உறுதி செய்து மற்றவற்றை நீக்கி விடுகிறது.

நேரடி மறைமுக வாக்கியங்களில் அவ்யயங்கள் – ‘इति’ तथा ‘यत्’

வாக்கியங்களை மேற்கோள் காட்டும்பொழுதும் அல்லது வேறொருவரின் கூற்றை கூறும்பொழுதும் ஸம்ஸ்க்ருதத்தில் ‘इति’ அல்லது ‘यत्’ அவ்யயங்கள் பயன்படுகின்றன.

மேற்கோள் குறிகளுக்கிடையில் அமைய ‘इति’ अव्ययम् மேற்கோளை தொடர்கிறது.

उदाहरणम्

“सत्यं वद” इति उपनिषद् वदति।
“इदानीं मम धनम् आवश्यकम” इति रमेशः उक्तवान्।

இவ்வாக்கியங்களை ‘यत्’ உபயோகித்து மறைமுக வாக்கியமாக்கலாம்.

மேற்கோள் குறி “” இல்லூமல் ‘यत्’ பதத்தை மேற்கோள் வாக்கியம் தொடர்கிறது.

उदाहरणम्

“अधिकारी अवदत् यत् विलम्बेन कार्यालयम् न आगच्छतु।"
भगवान् श्रीकृष्णः अर्जुनम् उक्तवान् यत् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज.

மேற்கோள் வாக்கியத்தைக் காட்ட ‘इति’ , ‘यत्’ இரண்டில் ஒன்றை பயன்படுத்தவும். இரண்டையும் அல்ல. उभयं मा प्रयुज्यतु।
‘अहं न जानामि’ इति राधा उक्तवती।   -  
राधा उक्तवती यत् अहं न जानामि।   -  
राधा उक्तवती यत् अहं न जानामि इति   –  

அதனால், ஏனென்றால் – अतः यतः च

அதனால், ஏனென்றால் என்ற சொற்கள் இரு வாக்கியங்களின் இடையில் உள்ள காரண காரிய சம்பந்தத்தை உணர்த்துகின்றன. संस्कृत-भाषायाम् एतत् कार्यं अतः, यतः इति अव्ययद्वयेन सिद्ध्यते. ஸம்ஸ்க்ருதத்தில் अतः, यतः. என்ற இரு அவ்யயங்கள் அதே காரியத்தை செய்கின்றன.

कारण-वाक्यम्कार्यवाक्यम्
विद्युत् नास्ति।दीपः न ज्वलति।
एकम् वाक्यम - विद्युत् नास्ति, अतः दीपः न ज्वलति।
लोकयानं न प्राप्तम्।विलम्बेन आगतवान्।
एकम् वाक्यम - लोकयानं न प्राप्तम्, अतः विलम्बेन आगतवान्।

அவ்யயம் ‘अतः’ காரண கார்ய வாக்கியங்களை ஒரே வாக்கியத்தில் இணைக்கின்றது. வாக்கியத்தில் ‘अतः’, कार्यवाक्यम् உடன் முன்பில் இணைந்து कारण-वाक्यम् தை பின் தொடர்கிறது.

மேல் கண்ட வாக்கியங்கள் அவ்யயம் ‘यतः’ கொண்டு பின் கண்டவாறு அமைகின்றன.

कारण-वाक्यम्कार्यवाक्यम्
विद्युत् नास्ति।दीपः न ज्वलति।
एकम् वाक्यम - दीपः न ज्वलति, यतः विद्युत् नास्ति।
लोकयानं न प्राप्तम्।विलम्बेन आगतवान्।
एकम् वाक्यम - विलम्बेन आगतवान्, यतः लोकयानम् न प्राप्तम्।

அவ்யயம் ‘यतः’ காரண கார்ய வாக்கியங்களை ஒரே வாக்கியத்தில் இணைக்கின்றது. வாக்கியத்தில் ‘यतः’, कारण-वाक्यम् உடன் இணைந்து कार्यवाक्यम् தை பின் தொடர்கிறது. அவ்யயம் ‘अतः’ இடம் பெறும் வாக்கியத்தில் காணப்படும் வரிசை அமைப்பு, அவ்யயம் ‘यतः’ உள்ள வாக்கியத்தில் திருப்பி அமைகிறது.

