ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 5 - ஆத்மனேபதி உபயபதி க்ரியா பதங்கள்

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - प़ञ्चमः पाठः - आत्मनेपदी उभयपदी - क्रियापरिचयः - लट् लकारः

நாம் கற்கப் போவது........

இப்படிவின் மூன்றாம் பாடத்தில் ஸம்ஸ்க்ருத தாதுக்கள் ஆத்மனேபதீ (आत्मनेपदी), பரஸ்மைபதீ (परस्मैपदी) மற்றும் உபயபதீ (उभयपदी) என மூவகையாக பிரிக்கப்பட்டுள்ளன என்று பார்த்தோம். சில परस्मैपदी தாதுக்களின் நிகழ்கால வடிவங்களையும் கற்றோம். आत्मनेपदी மற்றும் उभयपदी தாதுக்களைக் குறித்து தொடரும் படிவுகளில் விரிவாக கற்க இருக்கிறோம். இப்பாடத்தில் இவற்றின் பரிச்சயம் எளிய முறையில் தரப்பட்டுள்ளது.

இப்பாடத்திற்குறிய ஸம்பாஷண வீடியோவில் நாம் முன் பாடங்களில் கற்ற சில க்ரியா பதங்களின் உபயோகங்களையும் காணலாம். வீடியோ உரையாடல்கள் எளிதாக விளங்கக் கூடியதாக உள்ளன. வீடியோவிலிருந்து சில வாக்கியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வகுப்பறை ஸம்பாஷணம் – 3 .

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

Conversation Practice - सम्भाषणाभ्यासः
एषः/सः/एषा/सा/भवान्/भवती + किं करोति?
रोहितः आगच्छति/गच्छति ।सुनीता पिबति ।
अभिरामः उपविशति/उत्तिष्ठति ।श्रृति खादति ।
अभिषेकः हसति ।स्नेहा पठति ।
वेङ्कटेशः क्रीडति ।सा लिखति ।
अहं गच्छामि/आगच्छामि/उपविशामि/उत्तिष्ठामि/पिबामि/खादामि/क्रीडामि/हसामि/पठामि/लिखामि
வேண்டுதல்/கட்டளை (लोट्)
कृपया आगच्छतु – தயவாய் வாருங்கள்!अत्र उपविशतु – (தயவாய்) அமருங்கள்!
उत्तिष्ठतु, आगच्छतु, गच्छतु, उपविशतु, पिबतु, खादतु, पठतु, लिखतु, हसतु, पश्यतु, क्रीडतु, ददातु, स्वीकरोतु, नयतु

आत्मनेपदिनः धातवः

अस्तु! இவை நீங்கள் அறிந்த गच्छ्, पठ्, गाय्, खाद् போன்ற தாதுக்களின் பரஸ்மைபதீ (परस्मैपदी) க்ரியா பதங்கள். இப்பொழுது சற்று மாறுப்பட்ட க்ரியா வடிவங்களைக் காணலாம்.

एकवचनम्द्विवचनम्बहुवचनम्
चन्द्रः शोभते
சந்திரன் பிரகாசிக்கிறான்.
युवत्यौ शोभेते
இரு யுவதிகள் பிரகாசிக்கிறார்கள்.
वालिकाः शोभन्ते
சிறுமிகள் பிரகாசிக்கிறார்கள்.
रामः भाषते
இராமன் பேசுகிறான்.
वालकौ भाषेते
இரு சிறுவர்கள் பேசுகிறார்கள்.
अध्यापकाः भाषन्ते
ஆசிரியர்கள் பேசுகிறார்கள்.
गुरुः क्षमते
குரு பொறுக்கிறார்/மன்னிக்கிறார்.
तौ क्षमेते
அவர் இருவரும் பொறுக்கிறார்கள்.
जनन्यः क्षमन्ते
அன்னையர் பொறுக்கின்றனர்.
भवान्/भवति ईक्षते
தாங்கள் பார்க்கிறீர்கள்.
भवत्यौ ईक्षेते
நீங்கள் இரு பெண்களும் பார்க்கிறீர்கள்.
भवन्तः ईक्षन्ते
நீங்கள் பார்க்கிறீர்கள்.
त्वं कम्पसे
நீ நடுங்குகிறாய்.
युवां कम्पेथे
நீங்கள் இருவரும் நடுங்குகிறீர்கள்.
यूयं कम्पध्वे
நீங்கள் நடுங்குகிறீர்கள்.
त्वं लज्जसे
நீ வெட்கப்படுகிறாய்.
युवां लज्जेथे
நீங்கள் இருவரும் வெட்கப்படுகிறீர்கள்.
यूयं लज्जध्वे
நீங்கள் வெட்கப்படுகிறீர்கள்.
अहं वन्दे
நான் வணங்குகிறேன்.
आवां वन्दावहे
நாங்கள் இருவரும் வணங்குகிறோம்.
वयं वन्दामहे
நாங்கள் வணங்குகிறோம்.
अहं मन्ये
நான் நினைக்கிறேன்.
आवां मन्यावहे
நாங்கள் இருவரும் நினைக்கிறோம்.
वयं मन्यामहे
நாங்கள் நினைக்கிறோம்.

