ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 4 - ஸம்ஸ்க்ருதத்தில் நான்/நீ

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - चतुर्थः पाठः - अहम् / त्वम्/भवान्/भवती

நாம் கற்கப் போவது........

मम नाम रामः- என்னுடைய பெயர் ராம: இத்தகைய அறிமுக வார்த்தைகளை நாம் கற்றிருக்கிறோம். இவ்வாக்கியத்திற்கு பதில் நான் ராம: - >अहं रामः அல்லது अहं रामः अस्मि என்றும் கூறலாம். अहम् என்ற சொல் தன்னிலை ஒருமையையும் (First person Singular) अस्मि அதற்குரிய இருப்பைக் குறிக்கும் (to be) अस् க்ரியா பதமுமாகும்.

இவற்றைப் பற்றி விரிவாக கற்கும் முன் வகுப்பில் கண்ட ஸம்பாஷண வீடியோவின் இரண்டாம் பாகத்தைக் கேற்கலாம். வகுப்பறை ஸம்பாஷணம்-2

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

ஸம்பாஷணத்திலிருந்து கற்க வேண்டியவைகளைக் காணலாம்.

Conversation Practice - सम्भाषणाभ्यासः
कस्य – யாருடைய (पुल्लिङ्गे/नपुंसकलिङ्गे)
उदयनः उदयनस्य
सुधीरः सुधीरस्य
शिक्षकः शिक्षकस्य
पुस्तकम् पुस्तकस्य
कस्य मुखम्?
सुधीरस्य मुखम्।
कस्य उपनेत्रम्?
सुधीरस्य उपनेत्रम्।
कस्य नासिका?
सुधीरस्य नासिका।
कस्य कर्णः?
सुधीरस्य कर्णः।
कस्य पुत्रः रामः?
दशरथस्य पुत्रः रामः।
कस्य राजधानी देहली?
भारतस्य राजधानी देहली।
कस्य पुत्रः कृष्णः?
वसुदेवस्य पुत्रः कृष्णः।
रामायणस्य लेखकः कः?
रामायणस्य लेखकः वाल्मीकिः।
अस्माकं देशस्य नाम किम्?
अस्माकं देशस्य नाम भारतम्।
पुस्तकस्य नाम किम्?
पुस्तकस्य नाम भगवद्गीता।
कस्याः – யாருடைய (स्त्रीलिङ्गे)
गीता गीतायाः
प्रिया प्रियायाः
राजेश्वरी राजेश्वर्याः
लक्ष्मी लक्ष्म्याः
कस्याः घटी?
गीतायाः घटी।
कस्याः कङ्कणम्?
गीतायाः कङ्कणम्।
कस्याः स्यूतः?
पङ्कजायाः स्यूतः।
कस्याः करवस्त्रम्?
प्रियायाः करवस्त्रम्।
कस्याः कुञ्चिका?
शान्तलायाः कुञ्चिका।
कस्याः आभूषणम्?
नर्तक्याः आभूषणम्।
कस्याः कण्ठहारः?
गृहिण्याः कण्ठहारः।
देव्याः नाम किम्?
देव्याः नाम सरस्वती।
उत्तिष्ठतुददातु

अस्मद् शब्दः

தமிழில் தன்னிலையை உணர்த்தும் ‘நான்’ ‘நாம்/நாங்கள்’ இவற்றிற்கு இணையாக ஸம்ஸ்க்ருத சொற்கள் எவை? நாமபதங்களின் மூலரூபம் प्रातिपदिकम् என்று நாம் அறிவோம். உத்தமபுருஷ ஸர்வநாம பதங்களின் ப்ராதிபதிகம் ‘अस्मद्’ शब्दः’. நாம் நாங்கள் இவற்றிற்கு இணையான எழுவாயை உணர்த்தும் अस्मद् शब्दः த்தின் प्रथमा विभक्तिः வடிவங்களைப் பட்டியலில் காணலாம். முழுமையான பட்டியலைக் காண தலைப்பை ‘க்ளிக்’ செய்யவும்.

