ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 9 - ஆணை தூண்டுதல் குறிக்கும் ஸம்ஸ்க்ருத க்ரியா பதங்கள்

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - नवमः पाठः - आज्ञाप्रार्थनादिषु लोट्

நாம் கற்கப் போவது........

இப்படிவில் இதுவரைக் கற்றது.......

இப்பாடத்தில் கற்க இருப்பது....

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

பள்ளிக்கூட ஸம்பாஷண வீடியோவின் பின்பகுதியிலிருந்து தினசரி உரையாடல்களில் பயன்படுத்த தகுந்த சில சொற்தொகுதிகளைக் கற்கலாம்.

ஸம்பாஷண பயிற்சி – सम्भाषाणाभ्यास
कदा – எப்பொழுது?
कदा उत्तिष्ठति?पञ्चवादने उत्तिष्ठामि।
कदा अल्पाहारं करोति?सार्ध-अष्टवादने अल्पाहारं करोमि।
कदा विद्यालयं गच्छति?नववादने विद्यालयं गच्छामि।
कदा योगाभ्यासं करोति?सार्ध-चतुर्वादने योगाभ्यासं करोमि।
सत्यं वा?अहो!
दिनचरी – அன்றாட வேலைकदाश्चित् - சில சமயங்களில்
भोःएवम् वा?
फलं कुत्र अस्ति?फलं स्थालिकायाम् अस्ति।
शृतस्य सुभाषितस्य अर्थः एवम् अस्ति।

लोट्-प्रस्तावः – லோட்-க்ரியா வடிவம் முகவுரை

கீழ்க்காணும் Traffic Signal படத்தைப் பாருங்கள்.

ஸம்ஸ்க்ருத த்தில் சிவப்பு விளக்கு ‘तिष्ठ’ என்றும் பச்சை ‘चल’ என்றும் உணர்த்துகின்றன. அனுமதியை உணர்த்தும் இரு சொற்களும் ஆணை அல்லது தூண்டுதலைக் காட்டுகின்றன.

माता पुत्रं प्रति वदति………..उत्तिष्ठ – எழுந்திரு!
अल्पाहारं खाद – சிற்றுண்டியைச் சாப்பிடு!
दुग्धं पिब – பால் குடி!
विद्यालयं गच्छ – பள்ளிக்கு செல்!
अध्यापकः वदति……….राम! आगच्छ – ராமா வா!
पाठं पठ – பாடத்தைப் படி!
कृष्णपलकं पश्यन्तु – கரும்பலகையைப் பாருங்கள்!
सर्वे उपविशन्तु – அனைவரும் அமருங்கள்!

மஞ்சள் பின்னனியில் காட்டப்பட்டுள்ள க்ரியா பதங்கள் நாம் இதுவரைக் கற்ற लट् (நிகழ்கால) வடிவங்களிலிருந்து வேறுபடுகின்றன. ஆணை/தூண்டுதல்/வேண்டுதலை (आज्ञा/प्रार्थना) உணர்த்தும் இவை இலக்கண ரீதியாக ‘लोट्’ என்று அறியப்படுகின்றன. ஆங்கிலத்தில் ‘May’ அல்லது ‘Let’ சேர்ந்த ‘Verb’ களுக்கு இணையாக ஸம்ஸ்க்ருதத்தில் लोट्-क्रियारूपाणी செயலாற்றுகின்றன.

लट् போலவே लोट् இலும் ஒவ்வொரு வினை தாதுவிற்கும் पुरषः மற்றும் वचनम् ஒட்டி ஒன்பது வடிவங்கள் அமைகின்றன. இதுவரை நாம் கற்ற வினை தாதுக்களின் சாதாரண மற்றும் விசேஷ लोट् க்ரியா வடிவங்களை இப்பாடத்தில் கற்க இருக்கிறோம். கடினத்தை தவிர்க்க परस्मैपदी-धातुः க்களின் लोट् வடிவங்களை மற்றும் பார்க்கலாம். பின்னொரு படிவில் ஆத்மனேபதீ வடிவங்களையும் கற்று பாஷா ஞானத்தை பலப்படுத்த இருக்கிறோம்.