க்ருதந்த அவ்யயங்கள் - कृदन्त-अव्ययानि

‘क्तवा / ल्यप’ மற்றும் ‘तुमुन्’ போன்ற कृत् ப்ரத்யயங்கள் தாதுக்களுடன் இணைந்து உருவாகும் ரூபங்களை நாம் முன் பாடங்களில் கற்றுள்ளோம். இவை செயல்களைக் குறித்தாலும், धातुः மற்றும் कृत्-प्रत्ययः இணைவதினால் ப்ராதிபதிகங்கள் (प्रातिपदिकानि) ஆகின்றன. மீண்டும் விபக்தி ப்ரத்ய்யங்களுடன் இணையம்பொழுது வடிவம் மாறாமல் அவ்யயங்களாக இருக்கின்றன. இப்பாடங்களை மீண்டும் படிக்க கீழே தரப்பட்டுள்ள ‘links’ ஜ ‘click’ செய்யவும்.

क्त्वा/ल्यप्-प्रत्ययान्तस्य प्रयोग
तुमुन् प्रयोगः

उपसर्गाः

இலக்கணப்படி प्रादयः என்று அறியப்படும் தாதுக்களுடன் இணையும் 22 உபஸர்கங்களும் अव्यय-पदानि என்ற அந்தஸ்த்தைப் பெறுகின்றன. உபஸர்கங்களை பற்றிய பாடத்தை மீண்டும் காண “click” செய்யவும்: उपसर्गाः.

अव्ययपदानि என்றால் என்ன, அவை யாவை என்பதை அறிமுகப்படுத்தி சில உதாஹரண வாக்கியங்களை அளிப்பதும் இப்பாடத்தின் நோக்கமாயிருந்தது. ஸம்ஸ்க்ருத பாடங்களும் பத்திகளும் படிக்க படிக்க அவ்யயங்களைக் குறித்து மேலும் அறியலாம். இந்த சிறிய பாடத்தை எப்பொழுதும் போல அப்யாஸங்களுடன் முடிக்கிறோம். आगच्चन्तु। अव्यय-सम्बन्धितम् अभ्यासं कुर्म।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. வாக்கியங்களில் கோடிட்ட இடங்களை பெட்டியில் உள்ள சரியான அவ்யய பதம் கொண்டு நிரப்புக. कोष्टकतः उचितम् अव्ययम् पदम् चित्वा रिक्तस्थानम् पूरयन्तु।
    एव प्रातः मन्दम् च गन्तुम् अपि उच्चैः बहिः इति गत्वा यतः यत् अतः मा सम्यक्

    1. भ्रमणार्थम् छात्राभ्यां सह न केवलं आचार्याः, प्रधानाचार्यः ............ गमिष्यति।
    2. इदं मिष्टान्नं, रमेशाय, गिरीशाय गीतायै ............ यच्छतु।
    3. वयं विद्यालयम् ......... गच्छामः, अन्यत्र न।
    4. न श्रूयते, कृपया ......... वदतु।
    5. एषा शाटिका बहु ........ अस्ति।
    6. शकटः .......... गच्छति।
    7. कोलाहलं ......... कुरुत।
    8. वृष्टिः अस्ति, ........ छत्रं स्वीकृरु।
    9. “श्रद्धावान् लभते ज्ञानम्” ........ भगवद्गीतायां भगवान् श्रीकृष्णः वदति।
    10. गृहं ........... धनं प्रेषयामि।
    11. गृहात् ....... मा गच्छ।
    12. पिता कार्यालयं ......... सिद्धः आसीत्।
    13. स्वेदकं धरामि, ........ शैत्यम् अस्ति। (स्वेदकः – Sweater)
    14. मम मित्रम् अवदत्, ............ सायंकाले मिलाव।
    15. .......... देवं ध्यायतु।

