ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 3 - பரஸ்மைபதீ க்ரியா பதங்கள்

प्रावेशिकः स्तरः - द्वितीय-विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - - तृतीयः पाठः - परस्मैपदी क्रियापरिचयः - लट् लकारः

நாம் கற்கப் போவது........

முதல் பாடத்தில் अस् धातुः வின் க்ரியா வடிவங்களைக் கற்றோம். நமது கல்விப் பயணத்தின் இக்கட்டத்தில் மேலும் சில க்ரியா பதங்களைக் கற்க இருக்கிறோம். வழக்கம் போல் ஸம்பாஷணத்துடன் இப்பாடத்தை தொடங்குவோம்.

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்தில் பள்ளிக்கூட ஸம்பாஷணத்தின் இரண்டாம் வீடியோவைக் காணலாம். மாணவர்களின் ஸம்பாஷணத்திலிருந்து மேலும் சில எளிய வாக்கியங்களைக் கற்கலாம். வீடியோவின் முதல் பகுதியைக் காணவும்

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் - सम्भाषणाभ्यासः
सः छात्रः वा? - न, सः छात्रः न.सा गृहिणी वा - आम् सा गृहिणी.
सा तन्त्रज्ञा वा? - आम् सा तन्त्रज्ञा.सा अभिनेत्री वा? - न, सा नर्तकी.
सः वैद्यः वा? - न, सः वैद्यः नएतत् उपनेत्रं वा? - आम्, तत् उपनेत्रम्.
संस्कृतं सरलं वा? - आम् संस्कृतं सरलं.संस्कृतं मधुरं वा? - आम् संस्कृतं मधुरं.
तस्य नाम किम् ? - அவருடைய (அவனுடைய) பெயர் என்ன?तस्य नाम शेखरः - அவருடைய (அவனுடைய) பெயர் சேகர்
एतस्य नाम किम् ? - இவருடைய (இவனுடைய) பெயர் என்ன?एतस्य नाम सुधीरः
तस्याः नाम किम्? - அவருடைய (அவளுடைய) பெயர் என்ன?तस्याः नाम राजेशेवरी.
एतस्याः नाम किम्? - இவருடைய (இவளுடைய) பெயர் என்ன?एतस्याः नाम शान्तला.
அறியப்படவேண்டிய சொற்கள் -     एतस्य   एतस्याः    तस्य    तस्याः    वा

க்ரியாபத நிர்மாணம் - क्रियापदनिर्माणम्

ஸம்ஸ்க்ருதத்தில் சொல் பதம் என்று அழைக்கப்படுகிறது. பாணினி “ஸுப்திஙன்தம் பதம் सुप्तिङन्तं पदम्”, என சொல்லை வரையறுக்கிறார். सुबन्तम् மற்றும் तिङन्तम् பதங்களை உருவாக்க சேர்க்கும் ப்ரத்யயங்களை (प्रत्ययाः) சுட்டிக் காட்டுகின்றன.

सुबन्तपदानि – பெயர்ச்சொற்கள்.
तिगन्तपदानि – வினைச்சொற்கள்.

க்ரியாபதங்கள் புருஷ (पुरुषः) மற்றும் வசனத்தையொட்டி (वचनम्) அமைகின்றன என்று கடந்த பாடத்தில் பார்த்தோம். தாதுவுடன் (धातुः) புருஷ (पुरुषः) மற்றும் வசனத்தையொட்டி (वचनम्) திங் ப்ரத்யயங்கள் (तिङ्-प्रत्ययाः) இணைந்து க்ரியாபதங்கள் உருவாகின்றன.

எடுத்துக்காட்டு:
अस् धातुः வுடன் வெவ்வேறு ‘திங் ப்ரத்யயங்கள் (तिङ्-प्रत्ययाः)’ இணந்து अस्ति, स्तः, सन्ति என்ற க்ரியாபதங்கள் தோன்றுகின்றன.

திங் ப்ரத்யயங்களை (तिङ्-प्रत्ययाः) பரஸ்மைபதீ, ஆத்மனேபதீ என இருவகையாக பிரிக்கலாம்.

