ஸம்ஸ்க்ருதம் header-logo

संस्कृतवीथी - ஸம்ஸ்க்ருதம் பயில இணையதள தமிழ் வழி!!

संस्कृतवीथी - सरलं संस्कृतपठनम् !

முதல் நிலைப்பாடங்கள் - படிவு 2 ஸம்ஸ்க்ருத நாம பதங்களும் க்ரியா பதங்களும் - பாடம் 21 - ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் பஞ்சமீ விபக்தி -

प्रावेशिकः स्तरः - द्वितीयः विभागः – संस्कृत-नामपदानि क्रियापदानि च - एकविंशतिः पाठः - पञ्चमी विभक्तिः

நாம் கற்கப் போவது.......

இப்படிவில் இதுவரைக் கற்றது.......


இப்பாடத்தில் கற்க இருப்பது....
  • விடுபடுதலை உணர்த்தும் पञ्चमी विभक्तिः - अपादाने पञ्चमी विभक्तिः

ஸம்ஸ்க்ருத ஸம்பாஷணம் – सम्भाषणम् संस्कृतम्

இப்பாடத்துடன் இணைந்த ஸம்பாஷண வீடியோவைக் காண தலைப்பைக் ‘க்ளிக்’ செய்யவும். வீடியோவில் நாம் காண்பது....

ஸம்பாஷணத்தில் நாம் கேட்ட ஒரு சில ஶப்தங்களின் பொருள் தமிழில்....

अपादाने पञ्चमी विभक्तिः – प्रस्तावः - முன்னுரை

தமிழில் ஐந்தாம் வேற்றுமையை ஒட்டிய पञ्चमी विभक्तिः பொதுவாக பிரிதலைக் குறிக்கிறது, பஞ்சமீயின் பயன்பாட்டை அறிய கீழே தரப்பட்டுள்ள படங்களுடன் கூறிய வாக்கியங்களைக் கவனிக்கவும்.

कर्तृपदम्कुतःक्रियापदम्
बालकः विद्यालयात् आगच्छति।
कर्तृपदम्कुतःक्रियापदम्
फलं वृक्षात् पतति।
कर्तृपदम्कुतःक्रियापदम्
महिला पाकशालायाः आगच्छति।

மஞ்சள் பின்னனியில் எடுத்துக் காட்டப்பட்டுள்ள சொற்கள் पञ्चमी விபக்தியில் அமைந்துள்ளன. இப்பாடத்தில் கீழ்க் காணும் சந்தர்ப்பங்களில் पञ्चमी செயல்பாட்டினைக் கற்க இருக்கிறோம்.

முதலில் நாம் மூன்று லிங்கங்களிலும் வேறுப்பட்ட முடிவகளுக்கு पञ्चमी வடிவங்கள் எங்ஙனம் அமைகின்றன என பார்ப்போம்.

पञ्चमीविभक्तिरूपाणि

கீழ்க்காணும் பட்டியல்களில் நாம் ஏற்கனவே அறிந்த அஜந்த ஶப்தங்களின் (अजन्तशब्दाः) पञ्चमी विभक्तिः வடிவங்கள் மஞ்சள் பின்னனியில் நாம் கற்ற மற்ற நான்கு விபக்தி வடிவங்களுடன் கொடுக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு ஶப்தத்தின் எட்டு வடிவங்களையும் காண தலைப்பை ‘Click’ செய்யவும்.

अकारान्तः पुल्लिङ्गः ‘रामः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारामःरामौरामाः
सं.प्रथमाहे रामहे रामौहे रामाः
द्वितीयारामम्रामौरामान्
तृतीयारामेणरामाभ्याम्रामैः
चतुर्थीरामायरामाभ्याम्रामेभ्य
पञ्चमीरामात्रामाभ्याम्रामेभ्यः

इकारान्तः पुल्लिङ्गः ‘हरिः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाहरिःहरीहरयः
सं.प्रथमाहे हरेहे हरीहे हरयः
द्वितीयाहरिम्हरीहरीन्
तृतीयाहरिणाहरिभ्याम्हरिभिः
चतुर्थीहरयेहरिभ्याम्हरिभ्यः
पञ्चमीहरेःहरिभ्याम्हरिभ्यः

उकारान्तः पुल्लिङ्गः ‘गुरुः’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमागुरुःगुरौगुरवः
सं.प्रथमाहे गुरोहे गुरौहे गुरवः
द्वितीयागुरुम्गुरौगुरून्
तृतीयागुरुणागुरुभ्याम्गुरुभिः
चतुर्थीगुरवेगुरुभ्याम्गुरुभ्यः
पञ्चमीगुरोःगुरुभ्याम्गुरुभ्यः