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संस्कृत-अनुवादम् कुरुत ।
    1. கடின உழைப்பு செய். இல்லாவிடில் தோல்வியடைந்தவனாவாய். (கடின உழைப்பு – परिश्रमम्, இல்லாவிடில் - अन्यथा (अव्ययम्) தோல்வயடைந்தவன் - अनुत्तीर्णः)
    2. கோவிலுக்கு முன்பாக நதி ஓடுகிறது. (முன்பாக- पुरतः, ஓடுகிறது - प्रनहति)
    3. எங்களுடைய பரீக்ஷை திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் இருக்கிறது. (திங்கள் கிழமை – सोमवासरः செவ்வாய் கிழமை – मङ्गलवासरः)
    4. புத்திசாலி சீக்கிரம் புரிந்துக் கொள்கிறான். (புத்திசாலி– बुद्धिमान्, புரிந்து கொள்ளுதல் – अव + गम्)
    5. “என் வாழ்க்கை பிறருக்கு உதவுவதற்கே” என்று நன்மக்கள் நினைக்கிறார்கள். (நன்மக்கள் – सज्जनाः life – जीवनम् பிறருக்கு உதவுதல் – परोपकारम्)
    6. மழை பெய்த்து, அதனால் எங்கும் தண்ணீர் இருக்கிறது.
    7. சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்
    8. நான் இதை வாங்க மாட்டேன், ஏனென்றால் இதன் விலை அதிகம். (இது - इदम् விலை – मूल्यम्)
    9. இப்போழுது போகாதே.
    10. ஸுமேதாவும், ஸுலேகாவும், ஸுரபியும் பரீக்ஷை எழுதுவார்கள். (ஸுரபி - सुरभिः)

  3. அடைப்பில் கூறியபடி வாக்கியங்களை இணைக்கவும், அல்லது மாற்றவும் वाक्यानां परिवर्तनं यथा आवरणे सूचितं कुर्वन्तु।
    1. अत्र शिशवः सन्ति। अत्र बालाः सन्ति। (एकं वाक्यं लिखतु)
    2. पुस्तकालये पुस्तकानि सन्ति। पुस्तकालये क्रीडा-वस्तूनि न सन्ति। (‘एव’ उपयुज्य एकं वाक्यं लिखतु।)
    3. ‘अहं ह्यः चलचित्रम् अपश्यम्’। ललिता अवदत्। (इति)
    4. ‘उत्तिष्ठत जाग्रत’ इति स्वामी विवेकानन्दः उक्तवान्। (यत्)
    5. चिकित्सालयं गच्छामि। शिरोवेदना अस्ति। (अतः)
    6. अद्य रविवासरः। अद्य कार्यालयं नास्ति। (यतः)
    7. भवान् देवं नमतु। भवान् प्रार्थनां करोतु। (एक वाक्येन लिखत्)
    8. काकः जलं न अपिबत्, यतः घटे जलं न्यूनम् आसीत्। (अतः)
    9. भ्राता पाकशालाम् अगच्छत्। भोजनम् अकरोत्। (‘तुमुन्’ उपयुज्य एकं वाक्यं लिखतु)
    10. मयूराः हर्षेण नृत्यन्ति। वर्षाकालः आगतः। (किमर्थम् उपयुज्य प्रश्नवाक्यम्, यतः उपयुज्य उत्तरं च लिखतु।)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......


संस्कृत-नामपदानि क्रियापदानि च என்ற இப்படிவில் நாம் नामपदानि क्रियापदानि, अव्ययानि च பற்றிய தொடக்க நிலை அறிவைப் பெற்றோம். எண்களுடன் (सङ्ख्याः) தொடர்புடைய சொற்களைப் பற்றிய பாடத்துடன் இப்படிவினை நிறைவு செய்கிறோம். நமது அடுத்தப் பாடம்......
பாடம் 25: ஸம்ஸ்க்ருத எண் பெயர்கள் கூடுதல் அறிவோம் - सङ्खया - किञ्चित् अधिकं पठनम्

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...