சில தாதுக்கள் परस्मैपदी ப்ரத்யயங்களுடனும் வேறு சில आत्मनेपदी ப்ரத்யயங்களுடனும் இணைகின்றன. இருவகை ப்ரத்யயங்களுடனும் இணையும் தாதுக்கள் உபயபதீ उभयपदी என அறியப்படுகின்றன. தனக்கு பயனளிக்கும் செயல்களை आत्मनेपदी என்றும் பிறருக்கு பயனளிக்கும் செயல்களை परस्मैपदी என்று வேறுபாடு கருதப்பட்டிருந்தது. தற்காலத்தில் இவ்வேறுபாடு கருதப்படுவதில்லை. தாதுக்கள் மூன்று வகையாக பிரிக்கப்படுகின்றன என்று பொதுவாக ஏற்கப்படுகின்றது. முன் பாடத்தில் நாம் கற்ற ‘अस्-घातु ‘, परस्मैपदी வகையில் அடங்கும்.

இப்பாடத்தில் நாம் சில परस्मैपदी धातुः க்களின் लट् लकारः (நிகழ் காலம்) வடிவங்களைக் கற்க இருக்கிறோம். आत्मनेपदी வடிவங்களைத் தொடரும் பாடங்களில் கற்க இருக்கிறோம். கீழ்க் காணும் படங்கள் ஒரு சில लट् लकारः க்ரியாபதங்களை விளக்குகின்றன.

गच्छतिआगच्छतिपठतिलिखति
गायतिहसतिक्रीडतिनृत्यति
पचतिखादतिपाठयतिउपविशति
निद्रातिउत्तिष्ठतिस्नातिधावति

प्रथमपुरुषः – एकवचनम् (Third person singular – படர்க்கை ஒருமை) இல் சில க்ரியாபதங்களை மேலேக் கண்டோம். அவற்றின் பொருள்களை உடன் காணும் படங்கள் தெளிவாக விளக்குகின்றன.
இவ்வினைச் சொற்களுடன் प्रथमपुरुषः – एकवचनम् பெயர்ச் சொற்களை இணத்து வாக்கியங்கள் அமைக்கலாம்.

वालकः पठति – சிறுவன் படிக்கிறான்
बालिका पठति – சிறுமி படிக்கிறாள்
सः पठति –அவன் படிக்கிறான்
एषा पठति – அவள் படிக்கிறாள்
युवकः पठति – இளைஞன் படிக்கிறான்
जनकः पठति – தந்தை படிக்கிறார்.

கீழ்க் காணும் வாக்கியங்களில் மேலும் சில க்ரியா பதங்களை அறியலாம். வாக்கியங்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருந்தாலும் வாக்கியங்களில் காணும் செயல்களை கற்பனை செய்து பாருங்கள். ஸம்ஸ்க்ருத க்ரியா பதங்கள் மனதில் நன்கு பதிய அது உதவும்.

फलम् पततिபழம் விழுகிறது
वृद्धा पश्यतिமூதாட்டி பார்க்கிறார்
अध्यापकः पाठयतिஆசிரியர் கற்பிக்கிறார்
नर्तकः नृत्यतिநாட்டியக்காரர் ஆடுகிறார்
वानरः आरोहतिகுரங்கு ஏறுகிறது
यात्रिकः अवतरतिயாத்ரிகர் இறங்குகிறார்
भक्तः नमतिபக்தர் வணங்குகிறார்
खलः निन्दतिதுஷ்டன் திட்டுகிறான்
कुक्कुरः भ्रमतिநாய் அலைகிறது
सिंहः गर्जतिசிங்கம் கர்ஜிக்கிறது
कृषकः कर्षतिஉழவர் உழுகிறார்
सैनिकः रक्षतिவீரர் காக்கிறார்

படம் एकवचनम्, द्विवचनम् மற்றும் बहुवचनम् த்தில் प्रथमपुरुषः-क्रियापदानि தாதுவிலிருந்து எவ்வாறு உருவாகின்றன என்பதைக் காட்டுகிறது. கீழ்க்காணும் பட்டியலில் மேலும் சில எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

परस्मैपदी प्रथमपुरुषरूपाणि
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
फलम् पततिफले पततःफलानि पतन्ति
बालकः पठतिबालकौ पठतःबालकाः पठन्ति
पुत्री खादतिपुत्र्यौ खादतःपुत्र्यः खादन्ति