ऋकारान्तः पुल्लिङ्गः ‘दातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादातादातारौदातारः
सं.प्रथमाहे दातःहे दातारौहे दातारः
द्वितीयादातारम्दातारौदातॄन्
तृतीयादात्रादातृभ्याम्दातृभिः
चतुर्थीदात्रेदातृभ्याम्दातृभ्यः
पञ्चमीदातुःदातृभ्याम्दातृभ्यः

ऋकारान्तः पुल्लिङ्गः ‘पितृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमापितापितरौपितरः
सं.प्रथमाहे पितःहे पितरौहे पितरः
द्वितीयापितरम्पितरौपितॄन्
तृतीयापित्रापितृभ्याम्पितृभिः
चतुर्थीपित्रेपितृभ्याम्पितृभ्य
पञ्चमीपितुःपितृभ्याम्पितृभ्यः

आकारान्तः स्त्रीलिङ्गः ‘रमा’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमारमारमेरमाः
सं.प्रथमाहे रमेहे रमेहे रमाः
द्वितीयारमाम्रमेरमाः
तृतीयारमयारमाभ्याम्रमाभिः
चतुर्थीरमायैरमाभ्याम्रमाभ्यः
पञ्चमीरमायाःरमाभ्याम्रमाभ्यः

इकारान्तः स्त्रीलिङ्गः ‘मति’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामतिःमतीमतयः
सं.प्रथमाहे मतेहे मतीहे मतयः
द्वितीयामतिम्मतीमतीः
तृतीयामत्यामतिभ्याम्मतिभिः
चतुर्थीमत्यै-मतयेमतिभ्याम्मतिभ्यः
पञ्चमीमत्याः-मतेःमतिभ्याम्मतिभ्यः

ईकारान्तः स्त्रीलिङ्गः ‘नदी’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमानदीनद्यौनद्यः
सं.प्रथमाहे नदिहे नद्यौहे नद्यः
द्वितीयानदीम्नद्यौनदीः
तृतीयानद्यानदीभ्याम्नदीभिः
चतुर्थीनद्यैनदीभ्याम्नदीभ्यः
पञ्चमीनद्याःनदीभ्याम्नदीभ्यः

उकारान्तः स्त्रीलिङ्गः ‘धेनु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाधेनुःधेनूधेनवः
सं.प्रथमाहे धेनोहे धेनूहे धेनवः
द्वितीयाधेनुम्धेनूधेनूः
तृतीयाधेन्वाधेनुभ्याम्धेनुभिः
चतुर्थीधेन्वै - धेनवेधेनुभ्याम्धेनुभ्यः
पञ्चमीधेन्वाः - धेनोःधेनुभ्याम्धेनुभ्यः

ऋकारान्तः स्त्रीलिङ्गः ‘मातृ’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामातामातरौमातरः
सं.प्रथमाहे मातःहे मातरौहे मातरः
द्वितीयामातरम्मातरौमातॄन्
तृतीयामात्रामातृभ्याम्मातृभिः
चतुर्थीमात्रेमातृभ्याम्मातृभ्यः
पञ्चमीमातुःमातृभ्याम्मातृभ्यः

अकारान्तः नपुंसकलिङ्गः ‘फल’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाफलम्फलेफलानि
सं.प्रथमाहे फलहे फलेहे फलानि
द्वितीयाफलम्फलेफलानि
तृतीयाफलेनफलाभ्याम्फलैः
चतुर्थीफलायफलाभ्याम्फलेभ्यः
पञ्चमीफलात्फलाभ्याम्फलेभ्यः

इकारान्तः नपुंसकलिङ्गः ‘वारि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमावारिवारिणीवारीणि
सं.प्रथमाहे वारे – हे वारिहे वारिणीहे वारीणि
द्वितीयावारिवारिणीवारीणि
तृतीयावारिणावारिभ्याम्वारिभिः
चतुर्थीवारिणेवारिभ्याम्वारिभ्यः
पञ्चमीवारिणःवारिभ्याम्वारिभ्यः

इकारान्तः नपुंसकलिङ्गः ‘दधि’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमादधिदधिनीदधीनि
सं.प्रथमाहे दधे – हे दधिहे दधिनीहे दधीनि
द्वितीयादधिदधिनीदधीनि
तृतीयादध्नादधिभ्याम्दधिभिः
चतुर्थीदध्नेदधिभ्याम्दधिभ्यः
पञ्चमीदध्नःदधिभ्याम्दधिभ्यः