दकारान्तः त्रिलिङ्गः ‘अस्मद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाअहम्आवाम्वयम्
>

‘अस्मद्’ शब्दः த்தின் விபக்தி வடிவங்கள் லிங்கத்தை அனுஸரித்து ஏற்படுவதில்லை. மூன்று லிங்கங்களிலும் ஒரே வடிவங்கள் அமைகின்றன.
अहम् – நான்
आवाम् – நாம் இருவர்
वयम् – நாம்/நாங்கள்

தமிழுடன் ஒப்பிடுகையில் தன்னிலையில் (उत्तमपुरुषः) இருமை வடிவங்களையும் (द्विवचनम्) ஸம்ஸ்க்ருதத்தில் காண்கிறோம். இவற்றுடன் வினைச்சொற்கள் எவ்வகையில் இணைகின்றன? ‘अस् धातुः’ வின் प्रथमपुरुषः வடிவங்களை முதல் பாடத்தில் கற்றோம். அவை उत्तमपुरुषः க்கு எப்படி அமைகின்றன என்பதை இப்பொழுது காணலாம்.

எடுத்துக்காட்டுகள்:

अहं रामः अस्मि।நான் ராம:.
अहम् अध्यापकः अस्मि।நான் ஆசிரியர் (ஆண்).
अहं गीता अस्मि।நான் கீதா.
अहं वैद्या अस्मि।நான் மருத்துவர் (பெண்).
आवां बालकौ स्वः।நாங்கள் இருவரும் பாலகர்கள்.
आवां छात्रौ स्वः।நாங்கன் இருவரும் மாணவர்கள்.
आवां छात्रे स्वः।நாங்கள் இருவரும் மாணவிகள்.
आवां नर्तक्यौ स्वः।நாங்கள் இருவரும் நடன மாதர்கள்
वयं कर्षकाः स्मः।நாங்கள் உழவர்கள்.
वयं तन्त्रज्ञाः स्मः।நாங்கள் பொறியாளர்கள்.
वयं बालिकाः स्मः।நாங்கள் சிறுமிகள்.
वयं जनन्यः स्मः।நாங்கள் தாய்மார்கள்.

रामः गच्छति, वालौ गच्छतः, छात्राः गच्छन्ति – சரி! இவற்றிற்கு இணையான उत्तमपुरुषः क्रियापदानि कानि? இதோ கற்க போகிறோம்!

प्रथमपुरुषःउत्तमपुरुषः
एकवचनम्रामः गच्छति।अहं गच्छामि।
द्विवचनम्वालौ गच्छतः।आवां गच्छावः।
बहुवचनम्छात्राः गच्छन्ति।वयं गच्छामः।
एकवचनम्बालकः पश्यति।अहं पश्यामि।
द्विवचनम्बालकौ पश्यतः।आवां पश्यावः।
बहुवचनम्बालकाः पश्यन्ति।वयं पश्यामः।
एकवचनम्राधा नमति।अहं नमामि।
द्विवचनम्महिले नमतः।आवां नमावः।
बहुवचनम्तरुण्यः नमन्ति।वयं नमामः।

நிச்சயமாக நீங்கள் उत्तमपुरुषः க்ரியா பதங்களின் இறுதிகள் எவ்விதம் அமைகின்றன என்பதை ஊகித்திருப்பீர்கள். प्रथमपुरुषः க்ரியாபதங்களிலிருந்து उत्तमपुरुषः க்ரியாபதங்களை எழுதும் முறையை கீழேக் காணலாம்.

‘कृ’ घातुः விலிருந்து க்ரியாபதங்கள் गच्छति, पश्यति, नमति இவற்றிலிருந்து சற்றே மாறி அமைகின்றன. कृ வினை வடிவங்களுடன் उत्तमपुरुषः செயல்கள் எவ்விதம் உணர்த்தப்படுகின்றன என்பதைப் பார்ப்போம்.