लोट्-प्रथमपुरुषरूपाणि

இப்பொழுது ஒவ்வொரு இடத்திற்கும் (पुरुषः) உரிய लोट् க்ரியா வடிவங்களை தனிதனியாக கற்கலாம். முதலில் பட்டியலில் धातुः உடன் இணையும் प्रथमपुरुषः लोट् (படர்க்கை) விகுதிகளைக் காணலாம். பின் வரும் படம் க்ரியா பத நிர்மாண முறையை விளக்குகிறது.

लोट्-परस्मैपदान्ताः – லோட் விகுதிகள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःतुताम्अन्तु


இப்பொழுது நாம் கற்ற சில தாதுக்களின் प्रथमपुरुष- लोट्-क्रियापदानि களை கற்கலாம். விசேஷ தாதுக்களைக் கொண்டும் ஒத்த முறை அனுசரித்து क्रियारूपाणि அமைந்துள்ளன.

लोट्-प्रथमपुरुषरूपाणि
धातुःएकवचनम्द्विवचनम्बहुवचनम्
पठ्पठतुपठताम्पठन्तु
गम्गच्छतुगच्छताम्गच्छन्तु
लिख्लिखतुलिखताम्लिखन्तु
अस्अस्तुस्ताम्सन्तु
भव्भवतुभवताम्भवन्तु
क्रीक्रीणातुक्रीणीताम्क्रीणन्तु
कृकरोतुकुरुताम्कुर्वन्तु
ज्ञाजानातुजानीताम्जानन्तु
श्रुशृणोतुशृणुताम्शृण्वन्तु

प्रथमपुरुषः. लोट् क्रियारूपाणि களைக் கொண்ட சில உதாஹரண வாக்கியங்களை பார்க்கலாம்.

लोट्-उदाहरणानि - प्रथमपुरुषः
भवान् पश्यतु।நீங்கள் (ஆண்) பாருங்கள்
रामः गृहं गच्छतु।ராமன் வீட்டிற்கு செல்லட்டும்/செல்லலாம்.
भ्रातरौ पितरम् अनुसरताम्।சகோதரர்கள் இருவரும் தந்தையை பின்பற்றட்டும்.
युवत्यः गीतं गायन्तु।இளம் பெண்கள் பாடட்டும்/பாடலாம்.
भवती अन्नं पचतु।நீங்கள் (பெண்) சமையல் செய்யுங்கள்/செய்யலாம்.
सः अत्र तिष्ठतु।அவன்/அவர் அங்கே இருக்கட்டும்.
पुत्र्यौ गृहकार्यं कुरुताम्।மகள்கள் இருவரும் வீட்டு வேலை செய்யட்டும்.

लोट्-मध्यमपुरुषरूपाणि

ஸாதாரண உரையாடல்களில் लोट्-मध्यमपुरुषः வடிவங்களே அதிகம் காணப்படுகின்றன. இப்பொமுது मध्यमपुरुषः लोट् விகுதிகளையும் க்ரியா பத அமைப்பு முறைகளையும் (प्रक्रिया) கற்கலாம்

लोट्-परस्मैपदान्ताः – லோட் விகுதிகள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
मध्यमपुरुषः-तम्


விசேஷ தாதுக்களின் முன்னிலை (मध्यमपुरुषः) एकवचनम् க்ரியா பதங்கள் மற்றவையிலிருந்து சற்றே மாறுபடுகின்றன. ஒத்த அமைப்புகளுடைய தாதுக்களை பட்டியலில் ஒருமித்து இடம் பெறச் செய்துள்ளோம்.