उकारान्तः नपुंसकलिङ्गः ‘मधु’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमामधुमधुनीमधूनि
सं.प्रथमाहे मधो – हे मधुहे मधुनीहे मधूनि
द्वितीयामधुमधुनीमधूनि
तृतीयामधुनामधुभ्याम्मधुभिः
चतुर्थीमधुनेमधुभ्याम्मधुभ्यः
पञ्चमीमधुनःमधुभ्याम्मधुभ्यः

सर्वनाम-शब्दानां पञ्चमीविभक्तिरूपाणि

ஸர்வநாம ஶப்தங்களின் पञ्चमी வடிவங்களையும் பார்ப்போம்.

दकारान्तः पुल्लिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषःएतौएते
द्वितीयाएतम् - एनम्एतौएतान् - एनान्
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञ्चमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः

दकारान्तः स्त्रीलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएषाएतेएताः
द्वितीयाएताम् - एनाम्एतेएताः - एनाः
तृतीयाएतया - एनयाएताभ्याम्एताभिः
चतुर्थीएतस्यैएताभ्याम्एताभ्यः
पञ्चमीएतस्याःएताभ्याम्एताभ्यः

दकारान्तः नपुंसकलिङ्गः ‘एतद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाएतत्त्एतेएतानि
द्वितीयाएतत् - एनत्एतेएतानि - एनानि
तृतीयाएतेन - एनेनएताभ्याम्एतैः
चतुर्थीएतस्मैएताभ्याम्एतेभ्यः
पञ्चमीएतस्मात्एताभ्याम्एतेभ्यः

दकारान्तः पुल्लिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासः तौते
द्वितीयातम्तौतान्
तृतीयातेनताभ्याम्तैः
चतुर्थीतस्मैताभ्याम्तेभ्यः
पञ्चमीतस्मात्ताभ्याम्तेभ्यः

दकारान्तः स्त्रीलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमासातेताः
द्वितीयाताम्तेताः
तृतीयातयाताभ्याम्ताभिः
चतुर्थीतस्यैताभ्याम्ताभ्यः
पञ्चमीतस्याःताभ्याम्ताभ्यः

दकारान्तः नपुंसकलिङ्गः ‘तद्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमातत्तेतानि
द्वितीयातत्तेतानि
तृतीयातेनताभ्याम्तैः
चतुर्थीतस्मैताभ्याम्तेभ्यः
पञ्चमीतस्मात्ताभ्याम्तेभ्यः

मकारान्तः पुल्लिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकःकौके
द्वितीयाकम्कौकान्
तृतीयाकेनकाभ्याम्कैः
चतुर्थीकस्मैकाभ्याम्केभ्यः
पञ्चमीकस्मात्काभ्याम्केभ्यः

मकारान्तः स्त्रीलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकाकेकाः
द्वितीयाकाम्केकाः
तृतीयाकयाकाभ्याम्काभिः
चतुर्थीकस्यैकाभ्याम्काभ्यः
पञ्चमीकस्याःकाभ्याम्काभ्यः

मकारान्तः नपुंसकलिङ्गः ‘किम्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाकिम्केकानि
द्वितीयाकिम्केकानि
तृतीयाकेनकाभ्याम्कैः
चतुर्थीकस्मैकाभ्याम्केभ्यः
पञ्चमीकस्मात्काभ्याम्केभ्यः

மூன்று லிங்கங்களிலும் ஒரு ஶப்தத்தின் அல்லது ஸர்வநாம ஶப்தத்தின் तृतीया, चतुर्थी மற்றும் पञ्चमी யின் द्विवचनम् வடிவங்கள் வேறுபடுவதில்லை. चतुर्थी, पञ्चमी बहुवचनम् வடிவங்கள் ஒன்றாகவே உள்ளன.