एकवचनम्द्विवचनम्बहुवचनम्
अहं स्नानं करोमि।आवां स्नानं कुर्वः।वयं स्नानं कुर्मः।
अहं पाकं करोमि।आवां पाकं कुर्वः।वयं पाकं कुर्मः।
अहं भ्रमणं करोमि।आवां भ्रमणं कुर्वः।वयं भ्रमणं कुर्मः।

उत्तमपुरुषः क्रियारूपाणि க்குரிய பயிற்சியை (अभ्यासः) பாட இறுதியில் செய்யலாம்.

भवान् - भवती

ராமசந்திரன் தன்னெதிரில் காணும் ஒரு ஆண் மற்றும் பெண்ணுடன் இவ்வாறு பேசத் தொடங்குகிறார்.

अहं रामचन्द्रः (अस्मि)
भवान् कः? - ஆணை நோக்கி கேட்கிறார்.
भवती का? - பெண்ணை நோக்கி கேட்கிறார்.

भवान् , भवती என்பவை தமிழில் ‘நீங்கள்’ என்பதற்கு இணையானவை. இவை மரியாதைக் கலந்த முறையான விளிகள். வேறுபாடு என்னவென்றால் இவை முன்னிலையை (मध्यमपुरुषः - Second Person) சேர்ந்தவையல்ல. மாறாக படர்க்கையை (प्रथमपुरुषः – Third Person) சேர்ந்தவை.
भवान्, ‘भवत्’ शब्दः த்தின் प्रथमा एकवचनरूपम्. भवती, नदी சப்தத்தை போல் விபக்தி வடிவங்கள் பெறுகிறது. பட்டியல்களின் தலைப்புகளை க்ளிக் செயுது அனைத்து விபக்தி வடிவங்களையும் காணலாம்.

तकारान्तः पुल्लिङ्गः ‘भवत्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाभवान्भवन्तौभवन्तः


ईकारान्तः स्त्रीलिङ्गः ‘भवती’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाभवतीभवत्यौभवत्यः

प्रथमपुरुषः பெயர்களான भवान्, भवती வாக்கியங்களில் प्रथमपुरुषः க்ரியாபதங்களே அமைகின்றன.

எடுத்துக்காட்டுகள்

एकवचनम्द्विवचनम्बहुवचनम्
भवान् चित्रकारः अस्ति।भवन्तौ चित्रकारौ स्तः।भवन्तः चित्रकाराः सन्ति।
भवान् गच्छति।भवन्तौ गच्छतः।भवन्तः गच्छन्ति।
भवान् खादति।भवन्तौ खादतः।भवन्तः खादन्ति।
भवती गायिका अस्ति।भवत्यौ गायिके स्तः।भवत्यः गायिकाः सन्ति।
भवती गायति।भवत्यौ गायतः।भवत्यः गायन्ति।
भवती उपविशतिभवत्यौ उपविशतः।भवत्यः उपविशन्ति।

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணத்தை தொடக்கத்தில் எளிமையாக்க भवान् மற்றும் भवती நீங்கள் மற்றும் நீ என்றழைக்க பயன்படுத்தலாம். இவ்வாறு தொடக்கத்தில் मध्यमपुरुषः க்ரியா பதங்களைத் தவிர்த்து உரையாடல்களை எளிதாக்கலாம். இவற்றிற்கான பயிற்சிகளையும் பாட இறுதியில் செய்யலாம்.

युष्मद् शब्दः

நமக்கு நெருங்கியவர்களை ‘நீ’ என்று அழைக்கிறோம் அல்லவா? ‘நீ’ (Informal You) க்கு இணையாக ஸம்ஸ்க்ருதத்தில் ‘युष्मद्’ शब्दः த்தின் விபக்தி வடிவங்கள் मध्यमपुरुषः பெயர்களாக பயன்படுகின்றன. ‘युष्मद्’ शब्दः த்தின் அனைத்து விபக்தி வடிவங்களையும் காண பட்டியலின் தலைப்பை க்ளிக் செய்யவும்.