लोट्-मध्यमपुरुषरूपाणि
धातुःएकवचनम्द्विवचनम्बहुवचनम्
पठ्पठपठतम्पठत
गम्गच्छगच्छतम्गच्छत
लिख्लिखलिखतम्लिखत
भव्भवभवतम्भवत
अस्एधिस्तम्स्त
क्रीक्रीणीहिक्रीणीतम्क्रीणीत
ज्ञाजानीहिजानीतम्जानीत
कृकुरुकुरुतम्कुरुत
श्रुशृणुशृणुतम्शृणुत

மேலம் தெளிவு பெற लोट्-मध्यमपुरुषः வினைச்சொற்களைக் கொண்ட உதாஹரணங்களைக் காணலாம்.

लोट्-उदाहरणानि - मध्यमपुरुषः
त्वं पाठं पठ।பாடத்தைப் படி!
(त्वं) बहिः न गच्छ।வெளியே போகாதே!
युवाम् अल्पाहारं खादतम्।நீங்கள் இருவரும் சிற்றுண்டி உண்ணுங்கள்.
यूयं गृहपाठं कुरुत।நீங்கள் அனைவரும் வீட்டுப் பாடம் செய்யுங்கள்.
(त्वं) कीर्तिमान् भव।புகழ் பெறுவாயாக!
युवाम् अवधानेन शृणुतम्।இருவரும் கவனமாக கேளுங்கள்!
यूयं धर्मं चरत।தர்மம் வழி நடப்பீர்!

लोट्-उत्तमपुरुषरूपाणि

இறுதியாக தன்மைக்குறிய (उत्तमपुरुषः) लोट् வடிவங்களைக் கற்கலாம். தன்மையில் பெரும்பாலும் உத்தேசத்தை வெளிப்படுத்த அல்லது அனுமதி பெற लोट् क्रियारूपाणि இடம் பெறுகின்றன. முதலில் अन्ताः (விகுதிகளை) கற்று தொடர்ந்து प्रक्रिया முறையையும் காணலாம்.

लोट्-परस्मैपदान्ताः – லோட் விகுதிகள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
उत्तमपुरुषःआनिआवआम


मध्यमपुरुषः लोट् வடிவங்களில் கண்டது போல் விசேஷ க்ரியா பதங்கள் சற்றே மாறுகின்றன, ஒற்றுமை காட்டும் பதங்கள் அருகிலிருக்கும் வண்ணம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

लोट्-उत्तमपुरुषरूपाणि
धातुःएकवचनम्द्विवचनम्बहुवचनम्
पठ्पठानिपठावपठाम
गम्गच्छानिगच्छावगच्छाम
लिख्लिखानिलिखावलिखाम
भव्भवानिभवावभवाम
अस्असानिअसावअसाम
क्रीक्रीणानिक्रीणावक्रिणाम
कृजानानिजानावजानाम
ज्ञाकरवाणिकरवावकरवाम
श्रुशृणवानिशृणवावशृणवाम

पठाम என்ற சொல்லை ஸம்பாஷண வீடியோவில் கேட்டோம் அல்லவா? उत्तमपुरुषः लोट् க்ரியா பதங்களைக் கொண்ட உதாஹரண வாக்கியங்களைக் காணலாமா?

लोट्-उदाहरणानि - उत्तमपुरुषः
अहं गच्छानि वा?நான் போகட்டுமா?/போகலாமா?
वयं पाठं पठाम।நாம் பாடத்தைப் படிக்கலாம்.
आवां विहारं करवाव।நாம் இருவரும் சுற்றி வரலாம்.
वयम् बुद्धिमन्तः भवाम।Let us be wise.
अहं श्लोकं गायानि।நான் ஸ்லோகம் சொல்லட்டும்.
आवां फलरसं पिबाव।நாம் இருவரும் பழரசம் பருகலாம்.
वयम् स्नानं करवाम।நாம் குளிக்கலாம்.
अहं दूरदर्शनं पश्यानिநான் டிவி பார்க்கட்டும்.
आवां पत्रक्रीडां क्रीडावः।நாம் இருவரும் சீட்டு விளையாடலாம்.

லோட் விகுதிகளுக்கான முழு பட்டியலையும் பார்க்கலாம்.