दकारान्तः पुल्लिङ्गः ‘भवत्’ शब्दः
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाभवान्भवन्तौभवन्तः
द्वितीयाभवन्तम्भवन्तौभवतः
तृतीयाभवताभवद्भ्याम्भवद्भिः
चतुर्थीभवतेभवद्भ्याम्भवद्भ्यः
पञ्चमीभवतःभवद्भ्याम्भवद्भ्यः

दकारान्तः ‘अस्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमाअहम्आवाम्वयम्
द्वितीयामाम् - माआवाम् - नौअस्मान् - नः
तृतीयामयाआवाभ्याम्अस्माभिः
चतुर्थीमह्यम् - मेआवाभ्याम् - नौअस्मभ्यम् - नः
पञ्चमीमत्आवाभ्याम्अस्मत्

दकारान्तः ‘युष्मद्’ शब्दः त्रिषु लिङ्गेषु
एकवचनम्द्विवचनम्बहुवचनम्
प्रथमात्वम्युवाम्यूयम्
द्वितीयात्वाम् - त्वायुवाम् - वाम्युष्मान् - वः
तृतीयात्वयायुवाभ्याम्युष्माभिः
चतुर्थीतुभ्यम् - तेयुवाभ्याम् - वाम्युष्मभ्यम् - वः
पञ्चमीत्वत्युवाभ्याम्युष्मत्

‘अस्मद्’ மற்றும் युष्मद्’ ஶப்தங்களின் चतुर्थी, पञ्चमी बहुवचनम् வடிவங்கள் வேறுபடுகின்றன.

विभागाश्रये पञ्चमी विभक्तिः

ஏதாவது ஒருவர் அல்லது ஒன்று ஓரிடத்திலிருந்து பிரியும்பொழுது पञ्चमी-विभक्तिः பிரியும் இடத்தை உணர்த்துகிறது. முதலில் கண்ட உதாஹரணங்களை மீண்டும் காண்போம்.

  1. वृक्षात् फलं पतति। - பழம் மரத்திலிருந்து பிரிந்து விழுகிறது.
  2. बालकः विद्यालयात् आगच्छति। - பாலகன் பள்ளியிலிருந்து நீங்கி வெளியில் வருகிறான்.
  3. महिला पाकशालायाः आगच्छति। - பெண் சமையல் அறையிலிருந்து நீங்கி வெளியில் வருகிறாள்.

पञ्चमी विभक्तिः யின் இத்தகைய ப்ரயோகத்தை அறிய மேலும் சில உதாஹரணங்களைப் பார்ப்போம்.

वृष्टिजलम् आकाशात् पतति।மழைநீர் வானத்திலிருந்து விழுகிறது.
जनाः ग्रामेभ्यः नगरम् आगच्छन्ति।மக்கள் கிராமங்களிலிருந்து நகரத்திற்கு வருகிறார்கள்.
गङ्गा हिमालयात् प्रवहति।கங்கை ஹிமாலயத்திலிருந்து பரந்து ஓடுகிறாள்.
मम मित्राणि भोजनशालायाः आगच्छन्ति।என் நண்பர்கள் போஜனாலயத்திலிருந்து வருகிறார்கள்.

कुतः? कस्मात्?

“எங்கிருந்து, எதிலிருந்து, எவரிடமிருந்து” (कस्मात्/कस्याः) போன்ற கேள்விகளுக்கு பதிலாக வரும் சொற்களுடன் पञ्चमी विभक्तिः இணைகிறது. இம்முறையில் पञ्चमी-विभक्तिः பல விதமான இடங்களில் இணைவதை எளிதில் அறிய இயலும். கீழ்க் காணும் உதாஹரணங்கள் இவ்வெளிய வழியைத் தெளிவாக்குகின்றன.

गृहिणी नद्याः जलम् आनयति।
இல்லத்தரசி நதியிலிருந்து ஜலம் கொண்டு வருகிறாள்.
गृहिणी कस्याः जलम् आनयति?
गृहिणी नद्याः जलम् आनयति।
नद्याः ईकारान्तः स्त्रीलिङ्गः ‘नदी’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः
छात्रः लोकयानात् अवतरति।
மாணவன் பேருந்திலிருந்து இறங்குகிறான்.
छात्रः कस्मात् अवतरति?
छात्रः लोकयानात् अवतरति।
लोकयानात् – अकारान्तः नपुंसकलिङ्गः ‘लोकयानम्’ शब्दः - एकवचनम् – पञ्चमी विभक्तिः
शङ्करः वित्तकोषात् धनं गृहीतवान्।
ஶங்கரன் வங்கியிலிருந்து பணம் பெற்றான்.
शङ्करः कस्मात् धनं गृहीतवान्?
शङ्करः वित्तकोषात् धनं गृहीचवान्।
वित्तकोषात् – अकारान्तः पुल्लिङ्गः ‘वित्तकोषः’ शब्दः - एकवचनम् – पञ्चमी विभक्तिः
जनाः धेनुभ्यः क्षीरं प्राप्नुवन्ति।
மக்கள் பசுக்களிலிருந்து பாலை பெறுகின்றனர்.
जनाः केभ्यः क्षीरं प्राप्नुवन्ति?
जनाः धेनुभ्यः क्षीरं प्राप्नुवन्ति।
धेनुभ्यः – उकारान्तः स्त्रीलिङ्गः ‘धेनु’ शब्दः – बहुवचनम् - पञ्चमी विभक्तिः
अर्जुनः पशुपतेः पाशुपतास्त्रं प्राप्तवान्।
அர்ஜுனன் பசுபதியிடமிருந்து பாசுபதாஸ்த்ரத்தைப் பெற்றான்.
अर्जुनः कस्मात् पाशुपतास्त्रं प्राप्तवान्?
अर्जुनः पशुपतेः पाशुपतास्त्रं प्राप्तवान्।
पशुपतेः – इकारान्तः पुल्लिङ्गः ‘पशुपतिः’ शब्दः – एकवचनम् - पञ्चमी विभक्तिः