लट् पुरुषप्रत्ययान्ताः

எடுத்துக்காட்டுகள் க்ரியாபதங்களின் இறுதி வசனம் அனுஸரித்து எவ்வாறு அமைகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த இறுதி எழுத்துக்கள் புருஷப்ரத்ய்யா: (पुरुषप्रत्ययाः) என அழைக்கப்படுகின்றன. लट् लकारः (நிகழ் காலம்) த்திற்குரிய पुरुषप्रत्ययान्ताः பட்டியலை இப்பொழுது அமைக்கலாம். முன்னிலை (मध्यमपुरुषः) மற்றும் படர்க்கைக்குரிய (उत्तमपुरुषः) புருஷப்ரத்யயங்களை நாம் அடுத்து வரும் பாடத்தில் கற்க இருக்கிறோம். பட்டியலும் அப்பொழுது பூர்த்தி செய்யப்படும். தலைப்பை க்ளிக் செய்து तिङ्न्तमञ्जरी யில் கொடுக்கப்பட்டுள்ள முழுப் பட்டியலையும் காணலாம்.

लटि परस्मैपदप्रत्ययान्ताः – நிகழ்கால விகுதிகள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःतितःसन्ति
मध्यमपुरुषः
उत्तमपुरुषः

करोति

தமிழில் படித்தல், எழுதுதல், குளித்தல் என்பது போன்ற செயலைக்குறிக்கும் பெயர்சொற்களை அறிவோம். ஸம்ஸ்க்ருதத்திலும் இத்தகைய நாம பதங்கள் அனேகம் உள்ளன. பாடங்களில் முன்னேறும்பொழுது நமக்கு இத்தகைய பதங்களின் பரிச்சயம் அதிகம் ஆகும். க்ரியா பதங்களின் இடத்தில் இவ்வகைப்பட்ட நாம பதங்களுடன் करोति க்ரியா பதம் இணைத்து வாக்கியங்களை எளிதாக அமைக்கலாம். करोति ‘செய்கிறான்/செய்கிறாள்’ எனப் பொருள்படுகிறது. இம்முறை க்ரியா பதங்களின் அமைப்பில் தெளிவின்மையோ, சந்தேகமோ இருக்கும் இடங்களில் பெரிதும் உதவுகிறது.

எடுத்துக்காட்டு

भक्तः नमति ।
பக்தன் நமஸ்கரிக்கிறான்.
भक्तः नमनं करोति ।
பக்தன் நமஸ்காரம் செய்கிறான்.
सिंहः गर्जति ।
சிங்கம் கர்ஜிக்கிறது.
सिंहः गर्जनं करोति ।
சிங்கம் கர்ஜனை செய்கிறது.
रामः स्नाति ।
ராமன் குளிக்கிறான்.
रामः स्नानम् करोति ।
ராமன் குளியல் செய்கிறான்.

करोति க்ரியாபதத்தின் மூல தாது ‘कृ’. ‘कृ தாதுவின் க்ரியா வடிவங்கள் சற்றே மாறி அமைகின்றன. இதன் நிகழ்கால (लट्) प्रथमपुरुष க்ரியா பதங்கள் கீழேக் காணலாம்.

लटि ‘कृ’ धातोः परस्मैपदरूपाणि – ‘कृ’ நிகழ்கால அமைப்பு
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःकरोतिकुरुतःकुर्वन्ति
मध्यमपुरुषः
उत्तमपुरुषः

शब्दरूपाणि

अकारान्ताः पुल्लिङ्गाः शब्दाः, आकारान्ताः स्त्रीलिङ्गाः शब्दाः, ईकारान्ताः स्त्रीलिङ्गाः शब्दाः, अकारान्ताः नपुंसकलिङ्गाः शब्दाः ஆகிய ஸப்தங்களின் முதல் உருபு வடிவங்களை முதல் பாடத்தில் கற்றோம், இப்பாடத்தில் மேலும் மூன்று ஸப்த முதல் உருபு வடிவங்களை கற்கலாம். இச்சப்தங்களின் அனைத்து विभक्तिः வடிவங்களையும் தலைப்புக்களை க்ளிக் செய்து ஸப்தமஞ்சரியில் காணலாம்.