दकारान्तः त्रिलिङ्गः ‘युष्मद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमात्वम्युवाम्यूयम्
>

‘युष्मद्’ शब्दः த்தின் விபக்தி வடிவங்கள் லிங்கத்தை அனுஸரித்து ஏற்படுவதில்லை. மூன்று லிங்கங்களிலும் ஒரே வடிவங்கள் அமைகின்றன.
त्वम् – – நீ (ஒருமை)
युवाम् – நீங்கள் இருவர்
यूयम् – நீங்கள் (பன்மை)

मध्यमपुरुषः ‘अस्’ धातुः எடுத்துக்காட்டுகளைக் காணலாம்.

எடுத்துக்காட்டுகள்

त्वं कृष्णः असि।நீ க்ருஷ்ண:.
त्वं अधिवक्ता असि।நீ வழக்கறிஞர்.
त्वं गौरी असि।நீ கௌரீ.
त्वं गृहिणी असि।நீ இல்லத்தரசி .
युवां तरुणौ स्थः।நீங்கள் இருவரும் இளைஞர்கள்.
युवां छात्रौ स्थः।நீங்கள் இருவரும் மாணவர்கள்.
युवां छात्रे स्थः।நீங்கள் இருவரும் மாணவிகள்.
युवां भक्ते स्थः।நீங்கள் இருவரும் பக்தைகள்.
यूयं सैनिकाः स्थ।நீங்கள் வீரர்கள்.
यूयं चालकाः स्थ।நீங்கள் ஓட்டுனர்கள்.
यूयं नर्तक्यः स्थ।நீங்கள் நர்த்தகிகள்.
यूयं सेविकाः स्थ।நீங்கள் பணிப்பெண்கள்.

मध्यमपुरुषः வாக்கியங்கள் மற்ற க்ரியா பதங்களுடன் எங்ஙனம் அமைகின்றன என்று பட்டியலில் காணலாம்.

प्रथमपुरुषःमध्यमपुरुषः
एकवचनम्रामः गच्छति।त्वं गच्छसि
द्विवचनम्वालौ गच्छतः।युवां गच्छथः।
बहुवचनम्छात्राः गच्छन्ति।यूयं गच्छथ।
एकवचनम्बालकः पश्यति।त्वं पश्यसि।
द्विवचनम्बालकौ पश्यतः।युवां पश्यथः।
बहुवचनम्बालकाः पश्यन्ति।यूयं पश्यथ।
एकवचनम्राधा नमति।त्वं नमसि।
द्विवचनम्महिले नमतः।युवां नमथः।
बहुवचनम्तरुण्यः नमन्ति।यूयं नमथ।

प्रथमपुरुषः க்ரியாபதங்களிலிருந்து मध्यमपुरुषः க்ரியாபதங்களை எழுதும் முறையை கீழேக் காணலாம்

இப்பொழுது ‘कृ’ धातुः வடிவங்களுடன் मध्यमपुरुषः இணைந்த வாக்கியங்களைக் காணலாம்.

एकवचनम्द्विवचनम्बहुवचनम्
त्वं स्नानं करोषि।युवां स्नानं कुरुथः।यूयं स्नानं कुरुथ।
त्वं पाकं करोषि।युवां पाकं कुरुथः।यूयं पाकं कुरुथ।
त्वं भ्रमणं करोषि।युवां भ्रमणं कुरुथः।यूयं भ्रमणं कुरुथ।

மூன்று நிலைகளிலும் ‘लट्-पुरुषप्रत्ययाः’ 'अस्' धातुः மற்றும் ‘कृ’ धातुः பட்டியல்களை பூர்த்தி செய்யலாம்.