‘तः’ प्रयोगः

நாம் முன்பு கண்ட சில ஸம்பாஷண வீடியோக்களில் ப்ராதிபதிகத்துடன் (प्रातिपदिकम्) ‘तः’ இணைந்து இருந்து என்ற பொருளை உணர்த்துவதைக் கண்டோம். ‘तः’ முடிவுகள் पञ्चमी பொருளை உணர்த்தக் கையாளப்படும் எளிய முறையாகும். எடுத்துக்காட்டாக,

नागेशः कस्मात् आगतवान्?
नागेशः बङ्गलूरु-नगरात् आगतवान्।

இதே பொருளை बङ्गलूरु வுடன் ‘तः’ இணைவதன் மூலம் பெறலாம்.

नागेशः कुतः आगतवान्?
नागेशः बङ्गलूरुतः आगतवान्।

வினா சொல் कस्मात् ற்கு பதிலாக कुतः என்கின்ற அவ்யய சொல் இடம் பெறுவதைக் கவனிக்கவும்.

ப்ராதிபதிகத்துடன் (प्रातिपदिकम्) ‘तः இணைந்து पञ्चमी विभक्तिः யின் பொருளை உணர்த்துகிறது. तसिल् அல்லது तस् ப்ரத்ய்யத்தின் சேர்க்கையினால் எஞ்சுவது ‘तः' விகுதி ஆகும்.

‘तः’ விகுதி இணைந்த ஒரு சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

पञ्चमी विभक्तिःतः- योजने
श्वः मन्त्री विदेशात् आगमिष्यति।
श्वः मन्त्री कस्मात् आगमिष्यति?
श्वः मन्त्री विदेशतः आगमिष्यति।
श्वः मन्त्री कुतः आगमिष्यति?
அமைச்சர் வெளிநாட்டிலிருந்து நாளை வருகிறார்.
मातुलः काश्याः गङ्गाजलम् आनीतवान्।
मातुलः कस्याः गङ्गाजलम् आनीतवान्।
मातुलः काशीतः गङ्गाजलम् आनीतवान्।
मातुलः कुतः गङ्गाजलम् आनीतवान्।
மாமன் காசியிலிருந்து கங்கா ஜலம் கொண்டு வந்தார்.
अङ्गुलीयकम् अङ्गुल्याः पतति।
अङ्गुलीयकम् कस्याः पतति।
अङ्गुलीयकम् अङ्गुलीतः पतति।
अङ्गुलीयकम् कुतः पतति।
மோதிரம் விரலிலிருந்து விழுகிறது.
चोरः कारागृहात् निर्गच्छति।
चोरः कस्मात् निर्गच्छति।
चोरः कारागृहतः निर्गच्छति।
चोरः कुतः निर्गच्छति।
திருடன் சிறைச் சாலையிலிருந்து வெளியேறுகிறான்.
कारागृह – अकारान्तः नपुंसकलिङ्गः शब्दः

भय-हेतुं निर्दिष्टार्थम् पञ्चमी विभक्तिः

பயத்தைக் குறிப்பிடும்பொழுது பயத்தின் காரணத்தை पञ्चमी विभक्तिः உணர்த்துகின்றது. ‘भी’ தாது பயப்படுதல் என்ற பொருளைக கொண்டுள்ளது. இத்தாது விசேஷமான க்ரியா பதங்களை ஏற்கிறது. அனைத்து पुरुषः, वचनम् ங்களில் 'भी’ தாதுவின் நிகழ்கால வடிவங்கள் (लट्) கீழே தரப்பட்டுள்ளன.