इकारान्तः पुल्लिङ्गः ‘हरि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाहरिःहरीहरयः
इकारान्तः स्त्रीलिङ्गः ‘मति’ शब्दः
प्रथमामतिःमतीमतयः
इकारान्तः नपुंसकलिङ्गः ‘वारि’ शब्दः
प्रथमावारिवारिणीवारीणि

अभ्यासं विना ज्ञानं न । इदानीम् अभ्यासाः करणीयाः । அப்யாஸம் இல்லாமல் அறிவா? இப்பாடத்தில் பல வகையான பயிற்சிகளை செய்ய வாய்ப்பு உள்ளது.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. உரிய க்ரியாபதங்களைக் கொண்டு வாக்கியங்கள் அமைக்கவும். उचितानि क्रियापदानि उपयुज्य वाक्यानि रचयन्तु ।

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    நாமபதம் - गायिका தாது - गाय வசனம் - द्विवचनम्
    वाक्यम् - गायिके गायतः

    1. நாமபதம் - वृद्धः தாது - गच्छ வசனம் - बहुवचनम्
    2. நாமபதம் - पुत्रः தாது - पिब Number - एकवचनम्
    3. நாமபதம் - कुर्क्कुरः தாது - बुक्क வசனம் - बहुवचनम्
    4. நாமபதம் - अश्वः தாது - धाव வசனம் - द्विवचनम्
    5. நாமபதம் - महिला தாது - तर வசனம் - एकवचनम्
    6. நாமபதம் - नदी தாது - प्रवह வசனம் - बहुवचनम्
    7. நாமபதம் - पुष्पम् தாது - विकस Number - द्विवचनम्
    8. நாமபதம் - कृषकः தாது - कर्ष Number - एकवचनम्
    9. நாமபதம் - मित्रम् தாது - पठ வசனம் - बहुवचनम्
    10. நாமபதம் - पुत्री தாது - प्रविश வசனம் – द्विवचनम्

  2. முன் தரப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எடுத்துக்காட்டுகளின் த்விவசன, பஹுவசன வாக்கியங்களை எழுதவும். उदाहरणार्थं दत्तानां वाक्यानां द्विबहुवचनरूपाणि लिखन्तु ।

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    फलम् पतति – एकवचनम्
    फले पततः – द्विवचनम् फलानि पतन्ति – बहुवचनम्

  3. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். संस्कृते अनुवादम् करोतु ।
    1. இரு மகளிர் போகிறார்கள் .
    2. இளஞர்கள் நீந்துகின்றனர்.
    3. இரு நர்த்தகிகள் ஆடுகின்றனர்.
    4. சிறுமிகள் எழுதுகிறார்கள்.
    5. இரு சிறுவர்கள் ஏறுகிறார்கள்.
    6. தந்தை சாப்பிடுகிறார்.
    7. தாய்மார்கள் சமைக்கிறார்கள்.
    8. பெண்கள் குளிக்கிறார்கள்.
    9. முதியவர் பார்க்கிறார்.
    10. வானரங்கள் விளையாடுகின்றன.

  4. करोति யுடன் நாம்பதம் இணைத்து வாக்கியங்கள் எழுதவும். करोति उपयुज्य वाक्यानि परिवर्तयन्तु ।

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    जनकः निद्राति (निद्रां) – जनकः निद्रां करोति.

    1. जनकः निद्राति (निद्रां)
    2. जननी पचति (पाकं)
    3. भिक्षुकः भ्रमति (भ्रमणं)
    4. वैद्या श्रृणोति (श्रवणं)
    5. छात्रः स्मरति (स्मरणं)
    6. भक्ता ध्यायति (ध्यानं)
    7. शिशुः रोदिति (रोदनं)
    8. दुष्टः निन्दति (निन्दनं)
    9. गुरुः स्नाति (स्नानं)
    10. अध्यापकः चिन्तयति (चिन्तनं)

उत्तराणि - விடைகள்!       

शब्दार्थः
जनकः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - தந்தை
जननी - ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - தாய்
पुत्रः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - மகன்
पुत्री - ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - மகள்
शिशुः - उकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - குழந்தை
भिक्षुकः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - பிச்சைக்கார்ர்
भक्तः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - பக்தர்
भक्ता - आकारान्तः स्त्रीलिङ्गशब्दः एकवचनम् - பக்தை
तरुणः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - இளைஞன்
तरति - लटि प्रथमपुरुषः एकवचनम् - நீந்துகிறான், நீந்துகிறாள்

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.

இப்பாடத்தில் प्रथमपुरुषः க்ரியாபதங்களை அமைக்க கற்றோம். தொடரும் பாடத்தில் मध्यमपुरुषः மற்றும் उत्तमपुरुषः க்ரியாபதங்களை கற்க இருக்கிறோம்.
பாடம் 4: ஸம்ஸ்க்ருதத்தில் நான்/நீ - अहम् / त्वम्/भवान्/भवती.

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...