ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 8 - ணிஜந்த க்ரியா பதங்கள்

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - अष्ठमः पाठः - णिजन्त-क्रियापदानि

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......

இப்பாடத்தில் கற்க இருப்பது....

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்திற்கான பள்ளிக்கூட ஸம்பாஷண வீடியோ நாம் முன்பே கற்ற நிகழ்கால ஒருமை மற்றும் பன்மை வினைச் சொற்களை நினைவுப்படுத்துகிறது. ஒரு சில வினா வாக்கியங்களையும் கற்க முடிகிறது. வீடியோவின் முதல் பகுதியைப் பார்க்கவும்.

ஸம்பாஷண பயிற்சி – सम्भाषाणाभ्यासः
कति – எத்தனை?
कति पुस्तकानि सन्ति?कति अङ्कन्यः सन्ति?
कति पर्णानि सन्ति?कति चमसाः सन्ति?
वर्षे कति मासाः सन्ति?मासे कति दिनानि सन्ति?
पक्षे कति दिनानि सन्ति?How many days are there in a fortnight?
कुत्र? – எங்கே?
दण्डः कुत्र अस्ति?दण्डः हस्ते अस्ति। दण्डः आसन्दे अस्ति।
धनं कुत्र अस्ति?धनं स्यूते अस्ति। धनं कोषे अस्ति।
वार्ता कुत्र अस्ति?वार्ता पत्रिकायाम् अस्ति।
फलं कुत्र अस्ति?फलं स्थालिकायाम् अस्ति।
जलं कुत्र अस्ति?जलं कूप्याम् अस्ति।
अङ्गुल्यकं कुत्र अस्ति?अङ्गुल्यकं अङ्गुल्याम् अस्ति।

ணிஜந்த க்ரியா பதங்கள் - णिजन्त-क्रियापदानि

கீழ்க்காணும் இரு வாக்கியங்களை பார்க்கலாம்

  1. ரகு பாடம் கற்கிறான்/படிக்கிறான்.
  2. ரகு பாடம் கற்பிக்கிறான்.

முதல் வாக்கியத்தில் செயலின் பயன் செய்பவரையே அடைகிறது. இரண்டாவது வாக்கியத்தில் பயன் வேறு ஒருவரை அடைகிறது. தமிழ் மொழியில் பொதுவாக இத்தகைய செயல்களை குறிக்கும் வினைச் சொற்கள் முற்றிலும் வேறுபடுகின்றன. இரண்டாவது எடுத்துக்காட்டில் உள்ளது போல் தூண்டுதலைக் குறிக்கும் வினைச்சொற்கள் ஸம்ஸ்க்ருதத்தில் வினைதாதுவுடன் ‘णिच्’ என்ற ப்ரத்யயம் (Suffix) இணைந்து உருவாகின்றன. இப்பாடத்தில் நாம் ஆழமான இலக்கண விதிகளைக் கற்க போவதில்லை. மாறாக சில எளிமையான அமைப்புக்களைக் கொண்டு ணிஜந்த க்ரியா பதங்களைக் கற்க இருக்கிறோம்.

படங்களுடன் கூடிய கீழ்க்காணும் வாக்கியங்கள் ணிஜந்த க்ரியாபதங்களின் பொருளைத் தெளிவாக்க் காட்டுகின்றன.

छात्रः पाठं पठति।अध्यापकः पाठं पाठयति।
बालकः खादति।जननी पुत्रं खादयति।
बालकः निद्राति।माता बालकं निद्रापयति।

படங்களுடன் கூடிய கீழ்க்காணும் வாக்கியங்கள் ணிஜந்த க்ரியாபதங்களின் பொருளைத் தெளிவாக்க் காட்டுகின்றன.

णिजन्त-क्रियारूपाणि

இப்பொழுது நாம் இதுவரைக் கற்ற ஒரு சில நிகழ்கால வினைச்சொற்களின் (लट्-लकार-क्रियापदानि) ணிஜந்த வடிவங்களைக் காணலாம். ஒத்த வடிவங்களை வகைப்படுத்தி அளித்துள்ளோம். பதங்கள் குறிக்கும் செயல்களை தமிழில் காணலாம்