परस्मैपदी ‘भी’ धातुः – लटि क्रियापदानि
प्रथमपुरुषःबिभेतिबिभितः , बिभीतःबिभ्यति
मध्यमपुरुषःबिभेषिबिभिथः , बिभीथःबिभिथ , बिभीथ
उत्तमपुरुषःबिभेमिबिभिवः , बिभीवःबिभिमः , बिभीमः

தலைப்பை ‘க்ளிக்’ செய்து அனைத்து கால மற்றும் நிலைகளில் ‘भी धातुः வடிவங்களைக் காணவும். பயத்தின் காரணம் पञ्चमी विभक्तिः யால் விளக்கப் படுவதை கீழ்க் காணும் உதாஹரணங்கள் தெளிவாக விளக்குகின்றன. ‘तः’ விகுதி சேர்ந்த மாற்று வாக்கியங்களும் தரப்பட்டுள்ளன.

पञ्चमी विभक्तिःतः- योजने
हरिणः व्याघ्रात् बिभेति।
हरिणः कस्मात् बिभेति?
மான் புலியிடத்தில் பயப்படுகிறது.
हरिणः व्याघ्रतः बिभेति।
हरिणः कुतः बिभेति?
व्याघ्रात् – अकारान्तः पुल्लिङ्गः ‘व्याघ्र’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः
जनाः हन्तुः भीतः सन्ति।
जनाः कस्मात् भीतः सन्ति।
மக்கள் கொலைகாரனைக் கண்டு அஞ்சியவர்களாக இருக்கிறார்கள்.
जनाः हन्तृतः भीतः अस्ति।
जनाः कुतः भीतः अस्ति।
हन्तुः – ऋकारान्तः पुल्लिङ्गः ‘हन्तृ' शब्दः – एकवचनम् - पञ्चमी विभक्तिः
सज्जनाः अधर्मात् बिभ्यति।
सज्जनाः कस्मात् बिभ्यति?
நன்மக்கள் அதர்மத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.
सज्जनाः अधर्मतः बिभ्यति।
सज्जनाः कुतः बिभ्यति?
अधर्मात् - अकारान्तः पुल्लिङ्गः ‘अधर्म’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः

रक्षणप्रापणे पञ्चमी विभक्तिः

ஆபத்து அல்லது துரதிர்ஷ்டத்திலிருந்து காக்கப்படும்பொழுது ஆபத்து/துரதிர்ஷ்டத்தைக் குறிக்கும் சொல்லுடன் पञ्चमी विभक्तिः சேர்க்கப்படுகிறது. காக்கும் பொருளில் ‘रक्ष्’ தாது வின் க்ரியா பதம் அமைகிறது. இந்நிலக்குரிய पञ्चमी विभक्तिः மற்றும் ‘तः’ விகுதி உதாஹரணங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன.

पञ्चमी विभक्तिःतः- योजने
छत्रम् अस्मान् आतपात् रक्षति।
छत्रम् अस्मान् कस्मात् रक्षति?
குடை நம்மை வெயிலிலிருந்து காக்கிறது.
छत्रम् अस्मान् आतपतः रक्षति।
छत्रम् अस्मान् कुतः रक्षति?
आतपात् - अकारान्तः पुल्लिङ्गः ‘आतपः’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः
विष्णुः मकरात् गजेन्द्रं अरक्षत्।
विष्णुः कस्मात् गजेन्द्रं अरक्षत्?
விஷ்ணு பகவான் கஜேந்திரனை முதலையிடமிருந்நு காத்தார்.
विष्णुः मकरतः गजेन्द्रं अरक्षत्।
विष्णुः कुतः गजेन्द्रं अरक्षत्?
मकरात् - अकारान्तः पुल्लिङ्गः ‘मकरः’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः
आरक्षकाः चोरेभ्यः जनान् रक्षन्ति।
आरक्षकाः केभ्यः जनान् रक्षन्ति?
காவலர்கள் மக்களை திருடர்களிடமிருந்து காக்கின்றனர்.
आरक्षकाः चोरेभ्यः जनान् रक्षन्ति।
आरक्षकाः कुतः जनान् रक्षन्ति?
चोरेभ्यः - अकारान्तः पुल्लिङ्गः ‘चोरः’ शब्दः – बहुवचनम् – पञ्चमी विभक्तिः

‘बहिः’, ‘आरभ्य’, ‘पूर्वम्’, ‘परः’ – एतैः सह पञ्चमी विभक्तिः

கீழ்க்காணும் அவ்யய பதங்கள் தொடரும்பொழுது पञ्चमी विभक्तिः பயன்படுத்தப்படுகிறது.