लटि परस्मैपदप्रत्ययाः – Present Tense Endings
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःतितःसन्ति
मध्यमपुरुषःसिथः
उत्तमपुरुषःमिवःमः


लटि ‘अस्’ धातोः परस्मैपदरूपाणि – Present tense forms of ‘अस्’
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःअस्तिस्तःसन्ति
मध्यमपुरुषःअसिस्थःस्थ
उत्तमपुरुषःअस्मिस्वःस्मः


लटि ‘कृ’ धातोः परस्मैपदरूपाणि – Present tense forms of ‘कृ’
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःकरोतिकुरुतःकुर्वन्ति
मध्यमपुरुषःकरोषिकुरुथःकुरुथ
उत्तमपुरुषःकरोमिकुर्वःकुर्मः

अस्तु। इदानीम् अभ्यासाः करणीयाः। அப்பியாச பயிற்சிகள் இப்பொழுது செய்ய வேண்டும்!

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. வாக்கியத்திலுள்ள புருஷ நிலையின் மற்ற எண்களுக்குரிய வாக்கியங்களை எழுதவும். समानपुरुषे अन्योः वचनयोः वाक्ये लिखन्तु।

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    अहं पाठयामि – (Given in singular)
    आवां पाठयावः वयं पाठयामः

    1. वयं यच्छामः
    2. युवां धनिकौ स्थः
    3. अहम् उपदिशामि
    4. आवां पचावः
    5. यूयं नमथ
    6. त्वं रक्षसि
    7. वयं शिष्याः सन्ति
    8. त्वं स्नासि
    9. अहं तरामि
    10. युवाम् अटथः

  2. ப்ரதம புருஷ வாக்கியங்களை மத்யம மற்றும் உத்தம புருஷ வாக்கியங்களாக மாற்றவும்: दत्तानि प्रथमपुरुष-वाक्यानि मध्यमपुरुषे तथा उत्तमपुरुषे यथोचितं परिवर्तनं कुर्वन्तु।

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    बालः पठति - त्वं पठसि अहं पठामि (Singular)
    मूर्खौ निन्दतः युवां निन्दथः आवां निन्दावः (Dual)

    1. अश्वाः धावति
    2. फले पततः
    3. चित्रकाराः लिखन्ति
    4. अनुजे क्रीडतः
    5. सेवकः तिष्ठति
    6. ते जिघ्रन्ति
    7. भक्ताः ध्यायन्ति
    8. एषः इच्छति
    9. तौ निन्दतः
    10. नटाः नृत्यन्ति
    11. नयने स्फुरतः
    12. रामः हसति
  3. III ‘कृ’ பதங்கள் உபயோகித்து வாக்கியங்களை மாற்றவும். कृ रूपाणि उपयुज्य वाक्यानि परिवर्तनं करोतु।

    उदाहरणम् – எடுத்துக்காட்டு

    अहं पठामि – अहं पठनम् करोमि।

    1. त्वं पचसि (पाचकम्)
    2. वयं नृत्यामः (नटनम्)
    3. युवां पूजयथ (पूजाम्)
    4. अहं वादयामि (वादम्)
    5. आवां त्याजावः (त्यागम्)
    6. वयं नमामः (नमस्कारम्)
    7. यूयम् अनुरोधयति (अनुरोधम्)
    8. त्वं रचयति (रचनाम्)

उत्तराणि - விடைகள்!       

शब्दार्थः
चित्रकारः - अकारान्तः पुल्लिङ्गशब्दः एकवचनम् - ஓவியர்
यच्छति - लटि प्रथमपुरुषः एकवचनम् - கொடுத்தல்
अनुरोधम् - अकारान्तः नपुंसकलिङ्गः एकवचनम् - விண்ணப்பம்

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.

இதுவரை மூன்று நிலைகளுக்கும் உரிய लट्-परस्मैपदी (லட்-நிகழ்காலம்) க்ரியாபதங்களைக் கற்றோம். आत्मनेपदी மற்றும் उभयपदी க்ரியா ரூபங்களை அடுத்தப் பாடத்தில் கற்க இருக்கிறோம்.
பாடம் 5: ஆத்மனேபதி உபயபதி க்ரியா பதங்கள்- आत्मनेपदी उभयपदी - क्रियापरिचयः - लट् लकारः.

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...