शोभ् (शुभ्), भाष्, क्षम्, ईक्ष्, कम्प्, लज्ज्(लस्ज्), वन्द् மற்றும் मन् தாதுக்களின் நிகழ்கால வடிவங்களை மேலே பார்த்தோம். இவை ஆத்மனேபத முடிவுகளைக் (आत्मनेपदिनः प्रत्ययाः) கொண்டுள்ளதால் இவை आत्मनेपदिनः धातवः என அழைக்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகளிலிருந்து पुरुषः, वचनम् இவற்றை அனுஸரித்து ஆத்மனேபத முடிவுகளை நம்மால் ஊகிக்க இயலும். आतमनेपदी लट् पुरुषप्रत्ययान्ताः பட்டியல் கீழே அளிக்கப்பட்டுள்ளது. தலைப்பை க்ளிக் செய்து மற்ற லகாரங்களின் ஆத்மனேபத ப்ரத்யயங்களையும் காணலாம்.

लटि आत्मनेपदप्रत्ययान्ताः – ஆத்மனேபதீ லட் ப்ரத்யயங்கள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःतेइतेअन्ते
मध्यमपुरुषःसेइथेध्वे
उत्तमपुरुषःवहेमहे

उभयपदिनः धातवः

தாதுக்களில் மூன்றாவது வகை ஆத்மனேபத மற்றும் பரஸ்மைபத ப்ரத்யயங்கள் இரண்டையும் ஏற்கின்றன. இவை உபயபதீ (उभयपदी) தாதுக்கள் என அறியப்படுகின்றன. நாம் ஏற்கனவே பார்த்த कृ धातुः இவ்வகையில் அடங்கும். कृ धातुः வின் ஆத்மனேபத மற்றும் பரஸ்மைபத க்ரியா வடிவங்களை இப்பொழுது பார்க்கலாம்.

कृ धातुः - परस्मैपदरूपाणि
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःकरोतिकुरुतःकुर्वन्ति
मध्यमपुरुषःकरोषिकुरुथःकुरुथ
उत्तमपुरुषःकरोमिकुर्वःकुर्मः

कृ धातुः - आत्मनेपदरूपाणि
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःकुरुतेकुर्वातेकुर्वते
मध्यमपुरुषःकुरुषेकुर्वाथेकुरुध्वे
उत्तमपुरुषःकुर्वेकुर्वहेकुर्महे

‘पच्’, ‘दा’, ‘दुह्’ ஆகியவை उभयपदीनः धातवः என்ற வகையில் படும் சில தாதுக்கள். ஸம்ஸ்க்ருத பாஷா பாடங்களின் இந்த நிலையில் நாம் ஆத்மனேபத க்ரியாபதங்களை அடையாளம் கண்டு கொள்ள இயன்றால் போதுமானது. ஆத்மனேபதீ தாதுக்களைப் பற்றி விவரமாக நாம் வரும் படிவுகளில் கற்க இருக்கிறோம்.

அதனால் सरलः अभ्यासः வினாக்களுடன் பாடத்தை நிறைவு செய்கிறோம்.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கீழே தரப்பட்டுள்ள தாதுக்களின் புருஷ வசனங்களையொட்டி அனைத்து ஆத்மனேபதீ நிகழ்கால வடிவங்களையும் எழுதவும் – अधो दत्तानां धातूनां लट्-आत्मनेपदरूपाणि सर्वेषु पुरुषेषु वचनेषु च लिखन्तु:
    शोभ् (शुभ्), वन्द्, मन्, पच्, क्षम्, कम्प्

उत्तराणि - விடைகள்!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

செயல்பாட்டு பொருளைக் Object (कर्म) குறிக்கும் நாமபதங்களின் வடிவங்கள் எங்ஙனம் இருக்கும்? அறிவதற்கு द्वितीयाविभक्तिः வடிவங்களைப் பார்க்கலாமா? அடுத்தப் பாடம்.......
பாடம் 6: ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் த்வீதியா விபக்தி- द्वीतिया विभक्तिः.

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...