बहिः – வெளியே

आरभ्य - தொடங்கி

पूर्वम् – முன்பு

परः – பின்னர்

இவற்றைப் போன்ற வேறு சில அவ்யயங்களுடனும் पञ्चमी विभक्तिः பதங்கள் இணைகின்றன. அவற்றைக் குறித்து தொடரும் படிவில் விரிவாக கற்க இருக்கிறோம். மேற் கூறப்பட்ட அவ்யயங்களைக் கொண்ட உதாஹரண வாக்கியங்களைப் பார்ப்போம்.

पञ्चमी विभक्तिःतः- योजने
गृहात् बहिः वृक्षः अस्ति।
कस्मात् बहिः वृक्षः अस्ति?
வீட்டிற்கு வெளியே மரம் இருக்கிறது.
गृहतः बहिः वृक्षः अस्ति।गृहात् - अकारान्तः पुल्लिङ्गः ‘गृहः’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः
प्रातःकालात् आरभ्य कर्मकराः परिश्रमं कुर्वन्ति।
कस्मात् आरभ्य कर्मकराः परिश्रमं कुर्वन्ति?
வேலைக்காரர்கள் காலையிலிருந்து கடினமாக உழைக்கிறார்கள்.
प्रातःकालतः आरभ्य कर्मकराः परिश्रमं कुर्वन्ति।प्रातःकालात् - अकारान्तः पुल्लिङ्गः ‘काल’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः
संस्कृतकक्षायाः पूर्वं अल्पाकारं अकुर्म।
कस्याः पूर्वं अल्पाहारम् अकुर्म?
ஸம்ஸ்க்ருத வகுப்பிற்கு முன்பு சிற்றுண்டி உண்டோம்.
संस्कृतकक्षातः पूर्वं अल्पाहारम् अकुर्म।
कक्षायाः - आकारान्तः स्त्रीलिङ्गः ‘कक्षा’ शब्दः –एकवचनम् – पञ्चमी विभक्तिः
रविवासरात् परं सोमवासरः अस्ति।
कस्मात् परं सोमवासरः अस्ति।
திங்கள் கிழமை ஞாயிற்று கிழமைக்கு பின் வருகிறது.
रविवासरतः परं सोमवासरः अस्ति।वासरात् - अकारान्तः पुल्लिङ्गः ‘वासर’ शब्दः – एकवचनम् – पञ्चमी विभक्तिः

चतुर्थी विभक्तिः க்காண பயிற்சியில் கூறியதைப் போல், நீங்கள் படிக்கும் வரிகள் அல்லது ஸ்லோகங்களில் पञ्चमी विभक्तिः வடிவங்களை அறிந்துக் கொள்ள முயற்சி செய்யங்கள். தொடரும் படிவுகளில் சிறு பாடங்கள் மற்றும் கதைகளின் உதவியுடன் விபக்திகளின் ப்ரயோகங்களை விரிவாக கற்க இருக்கிறோம். இப்பாடத்துக்குரிய அப்யாஸங்களை செய்வோம். इदानीम् अभ्यासं कुर्म।

பயிற்சிப் பாடம் - अभ्यास-प्रश्नानि

  1. கொடுக்கப்பட்ட ஶப்தத்தின் पञ्चमी विभक्तिः ரூபங்கள் மூன்று வசனத்திலும் எழுதுக. दत्त शब्दस्य पञ्चमीविभक्तिरूपाणि त्रिषु अपि वचनेष् लिखन्तु।

    उदाहरणम्

    वृक्षः – अकारान्तः पुल्लिङ्गशब्दः
    वृक्षात् वृक्षाभ्याम् वृक्षेभ्यः

    1. फलम् – अकारान्तः नपुंसकलिङ्गशब्दः
    2. नौका (Boat) – आकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    3. शक्तिः – इकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    4. त्वम् – दकारान्तः युष्मद्-शब्दः त्रिषु लिङ्गेषु
    5. भवान् – नकारान्तः पुल्लिङ्गशब्दः
    6. गुरुः – उकारान्तः पुल्लिङ्गशब्दः
    7. मुनिः – इकारान्तः पुल्लिङ्गशब्दः
    8. भ्राता – ऋकारान्तः पुल्लिङ्गशब्दः
    9. गौरी – ईकारान्तः स्त्रीलिङ्गशब्दः
    10. अस्थि – इकारान्तः नपुंसकलिङ्गशब्दः (दधिशब्दवत्)