लोट्-परस्मैपदान्ताः – லோட் விகுதிகள்
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमपुरुषःतुताम्अन्तु
मध्यमपुरुषः-तम्
उत्तमपुरुषःआनिआवआम

நீங்கள் நாம் இதுவரைக் கற்ற மற்ற சில தாதுக்களின் लोट्வடிவங்களை அறிய விரும்பலாம். பட்டியலில் தரப்பட்டுள்ள தாதுக்களை க்ளிக் செய்து அனைத்து लोट् வடிவங்களையும் காணலாம்.

पठ्लिख्गम्खाद्पा
दृदाज्ञाक्रीआप्
श्रुपृच्छ्स्थापत्ग्रह्
कृचिशक्रुद्तॄ
नम्कृष्नृत्रक्ष्भ्रम्
वद्अस्हस्कुप्

தொடர்ந்து பாடங்களைக் கற்கும்பொழுது மற்று பல தாதுக்களைக் கற்க இருக்கிறோம், அடுத்த படிவில் முக்கியமாக நாம க்ரியா பதங்களை கூடுதல் நுணுக்கமாக அணுகி அவற்றின் பயன்பாட்டை மேலும் தெளிவாக்க இருக்கிறோம்.
किञ्चित् अभ्यासं कुर्मः वा?

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. வாக்கியங்களை लोट् வினையுடன் மாற்றி எழுதவும் ; उचितानि लोट्-रूपाणि उपयुज्य वाक्यानि परिवर्त्तयत।

    उदाहरणम्

    छात्राः गच्छन्ति। छात्राः __________.
    लोटि परिवर्त्तनम्: छात्राः गच्छन्तु।

    1. युवकौ हसतः।  : युवत्यौ ____________.
    2. मीनाः तरन्ति।   मकराः __________.
    3. अहं लिखामि।  : अहं ___________.
    4. युवां लिखथः।   युवां __________.
    5. त्वं पाठयसि।   त्वं __________.
    6. भीमः युद्धं करोति।   अर्जुनः _______ ________.
    7. यूयं मिलथ।   यूयं ________.
    8. अहं परिशीलयामि।   अहं _________.
    9. आवां खादावः।   आवां _________.
    10. वयं पश्यामः।   वयं _________.

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழிப் பெயர்க்கவும். संस्कृते अनुवादं कुरुत।
    1. Let Sita Sing.
    2. Drink milk.
    3. Let us send money. (to send - प्रेषय Money – धनम्)
    4. May I read the lesson?
    5. You two bring chairs. (bring - आनय Chair - आसन्दः )
    6. Let the two brothers play.
    7. Let the women cook.
    8. See the Moon.
    9. You all bow to God
    10. Let us hear the news.

  3. கொடுக்கப்பட்டுள்ள க்ரியா பதத்தின் அனைத்து लोट् வடிவங்களையும் ஊகித்து எழுதவும். दत्तस्य क्रियापदस्य सर्वाणि लोट्-रूपाणि ऊहं कृत्वा लिखत।

    उदाहरणम्

    धावति
    धावतु   धावताम्   धावन्तु
    धाव   धावतम्   धावत
    धावानि   धावाव   धावाम


    अ) अर्चति (Prays)   आ) स्मरति (Thinks/Remembers)   इ) प्रविशति (Enters)   उ) तोषयति (Praises)   ऊ) निर्वापयति (Chooses/Elects)

उत्तराणि - விடைகள்!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.
நாம் இதுவரை கற்றது.......

ராமா! பள்ளிக்கு செல்!

மேலே தரப்பட்டுள்ள வாக்கியத்தில் लोट् பாவம் தெரிகிறது. ‘ராமா’ என்ற விளி ஸம்ஸ்ம்ருதத்தில் எப்படி அமைகிறது? सम्बोधन-प्रथमा विभक्तिः மற்றும் लोट्-क्रियापदम् இணைந்து வாக்கியங்கள் எப்படி அமைகின்றன என்பதை தொடரும் பாடம் காட்டுகிறது. அடுத்தப் பாடம்…
பாடம் 10: ஸம்போதன ப்ரதமா விபக்தி - संबोधन-प्रथमा विभक्तिः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...