सामान्य-रूपम्णिजन्त-रूपम्
வகை – I
हसति - சிரித்தல்हासयति – சிரிக்க வைத்தல்
चलति - நகர்ந்து செல்லல்चालयति – ஒட்டுதல்/செலுத்துதல்
धरति – பிடித்தல், அணிதல்धारयति – அணிவித்தல்
नयति – கொண்டு செல்லல்/கொண்டு வருதல்नाययति – கொண்டு செல்வித்தல்/வருவித்தல்
करोति – செய்தல்कारयति – செய்வித்தல்
वदति – பேசுதல்वादयति – பேசுவித்தல், வாசித்தல் (வாத்தியம்)
स्मरति – நினைத்தல்स्मारयति – நினைவித்தல்
வகை - II
कर्षति - உழுதல்कर्षयति – உழுவித்தல்
पश्यति - காணுதல்दर्शयति - காட்டுதல்
गच्छति - செல்தல்गमयति - அனுப்புதல்
வகை - III
लिखति - எழுதுதல்लेखयति – எழுதுவித்தல்
क्षिपति - எரிதல்क्षेपयति – எரியச்செய்தல்
प्रविशति - நுழைதல்प्रवेशयति – நுழையச் செய்தல்
வகை - IV
कुप्यति – கோபித்தல்कोपयति – கோபப்படுத்துதல்
तुष्यति – திருப்தி அடைதல்तोषयति – திருப்தி அடைய செய்தல்
வகை - V
गायति - பாடுதல்गापयति – பாடச் செய்தல்
ददाति - கொடுத்தல்दापयति – கொடுக்கச் செய்தல்
पिबति - குடித்தல்पाययति – குடிக்கச் செய்தல்
तिष्ठति - நிற்பதுस्थापयति - நிறுத்துதல்
स्नाति – குளித்தல்स्नापयति – குளிப்பித்தல்
जानाति - அறிதல்ज्ञापयति – ஞாபகப்படுத்துதல்
வகை – VI आत्मनेपदी-घातवः
वर्धते – வளர்தல்वर्धयति – வளரச்செய்தல்
भुङ्क्ते - உண்ணுதல்भोजयति - உண்ணச் செய்தல்
बुध्यते - அறிதல்बोधयति - அறியச்செய்தல்

ஆத்மனேபதீ தாதுக்களின் णिजन्त-रूपाणि பரஸ்மைபதீ முடிவுகளையே ஏற்கின்றன.

णिजन्त-क्रियाजदानि இலக்கண ரீதியாக எப்படி உருவாகின்றன என்பதைக் குறித்து நாம் பின் ஒரு பாடத்தில் கற்க இருக்கிறோம், இப்பொழுது ணிஜந்த க்ரியா பதங்களுடன் சில உதாஹரண வாக்கியங்களைக் காணலாம்.

णिजन्त-उदाहरणानि (वाक्यानि)
गुरुः रामायणं बोधयति।
குரு ராமாயணம் கற்பிக்கிறார்.
स्वामि कार्यं कारयति।
எஜமானன் வேலை செய்விக்கிறார்.
अहं कवितां श्रावयामि।
நான் கவிதை சொல்கிறேன்.
अध्यापकः छात्रेन पाठं लेखयति।
ஆசிரியர் மாணவனை பாடம் எழுதச் செய்கிறார்.

एकं लघु अभ्यासं कृत्वा पाठं समापयामः। Let us complete the lesson with some simple practice.

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கீழே தரப்பட்டுள்ள நிகழ்கால க்ரியா பதங்களின் ணிஜந்த பதங்களை எழுதவும். अधो दत्तानि लट्-क्रियापदानाम् उचितानि णिजन्त-रुपाणि लिखत।

    उदाहरणम् – Example

    पिबामि
    उत्तमपुरुषः एकवचनम्
    णिजन्त-रूपम् – पाययामि

    1. वदति – वादयति     वदसि - ?
    2. स्पृशति – स्पर्शयति     स्पृशन्ति - ?
    3. वन्दते – वन्दयति     वन्दे - ?
    4. गृह्णाति – ग्राहयति     ग्रह्णीथ - ?
    5. नयति - ?
    6. शुष्यति – शोषयति     शुष्यामः - ?
    7. आरोहति - ?
    8. उत्तिष्ठति – उत्थापयति     उत्तिष्ठतः - ?
    9. मिलति – मेलयति     मिलावः - ?
    10. स्मरति – स्मारयति     स्मरामि - ?

उत्तराणि - விடைகள்!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்களுக்கும் இலவசமாக தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

படி
பள்ளிக்கு செல்
சாப்பிடு
வாகனத்தை நான் ஒட்டட்டும்.

ஆணை, விண்ணப்பம் மற்றும் உத்தேசத்தை எப்படி தெரிவிக்கலாம்? இச்சந்தர்ப்பங்களில் க்ரியா பதம் எவ்விதம் அமைகிறது என்பதை தொடரும் பாடம் காட்டுகிறது.
பாடம் 9: ஆணை தூண்டுதல் குறிக்கும் ஸம்ஸ்க்ருத க்ரியா பதங்கள்- आज्ञाप्रार्थनादिषु लोट्

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...