  2. ஸம்ஸ்க்ருதத்தில் மொழி பெயர்க்கவும். दत्तानां वाक्यानां संस्कृत-अनुवादम् कुरुत ।
    1. நான் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருகிறேன். (கிணறு - कूपः)
    2. மன்னர்கள் மக்களை பகைவர்களுதமிருந்து காக்கின்றனர். (மன்னன் – नृपः பகைவன் - शत्रुः)
    3. அவர்கள் கிராமத்திற்கு வெளியே வசிக்கிறார்கள். (வசித்தல் - वस्)
    4. நீ ஆசிரியரிடமிருந்து புத்தகங்களைக் கொண்டு வந்தாய்.
    5. ரமேஶ் பெங்களூரிலிருந்து வந்தான்.
    6. லலிதா பந்தைக் கையிலிருந்து எறிகிறாள். (எறிதல்– क्षिप् பந்து – कन्दुकम् - கை - हस्तः)
    7. கங்கை ஹிமாலயத்திலிருந்து உற்பத்தி ஆகிறது. (உற்பத்தி ஆதல் – उद् + भू)
    8. நான் சாப்பாட்டிற்கு பிறகு பழம் சாப்பிடுகிறேன். (சாப்பாடு - भोजनम्)
    9. இப்பூக்கள் அந்தக் கொடியிலிருந்து விழுகின்றன. (கொடி - लता)
    10. விவசாயி கிராமத்திலிருந்து ஆட்டைக் கூட்டி செல்கிறான்.

  3. கோடிட்ட இடங்களை அடைப்பில் கொடுக்கப்பட்டுள்ள தாதுக்களுக்குரிய पञ्चमी विभक्तिः கொண்டு நிரப்பவும். आवरणे दत्तैः शब्दानां पञ्चमी-पदैः रिक्तस्थानानि पूरयतु।
    1. अङ्कुराः _____ उद्भवन्ति। (बीजानि)
    2. यात्रिकः ______ अवतरति। (नौका)
    3. ______ अश्रूणि स्रवन्ति (नेत्रे)
    4. एषा कथा ______ उद्धृता । (हितोपदेशम्)
    5. शिष्याः _____ जलम् आनयन्ति। (नदी)
    6. क्षीरं _____ प्रवहति। (धेनुः)
    7. यात्रिकः ____ काशीं गच्छति । (हिमगिरिः)
    8. कर्णः _____ कुण्डलानि निष्कास्य दत्तवान् । (कर्णौ)
    9. _____ बहिः मार्गाः सन्ति। (वाटिका)
    10. ______ आरभ्य एव रामः अध्ययनशीलः आसीत्। (बाल्यकालः)
    11. देवः ____ सज्जनान् रक्षति। (दुष्टाः)
    12. मूषकः _____ बिभेति। (बिडालः Cat)
    13. ______ परं वयं मिलन्ति। (वर्षाः)
    14. राजेशः ______ धान्यं स्वीकरोति। (एषः)
    15. सा _______ संस्कृतं ज्ञास्यति। (अहम्)

उत्तराणि पश्यतु! - விடைகளைக் காண!       

இப்பாடத்தைப் பற்றிய உங்கள் அனுபவங்களையும் பரிந்துரைகளையும் எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள். இலவசமாகப் பதிவுச் செய்து உங்கள் கருத்துக்களை Post செய்யவும். சந்தேகங்கள் தெளிவு பெற samskrit@samskritaveethy.com க்கு எழுதுங்கள்.


தமிழில் ஐந்தாம் வேற்றுமையையொட்டி ஸம்ஸ்க்ருதத்தில் पञ्चमीविभकितिः யைப் பற்றி அறிந்தோம். ஸம்பாஷண வீடியோக்களில் मम नाम, तस्य पिता, तव माता போன்ற வாக்கியங்களைக் கேட்டிருக்கிறோம். ஓருவருடன் அல்லது ஒன்றுடன் உள்ள சம்பந்தத்தை குறிக்கும் षष्ठी-विभक्तिः பற்றி தொடரும் பாடத்தில் கற்க இருக்கிறோம். நமது அடுத்த பாடம்....
பாடம் 22: ஸம்ஸ்க்ருத நாம பதங்கள் ஷஷ்டீ விபக்தி - षष्ठी विभक्तिः

click to upload image
0 comments
×

To get updates on
संस्कृतवीथी...